Lotus Method
Lotus Method

கடினமான இலக்குகளை எளிதாக்கும் மூளைப் பயிற்சி! 

Published on

வாழ்க்கையில சில விஷயங்கள் ரொம்ப கஷ்டமா இருக்கும்ல? காலையில் சீக்கிரம் எழுந்திருக்கிறதுல இருந்து, உடற்பயிற்சி செய்றது வரைக்கும், சில வேலைகளை செய்யணும்னு நினைச்சாலே மலை மாதிரி இருக்கும். மூளை சொல்லும் "வேணாம், அப்புறம் பாத்துக்கலாம், இது ரொம்ப கஷ்டம்" அப்படின்னு. உங்களுக்கு இப்படி எப்பவாவது தோணுச்சுன்னா, நீங்க மட்டும் தனியா இல்லைங்க. நிறைய பேருக்கு இப்படித்தான் இருக்கு. ஆனா, இந்த கஷ்டமான விஷயங்களை செய்ய வைக்கிறதுக்கு ஒரு சூப்பரான வழி இருக்கு தெரியுமா? அதுக்கு பேர்தான் "Lotus Method". 

லோட்டஸ்னா தாமரைப்பூன்னு உங்க எல்லாருக்கும் தெரியும். தாமரைப்பூ சேத்துல இருந்து அழகா மேல வரும். அது மாதிரிதான் இந்த மெத்தடும். கடினமான வேலைகளை செய்யறதுக்கு மனசு தயாரா இல்லன்னா, முதல்ல சின்ன சின்ன விஷயங்கள்ல இருந்து ஆரம்பிக்கணும். உதாரணத்துக்கு, ஒரு பெரிய வேலைய செய்யணும்னு இருக்குன்னா, அதை சின்ன சின்ன பகுதிகளா பிரிச்சுக்கணும். 

சின்ன சின்ன பகுதிகளா பிரிச்சா அந்த வேலை பெருசா தெரியாது, ஈஸியா இருக்கும். அப்புறம், ஒரு வேலைய ஆரம்பிச்சதும் அதுல மட்டுமே கவனமா இருக்கணும். தாமரைப்பூ தண்ணில எப்படி மிதக்குதோ, அது மாதிரி உங்க மனசையும் ஒருநிலைப்படுத்தி அந்த வேலையில மட்டும் கவனம் செலுத்துங்க. வேற விஷயங்களை பத்தி யோசிக்காம, இப்ப என்ன வேலை செய்றோமோ அதுல மட்டும் முழு கவனத்தோட இருங்க.

அடுத்ததா உங்கள நீங்களே நம்பணும். "என்னால முடியும்" அப்படின்னு மனசுக்குள்ள சொல்லிக்கிட்டே இருக்கணும். தாமரைப்பூ எப்படி சேத்துல இருந்து மேல வருதுன்னு பாருங்க. அது தன்னம்பிக்கையோட தான் மேல வருது. அது மாதிரி நீங்களும் தன்னம்பிக்கையோட ஒவ்வொரு வேலையையும் செய்யணும். சப்போஸ், வேலை செய்யும்போது கஷ்டமா இருந்தா, கொஞ்சம் பிரேக் எடுத்துக்கோங்க. 

இதையும் படியுங்கள்:
உங்களுக்கு நல்ல வேலை கிடைச்சுடுத்தா? நீங்க உடனே செய்ய வேண்டியது இதுதான்...
Lotus Method

ஆனா வேலைய பாதியில விடக்கூடாது. தாமரைப்பூ எப்படி மெதுவா மொட்டு விட்டு அப்புறம் பூவா மாறுதோ, அது மாதிரி பொறுமையா ஒவ்வொரு ஸ்டெப்பா பண்ணுங்க. முக்கியமா, நீங்க செய்ற வேலைய ரசிச்சு பண்ணுங்க. கஷ்டமான வேலைன்னு நினைச்சு ஃபீல் பண்ணாம, இது ஒரு சேலஞ்ச்ன்னு நினைச்சு சந்தோஷமா பண்ணுங்க.

Lotus Method ரொம்ப சிம்பிள் ஆனா ரொம்ப பவர்ஃபுல். கஷ்டமான வேலைகளை ஈஸியா செய்ய இது ரொம்ப உதவும். தாமரைப்பூவோட அழகையும், அதோட உறுதியையும் ஞாபகம் வச்சுக்கோங்க. சின்ன சின்ன ஸ்டெப்ஸா ஆரம்பிச்சு, கவனமா வேலை செஞ்சு, தன்னம்பிக்கையோட பண்ணுங்க. கண்டிப்பா உங்களால எல்லா கஷ்டமான விஷயங்களையும் ஈஸியா பண்ண முடியும். 

logo
Kalki Online
kalkionline.com