இந்தியாவின் மிகவும் பழமை வாய்ந்த காட்டன் Chintz துணிதான், அன்று ஐரோப்பிய நாடுகளுக்கு மத்தியில் இந்தியாவின் அடையாளமாக விளங்கியது என்றால் நீங்கள் நம்புவீர்களா? ஆம்! இந்த Chintz துணியின் அழகும், கம்பீரமும் பார்ப்பவர் அனைவரையுமே கவர்ந்துவிடும். Chintz துணிகளின் விற்பனையால், ஐரோப்பிய நாடுகள் அனைத்துமே கதிகலங்கி நின்றன. வாருங்கள்! அதற்கான காரணம் மற்றும் Chintz துணியின் வரலாறு ஆகியவற்றைப் பார்ப்போம்.
Global Fashion என்ற வார்த்தையெல்லாம் இப்போது வந்ததுதான். ஆனால் 16ம் நூற்றாண்டிலேயே முதன்முறையாக ஒரு இந்திய துணி, Global Fashion அளவில் ட்ரெண்டிங்கில் இருந்தது. ஆம்! இந்தியர்கள் தங்களது கைகளால் நெய்த ஆடைகளைத் தயாரிப்பதில் மிகவும் கைத்தேர்ந்தவர்கள். அப்போதிலிருந்து இப்போது வரை கைத்தறி ஆடைகள் செய்வதில், இவர்களை மிஞ்ச ஆளே இல்லை என்றுதான் கூற வேண்டும். இந்த அருமை பெருமை எல்லாம் அனைவரும் கேட்டதுதான். ஆனால், Chintz இதற்கான ஆதாரம் என்றுதான் சொல்ல வேண்டும்.
16ம் நூற்றாண்டில் குஜராத் மற்றும் ராஜஸ்தான் பகுதியில் உள்ளவர்கள்தான் இந்த Chintz துணிகளை செய்தனர். அப்போது இது Cheent என்ற ஹிந்தி பெயரில் அவர்களால் அழைக்கப்பட்டது. துணிகளில், கைகளால் ஓவியம் தீட்டி டிசைன் செய்தும், இயற்கையான நிறங்களால் நிறமேற்றவும் செய்தார்கள். துணிகளுக்கு இவர்கள் தேர்ந்தெடுத்த நிறங்கள்தான் மிகவும் பேசப்பட்ட ஒன்றாக இருந்தன. ஆம்! எந்த நிறத்துடன் எந்த நிறம் சேர்த்து வடிவமைப்பைக் கொடுக்க வேண்டும் என்ற நுனுக்கத்தை அறிந்திருந்தவர்கள் இந்தியர்கள். அதேபோல் எத்தனை முறை அதனை துவைத்தாலும் அவ்வளவு எளிதாக சாயம் போகாது.
இப்படி இந்தியர்கள் அழகான ஆடைகளைத் தயாரித்து உள்ளூரிலேயே விற்பனை செய்துக்கொண்டிருக்கும் சமயத்தில்தான், வாஸ்கோடா காமா இந்தியா வந்து சேர்ந்தார். அவரின் இந்த வருகையே இந்தியாவின் Chintz துணியை உலகம் முழுவதும் கொண்டு சென்றது.
Chintz துணிகள் இந்தியாவிலிருந்து ஐரோப்பிய நாடுகள் முழுவதிலும் ஏற்றுமதி செய்யப்பட்டன. அந்த நாடுகளில் வாழும் ராணிகள் முதல் சாதாரண மக்கள் வரை Chintz ஐ விரும்பி அணிய ஆரம்பித்துவிட்டார்கள். இதனால் இந்தியாவிற்கும் நல்ல வருமானம் வர ஆரம்பித்தது.
அப்போதுதான் ஐரோப்பிய நாடுகளில் உள்ளூர் துணிகளின் விற்பனை கணிசமாகக் குறைய ஆரம்பித்தது. அதன்பின்னர் யாருமே உள்ளூர் துணிகளை வாங்கவில்லை, Chintz துணிகளை மட்டுமே வாங்கினார்கள். இதனால் 18ம் நூற்றாண்டில் ஐரோப்பிய நாடுகள் ஒரு பெரிய சர்ச்சையைக் கிளப்பின. அதன் பெயர் Chintz Calico Crisis. அந்த சர்ச்சையின் விளைவாக, Chintz துணிகள் ஐரோப்பிய நாடுகளில் இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கப்பட்டது. உள்ளூர் துணிகளை மட்டுமே விற்க வேண்டும் என்று கட்டளை பிறப்பிக்கப்பட்டது.
ஆனாலும்கூட, சட்டவிரோதமாகவும், இந்தியாவில் கொள்ளையடிக்கப்பட்டும் பல நாடுகளில் Chintz துணிகளின் பயன்பாடு இருந்துதான் வந்தது.
அதன்பிறகு இந்தியாவில் 19ம் நூற்றாண்டுகளில் Chintz துணிகள், இயந்திரம் பயன்பாட்டின் மூலம் உற்பத்தி செய்யப்பட்டன. இதனையடுத்துதான் 1980 மற்றும் 90 களில் Chintz துணி இந்திய மக்கள் பலரால் விரும்பி அணியப்பட்டது.
சமீபத்தில் கூட பாலிவுட் நடிகை சோனம் கபூர் Chintz துணியை அணிந்து Historic moments என்று பதிவிட்டிருந்தது குறிப்பிட வேண்டிய ஒன்று.
Chintz என்று ஐரோப்பிய நாடுகளால் அழைக்கப்பட்ட இந்த துணி மீண்டும் இந்தியர்களின் Cheent ஆக மாறியது.