
1. முகத்தில் பருக்கள் இருந்தால் ஆரஞ்சுப் பழத்தோலின் இரசத்தையும், ஆலிவ் எண்ணெயும் கலந்து முகத்தில் தடவினால் பருக்கள் போய்விடும். இரவில் படுக்கைக்கு போகும்போது இதை தேய்த்து கொள்வது நல்லது.
2. சிலருக்கு முகப்பரு வந்து குணமான பின்பு முகத்தில் கரும்புள்ளிகள் இருக்கும். இவைகளை போக்க தினசரி படிகாரம் கலந்த நீரினால் தங்கள் முகத்தை கழுவி வர வேண்டும். கரும்புள்ளிகள் காணாமல் போய்விடும்.
3. பெண்கள், லிப்ஸ்டிக் போடும்போது, தங்கள் உதடுகளை இறுக மூடிக்கொண்டு லிப்ஸ்டிக் போடக்கூடாது. உதடுகளை கொஞ்சம் திறந்து கொண்டு லிப்ஸ்டிக்கைப் போட வேண்டும். அப்போதுதான் உதடுகள் அழகாக இருக்கும்.
4. வறண்ட தோலை உடைய பெண்கள், பன்னீரினால் தங்கள் உடலைத் துடைத்து விட்டுக் குளிப்பது நல்லது. அடிக்கடி பன்னீரைப் பயன்படுத்தினால் தோலில் உள்ள வறட்சி போய்விடும்.
5. பெண்கள் வெளியே புறப்படும் போதுதான் அவசரம் அவசரமாகத் தங்கள் நகங்களுக்குப் பாலிஷ் போடுகிறார்கள். அவசரமாக போடப்பட்ட பாலிஷ் உடனே காய்வதில்லை. அந்த நேரத்தில் பாலிஷ் சுலபமாக உலர, குழாயைத் திருகி விட்டு விரல்களைத் தண்ணீரில் நீட்டினால் பாலிஷ் உடனே உலர்ந்துவிடும்.
6. பெண்கள் தங்களுடைய கைகளை அழகாக வைத்துக் கொள்ள வேண்டும். கைகள் மிருதுவாக இருக்க வேண்டும். கைகளை அழகாக வைத்திருக்க நினைக்கும் பெண்கள் கைகளை நீட்டி விளையாடும் பயிற்சி களைச் செய்ய வேண்டும். டென்னிஸ் ஆடலாம், நீச்சல் அடிக்கலாம், டேபிள் டென்னிஸ் ஆடலாம். வெயிட் லிப்டிங் செய்யலாம். சதை போட்ட கைகளை உடையப் பெண்கள் தங்கள் கைகளுக்கு ஏதாவது ஒரு பயிற்சியை கொடுக்க வேண்டும்.
7. உடலழகு, இடையழகு, நடை அழகு ஆகிய அழகுகளை கொண்ட பெண்களிடம்தான் கவர்ச்சி இருக்கும். இந்த அழகுகளெல்லாம் வேண்டுமென்றால் களைப்பு ஏற்படும் வரை உழைக்க வேண்டும். களைப்பு தீரும் வரை ஓய்வு எடுக்க வேண்டும்.
8. எப்போதும் கோபத்தோடு இருப்பவர்கள் முகத்திலே விரைவில் சுருக்கங்கள் விழுகின்றன. எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவர்கள் முகத்திலே ஒரு சிறு சுருக்கம் கூட இருக்காது! முகத்திலே சுருக்கம் விழுந்தால் ஆயுள் சுருங்கும்!
9. பெண்கள் குறைந்தது ஒரு மணி நேரமாவது வெளியில் சென்று நல்ல காற்றை சுவாசிக்க வேண்டும். வெளியில் சென்று நடப்பதாலே நல்ல காற்று கிடைக்கிறது. நல்ல காற்றை சுவாசித்தாலே பெண்ணின் தோல் அழகு பெறுகிறது. கண்கள் ஒளி பெறுகின்றன.
10. பெண்கள் சிரிக்கும்போது வாயை திறந்து சிரிக்க கூடாது. புன்னகைதான் புரியவேண்டும். சில வேளைகளில் லேசாகப் பல் தெரியும்படி நாசுக்காக சிரிக்கலாம். அதிகமாக சிரிக்கும்படி நேர்ந்து விட்டால் உடல் கொஞ்சமாக குலுங்கும்படி சிரிக்கலாம். குறும்பு சிரிப்பு பெண்களுக்கு மிக அவசியம். இந்த சிரிப்பில் இருக்கும் கவர்ச்சி வேறு எதிலும் இல்லை பெண்களின் குறும்பு சிரிப்பு ஒரு காந்தம்.