ட்ரயல் ரூமில் ஒளிந்திருக்கும் பகீர் கிருமிகள்... சருமத்தை நாசமாக்கும் இந்த தப்பை இனிமே செய்யவே செய்யாதீங்க!

wash-new-clothes
wash-new-clothes
கிரி கணபதி

வணக்கம், என் பெயர் கிரி கணபதி. என்னைப் பற்றி அறிய ஆர்வம் காட்டியமைக்கு நன்றி! கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக Content Creation துறையில் இருக்கிறேன். Writing, Video Content, Podcast போன்றவற்றில் அனுபவம் உண்டு. உள்ளடக்க ஆராய்ச்சி மற்றும் AI கருவிகளைக் கையாள்வதில் நிபுணத்துவம் பெற்றுள்ளேன். ஆரோக்கியம், மோட்டிவேஷன், டெக்னாலஜி, சுற்றுச்சூழல் பற்றிய கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் அதிகம். டிஜிட்டல் துறையில் சிறந்து விளங்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் இயங்கிக் கொண்டிருக்கும் நான், நிலையான வசீகரிக்கும் உள்ளடக்கங்கள் மூலமாக வாசகர்களையும், பார்வையாளர்களையும் கவர முடியும் என முழுமையாக நம்புகிறேன்.

Updated on

பண்டிகை காலமோ அல்லது பிறந்த நாளோ, புது டிரெஸ் எடுப்பது என்றாலே நமக்கு ஒரு தனி சந்தோஷம் வந்துவிடும். கடையில் இருந்து அந்த பளபளப்பான உடையை வாங்கி வந்தவுடன், எப்படா அதை போட்டு அழகு பார்ப்போம் என்ற ஆர்வம் எல்லோருக்குமே இருக்கும். பலரும் புது துணி பார்ப்பதற்கு சுத்தமாக இருக்கிறது என நினைத்து அதை அப்படியே போட்டுக்கொண்டு வெளியே கிளம்பி விடுவார்கள். 

ஆனால் அந்த புதுத் துணிக்குப் பின்னால் நமது கண்களுக்குத் தெரியாத பல பெரிய ஆபத்துகள் ஒளிந்திருக்கின்றன. எந்த ஒரு துணியையும் துவைக்காமல் அப்படியே பயன்படுத்தினால் நமது உடலுக்கு என்னென்ன பாதிப்புகள் வரும் என்பதை இப்போது பார்ப்போம்.

கெமிக்கல்களின் கூடாரம்!

நாம் கடைகளில் பார்க்கும் ஆடைகள் ஒரே நாளில் அங்கு வந்துவிடவில்லை. ஏதோ ஒரு மூலையில் இருக்கும் தொழிற்சாலையில் தயாராகி, பார்சல் செய்யப்பட்டு பல கைகளைக் கடந்து தான் ஷோரூமிற்கு வருகிறது. இந்த நீண்ட பயணத்தில் துணிகள் சுருங்கிப் போகாமல் இருக்கவும், எலிகள் மற்றும் பூச்சிகள் அண்டாமல் இருக்கவும் அதில் ஃபார்மால்டிஹைட் போன்ற பலவிதமான கெமிக்கல்களை ஸ்ப்ரே செய்கிறார்கள். 

இது துணிக்கு ஒரு புது லுக்கைக் கொடுத்தாலும், நமது சருமத்திற்கு ரொம்பவே ஆபத்தானது. இதைத் துவைக்காமல் அப்படியே போடும்போது சென்சிடிவ் ஆன சருமம் உள்ளவர்களுக்கு கடுமையான அரிப்பு, தடிப்புகள் மற்றும் அலர்ஜி போன்ற பெரிய பிரச்சனைகள் வந்து சேரும்.

ட்ரயல் ரூமில் நடக்கும் விபரீதம்!

நாம் வாங்கும் ஒரு ஆடையை நமக்கு முன்பே பல பேர் ட்ரயல் ரூமில் போட்டுப் பார்த்திருப்பார்கள் என்பதை நாம் மறந்து விடுகிறோம். அப்படிப் பலரும் போட்டுப் பார்க்கும்போது அவர்களின் வியர்வை, பாக்டீரியா மற்றும் கண்ணுக்குத் தெரியாத பூஞ்சை கிருமிகள் அந்தத் துணியில் அப்படியே ஒட்டிக் கொள்ளும். 

அதை நாம் அப்படியே அறியாமல் அணியும்போது மற்றவர்களுக்கு இருந்த ஸ்கின் இன்பெக்‌ஷன் மிக சுலபமாக நமக்கும் தொற்றிக் கொள்ளும். குறிப்பாக உள்ளாடைகள், டீ-ஷர்ட்கள் போன்ற நமது உடலோடு மிகவும் ஒட்டி இருக்கும் ஆடைகளில் இந்த கிருமித் தொற்றின் ஆபத்து பல மடங்கு அதிகமாக இருக்கும்.

இதையும் படியுங்கள்:
வெள்ளை முடியைப் போக்க வீட்டிலேயே தயாரிக்கலாம் இயற்கை சாயம்!
wash-new-clothes

சாயம்!

பொதுவாகவே ஜீன்ஸ், பட்டுப்புடவை மற்றும் அடர் நிறங்களில் உள்ள ஆடைகளை ரொம்பவும் கவர்ச்சியாகக் காட்ட அதில் அதிகப்படியான சாயங்களைச் சேர்ப்பார்கள். இந்த எக்ஸ்ட்ரா சாயங்கள் அப்படியே நமது தோலில் படியும் போது மிகப்பெரிய ஒவ்வாமையை ஏற்படுத்தும். இதைத் தவிர்க்க, புதுத் துணியை அணியும் முன் ஒருமுறை தண்ணீரில் அலசி காய வைப்பது நல்லது. 

அப்படிச் செய்யும்போது அதிலுள்ள தேவையற்ற கெமிக்கல்கள் மற்றும் அதிகப்படியான சாயம் நீங்கி, ஆடை ரொம்பவே மென்மையாக மாறிவிடும். அதேசமயம் புதுத் துணிகளைத் துவைக்கும் போது அதன் லேபிளில் உள்ள தகவல்களைப் படித்து அதன்படி அடர் நிற துணிகளைத் தனியாகத் துவைப்பது துணியின் ஆயுளை அதிகரிக்கும்.

இதையும் படியுங்கள்:
புது ஏர் கூலர் வாங்கும் போது இதெல்லாம் பார்த்து வாங்குங்க ப்ளீஸ்!
wash-new-clothes

புது துணியின் பளபளப்பு குறைந்து விடுமோ என்ற ஒரு சின்ன கவலைக்காக நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் நாமே கெடுத்துக் கொள்ளக் கூடாது. கொஞ்சம் சோம்பேறித்தனம் பார்க்காமல் வாங்கிய துணிகளை ஒரு முறை சுத்தமான தண்ணீரில் ஊற வைத்து காயப்போட்ட பின் உடுத்துவது தான் எல்லா விதத்திலும் பாதுகாப்பானது. 

logo
Kalki Online
kalkionline.com