டீன் ஏஜ் பெண்கள் - கல்லூரி மாணவிகள் டெனிம் ஸ்கர்ட்களை ஏன் விரும்புகிறார்கள்?

Why Do Teen Girls - College Students Love Denim Skirts?
Fashion articles
Published on

டீன் ஏஜ் பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகள் டெனிம் ஸ்கர்ட்களை அணிவதை மிகவும் விரும்புகிறார்கள். அதற்கான காரணங்களைப் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

அழகிய தோற்றம்;

டெனிம்  ஸ்கர்ட்கள் பல்வேறு வழிகளில் வடிவமைக்கப் படுகின்றன. அவை வெவ்வேறு நிகழ்வுகளுக்கு ஏற்றதாக இருக்கின்றன. டீன் ஏஜ் பெண்கள் அவற்றை டி-ஷர்ட்டுகள் மட்டும் மற்றும் மற்றும் ஸ்னீக்கர்களுடன் அணிந்து கொள்கிறார்கள். இது அவர்களுக்கு அழகிய தோற்றத்தை அளிக்கிறது. அதனால் அவற்றை விரும்பி அணிகிறார்கள்.

நீடித்து உழைக்கும் தன்மை;

டெனிம் துணி அதனுடைய நீடித்து உழைக்கும் தன்மைக்காக புகழ்பெற்றது. பல முறை துவைத்தாலும், சீக்கிரத்தில் கிழிந்து போகாது. இரண்டு , மூன்று டெனிம் ஸ்கர்ட்களை வைத்திருந்தாலே போதும். சில வருடங்களுக்கு பயன்படுத்தலாம்.

மென்மையும், வசதியும்;

அவற்றை அணிந்திருக்கும்போது சௌகரியமாகவும் வசதியாகவும் இருக்கிறது. அணிவதற்கும் மென்மையாக இருப்பதால் டீனேஜ் பெண்கள் நாள் முழுவதும் நிம்மதியாக உணர்கிறார்கள.

இதையும் படியுங்கள்:
sweeta, styla, smarta ... ட்ரெண்டி லினென் காட்டன்ஸ்!
Why Do Teen Girls - College Students Love Denim Skirts?

பிரபலங்களின் தேர்வு;

 பிரபலமாக இருக்கும் நடிகைகள் மற்றும் மாடல்கள் டெனிம் ஸ்கர்ட்களை அதிகமாக அணிகிறார்கள். அதனால் டீனேஜர்களுக்கும் அவற்றை அணிந்து கொள்ள விருப்பமாக இருக்கிறது. டெனிம் ஸ்கர்ட்களை அணிந்து கொள்ளும் போது தாங்கள் ஃபேஷனபிளாக இருப்பதாக உணர்கிறார்கள்.

மேட்சிங் வசதி;

 டெனிம் ஸ்கர்ட்களை சாதாரண டி - ஷர்ட்டுகள், ஆடம்பரமான பிளவுஸ்கள் அல்லது ஸ்வெட்டர்களுடன் கூட அணிந்து கொள்ளும் போது பொருத்தமாக இருக்கிறது. பல்வேறு நிகழ்வுகளுக்கு ஏற்றதாகவும் இது இருக்கிறது. பள்ளி, கல்லூரி நிகழ்வுகள், விருந்துகள், வெளியூர் பயணங்களுக்கு ஏற்றவாறு இவை இருக்கின்றன.

எவர்கிரீன் ஃபேஷன்;

பிற ஆடைகளைப் போல ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் ஃபேஷனபிளாக  இல்லாமல் ,டெனிம்  ஸ்கர்ட்கள் பல ஆண்டுகளாக ட்ரெண்டில் உள்ளன. நாகரிகமான தோற்றத்தைத் தருவதோடு ட்ரெண்டியாகவும் இருப்பதால் டீனேஜ் பெண்களுக்கு பிடிக்கிறது.

பராமரிப்பது சுலபம்;

டெனிம் ஸ்கர்ட்களை  பராமரிப்பது மிகவும் சுலபமாகும். இவை நீடித்து உழைக்கும். எளிதில் சுருங்கிப் போகாது. குறைந்த பராமரிப்பு போதும். அடிக்கடி அயர்ன் செய்யாமல் இவற்றை அணிந்து கொள்ளலாம். கறைப்பட்டாலும் துவைத்தால் போய்விடும்.

ஸ்டைலிஷ் லுக்;

ஜீன்ஸ் உடன் ஒப்பிடும்போது டெனிம்  ஸ்கர்ட்கள் பார்ப்பதற்கு சாதாரணமாக இருந்தாலும், இவற்றை அறிந்து கொள்ளும்போது ஸ்டைலாக இருப்பதுடன் வசதியாகவும் பெண்ணைத் தன்மை மிக்கதாகவும் இருக்கிறது. அதனால்தான் டீன் ஏஜ் பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகள் அவற்றை விரும்பி அணிகிறார்கள்.

இதையும் படியுங்கள்:
ஆலிவ் ஆயிலின் மாயம்: தலைமுடி பராமரிப்பில் இயற்கையான தீர்வு!
Why Do Teen Girls - College Students Love Denim Skirts?

சுற்றுச்சூழலுக்கு ஏற்றவை;

சுற்றுச்சூழலுக்கும் இந்த டெனிம்  ஸ்கர்ட்கள் பயனுள்ளவையாக இருக்கின்றன. மறுசுழற்சி செய்யப்பட்ட அல்லது ஆர்கானிக் பொருட்களால் தயார் ஆவதால் டெனிம்  ஸ்கர்ட்கள் இளம் பெண்களிடையே ஒரு நல்ல தேர்வாக அமைகிறது.

அனைத்து பருவங்களுக்கும் ஏற்றது;

வெயில், மழை, குளிர், பனி போன்ற எல்லாப் பருவ காலங்களுக்கும் இவை அணிந்துகொள்ள ஏற்றவை. பல்வேறு அடுக்குகள் மற்றும் சிம்பிளான டிசைன்களில் கிடைக்கின்றன. பலவிதமான அலங்காரப் பொருட்களுடன் அணிந்துகொள்ள ஏற்றவை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com