கோதுமை நிறம் பொன்னிறமாக:
வாதுமை பருப்பை ஊறவைத்து, பாலில் சிறிது தேனைக் கலந்து குழப்பி க்ரீம் தயாரித்து அதை முகம், கழுத்து பகுதிகளில் தடவலாம். அரைமணி நேரம் கழித்து கழுவ வேண்டும். தொடர்ந்து சில காலம் செய்து வர கோதுமை நிறம் தங்க நிறமாகும்.
மூட்டுப் பகுதி நிறம் மாற:
சிலருக்கு முழங்கால் முழங்கை பகுதிகளில் கருமையாக இருக்கும். ஒரு முழு எலுமிச்சை சாற்றைத் பிழிந்து அதில் சில துளிகள் பேபி ஆயில் கலந்து மூட்டுப் பகுதிகளில் தடவி வர கருமை மறையும்.
முகம் சிவக்க:
காலையில் கெட்டியான பாலை இரண்டு ஸ்பூன் எடுத்து அதில் சில சொட்டு எலுமிச்சை சாறு விட்டு, அரை டீஸ்பூன சர்க்கரை போட்டு நன்றாகக் குழைத்து கோல்டு க்ரீம் போல் தயாரித்து அதை முகம் முழுவதும் தேய்த்து சுமார் 30 நிமிடங்கள் ஊற வைத்து வெது வெதுப்பான நீரில் குளிக்க வேண்டும். இப்படிச் செய்யும் போது சோப்பைத் தவிர்க்க வேண்டும்.
மூலிகைப் பொடி:
பச்சைப் பயறு - கால் கிலோ
கடலை பருப்பு - 200 கிராம்
பூலாங்கிழங்கு - 250 கிராம்
கஸ்தூரி மஞ்சள் - 100 கிராம்
ஆவாரம் பூ அல்லது ரோஜா இதழ் - 250 கிராம்
மேற் கூறியவற்றைக் காய வைத்து அரைத்து பாட்டிலில் போட்டு வைத்து தினமும் காலை மதியம் மாலை இரவு முகத்தில் தேய்த்து கழுவ நல்ல நிறம் பெறலாம்.
வறண்ட சருமம் பளபளக்க கீழ்க் கண்ட தைலத்தைத் தயாரிக்கலாம்:
முற்றிய தேங்காய்
பால் - 1லிட்டர்
பொன்னாங்கண்ணி கீரைச் சாறு - 1 டம்பளர்
தேவகாந்தம் என்ற செடியின் சாறு - அரை டம்பளர்
தான்றிக்காய்.
விளாமிச்சை வேர் அல்லது வெட்டி வேர் - 50 கிராம்
தான்றிக்காயை பொன்னாங்கண்ணி இலைச் சாறு விட்டு அரைக்கவும். விளாமிச்சை வேரையும் இலைச்சாறு விட்டு அரைக்கவும் அவற்றோடு தேங்காய் பால் மற்ற சாறுகளைக் கலந்து வாயகன்ற பாத்திரத்தில் ஊற்றி அடுப்பை சிறியதாக வைத்துக் காய்ச்சி பிறகு ஆறியதும் குப்பியில் வைத்து முகத்தில் தேய்த்துக் கழுவவும். இப்படித் தொடர்ந்து செய்ய வறண்ட சருமம் பளபளப்பாகும்.
குளியல் பொடி
பாசிப் பயறு - 250 கிராம்
கடலைப்பருப்பு - 250 கிராம்
கார்போக அரிசி - 250 கிராம்
இவற்றை மிஷினில் அரைக்கவும். குளிப்பதற்கு முன் முட்டையின் வெள்ளைக் கருவை நீக்கி அதில் துளி் தேன் கலந்து உடல் முழுவதும் பூசி மேற்கூறிய பொடியால் தேய்த்துக் குளிக்க நல்ல நிறம் பெறலாம்.