
நாட்டில் பலருக்கும் இந்த நரை முடி பிரச்சனை இருக்கும். இதை எப்படி சரி செய்ய வேண்டும் என தெரியாமல், ரசாயனம் கலந்த டையை உபயோகித்து வருவார்கள். இது தற்காலிக தீர்வு அளிக்குமே தவிர நிரந்தர தீர்வு அல்ல. இதனால் மீண்டும் மீண்டும் இந்த கெமிக்கல் டையை பயன்படுத்தும் சூழல் ஏற்பட்டு விடும். டையும் அடிக்காமலேயே செலவில்லாமல் நரை முடியை கருமையாக்க என்ன செய்யலாம் என்று பார்க்கலாம் வாங்க,,
இந்த செயலை நாம் எளிதாக வீட்டிலேயே செய்யமுடியும். அதற்கு வெறும் 3 பொருட்கள் தான் தேவை..
எலுமிச்சை பழம் மற்றும் நெல்லிக்காய் முடிக்கு அதிக சத்துக்களை கொடுக்கும் பழங்கள் என்பது அனைவரும் அறிந்ததே. இதை வைத்தே இயற்கையாக ஒரு பேஸ்ட் செய்து நரை முடியை கருமையாக மாற்றலாம். நெல்லிக்கனியில் நிறைய வைட்டமின் சி இருப்பதால் முடி ஆரோக்கியத்திற்கு உதவும். மேலும் எலுமிச்சை பழமும் முடியின் பளபளப்பு மற்றும் நிறத்தை பராமரிக்க உதவுமாம்.
தேவையான பொருட்கள்:
1. நெல்லிக்காய்
2. எலுமிச்சை பழம்
3. தேங்காய் எண்ணெய்
செய்முறை:
முதலில் 2-3 நெல்லிக்காயை கொட்டையை நீக்கிவிட்டு பேஸ்டாக அரைத்து வைத்து கொள்ளவும். இதில் 1 எலுமிச்சை பழத்தின் சாறும், 2 தேக்கரண்டி தேங்காய் எண்ணெயை சேர்த்து பேஸ்ட் பதத்தில் வைத்து கொள்ள வேண்டும். இந்த கலவையை தலை முடி வேர் முதல் நுனி வரை தேய்க்க வேண்டும். குறைந்தது 1-2 மணி நேரம் வரை அப்படியே அதை ஊறவிடவும். பிறகு சாதாரண நீரில் அதை கழுவவும். ஷாம்பு எதுவும் பயன்படுத்த தேவையில்லை. எலுமிச்சை பழம் இருப்பதால் தலை முடியின் பிசுபிசுப்பு நீங்கிவிடும். இயற்கை பொருட்கள் இருப்பதால் ஷாம்புவின் கெமிக்கலை கலப்பது தேவையில்லை.
வேண்டுமென்றால் இரவு தூங்குவதற்கு முன்பு இந்த கலவையை தேய்த்துவிட்டு மறுநாள் காலையில் குளித்துவிடலாம். இதை தொடர்ச்சியாக ஒரு வாரத்திற்கு செய்து வர இயற்கையாகவே நரை முடி நீங்கி கருமையாக மாறிவிடும். மேலும் முடி உதிர்தல், முடி வளர்ச்சியிலும் மாற்றம் இருக்கும். இதை தொடர்ச்சியாக செய்து வரவே நீங்கள் மாற்றத்தை உணர்வீர்கள்.
நெல்லிக்காய் மற்றும் எலுமிச்சை கலவை கூந்தலுக்கு மிகவும் நன்மை பயக்கும். இது கூந்தலை கருமையாக்குவது மட்டுமல்லாமல், வலுவாகவும் பளபளப்பாகவும் மாற்றுகிறது. இதற்கு எந்த பக்க விளைவுகளும் இல்லை, வீட்டிலேயே எளிதாக தயாரிக்கலாம்