7 Magic Juice: இளநரையை இயற்கை முறையில் போக்கலாம்!

Ilanarai
Ilanarai

இன்றைய இளைஞர்கள் அதிகம் சந்திக்கும் ஒரு பிரச்சனை என்றால் அது இளநரைதான். அதற்குக் காரணம் நமது உணவு முறையாக இருக்கலாம், காலநிலையாக இருக்கலாம், இல்லை முன்னோர்களின் வழியில் வந்தவையாகக்கூட இருக்கலாம். காரணம் என்னவாக இருந்தாலும் வெள்ளை முடி வேண்டாம் என்று நினைப்பவர்கள் சில ஜூஸ்களை எடுத்துக்கொண்டாலே நரை குறைந்துவிடும்.

கூந்தல் வலுவாக இருக்க சில வைட்டமின்களை எடுத்துக்கொள்வது அவசியம். அந்தவகையில் எந்தெந்த ஜூஸ்களை எடுத்துக்கொண்டால் இளநரை குறைந்து கூந்தல் வலுபெரும் என்பதைப் பார்ப்போம்.

1. கேரட் ஜூஸ்:

கேரட்டில் உள்ள ஏராளமான பீட்டா கரோட்டின் நமது உடலுக்குள் செல்லும்போது வைட்டமின் ஏ வாக மாறுகிறது. இந்த வைட்டமின் ஏ சருமத்தில் எண்ணெய் உற்பத்தியாவதற்கும், உச்சந்தலையின் ஆரோக்கியத்திற்கும், அதேபோல் உடலின் வறட்சியைத் தடுப்பதற்கும் உதவுகிறது. ஆகையால் கேரட் ஜூஸ் குடிப்பதால், நரை குறையும். அதேபோல் நரை வராமல் தடுக்கவும் உதவும்.

2. கீரை:

கீரையில் இரும்புச் சத்து, வைட்டமின் ஏ மற்றும் சி ஆகிய சத்துகள் நிரம்பியுள்ளன. இரும்புச்சத்து இல்லாதவர்களுக்குதான் நரை ஏற்படுகிறதாம். ஆகையால் அவர்கள் கீரை ஜீஸை எடுத்துக்கொண்டால் முடி வளர்ச்சியையும் தூண்டும். ஆகையால் இளநரை உள்ளவர்களுக்குக் கீரை அத்தியாவசியம்.

3. நெல்லிக்காய்:

நெல்லிக்காயில் ஆண்டி ஆக்ஸிடன்ட் மற்றும் வைட்டமின் சி ஆகியவை உள்ளன. ஆகையால் இது முடி ஆரோக்கியத்திற்கும், இளநரை வராமல் தடுப்பதற்கும், இயற்கையான நிறமி செயல்முறைகளை ஆதரிப்பதற்கும் உதவுகிறது.

4. எலுமிச்சை:

இந்த சிட்ரஸ் நிறைந்த எலுமிச்சை பழத்திலும் வைட்டமின் சி அதிகம் உள்ளது. மேலும் இது கொலாஜன் உற்பத்தியை அதிகரித்து தாவர அடிப்படையிலான மூலங்களிலிருந்து இரும்பு உறிஞ்சுதலை ஆதிரித்து முடியை ஆரோக்கியமாக வைத்துக்கொள்கிறது.

5. தேங்காய் தண்ணீர்:

எலக்ட்ரோலைட்களைக் கொண்ட தேங்காய் தண்ணீர் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திலுமே முக்கிய பங்கை வகிக்கிறது. ஆரோக்கியமான முடி, வறட்சி இல்லாமல் இருக்க, நரைப்பதைத் தடுக்க என அனைத்திற்குமே தேங்காய் தண்ணீரை எடுத்துக்கொள்ளலாம்.

6. புதினா ஜூஸ்:

பொதுவாகவே புதினா இலைகள் புத்துணர்ச்சியை ஊட்டும். அதுவும் இதன் சாறில் ஆண்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இந்த ஆண்டி ஆக்ஸ்டன்ட்கள் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை எதிர்த்துப் போராட உதவுகின்றன. ஆகையால் இதுவும் முடி நரைத்தலுக்குத் தொடர்புடையது.

இதையும் படியுங்கள்:
ஆடை மற்றும் அணிகலன்கள் நழுவாமல் ‘நச்’ என்று இருக்க இந்த ஃபேஷன் டேப் பெஸ்ட்!
Ilanarai

7. இஞ்சி ஜூஸ்:

இஞ்சியில் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் நிறைந்துள்ளன. அவை உச்சந்தலையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி முடி ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது.

இந்த ஜூஸ்களில் உங்களுக்கு ஏற்ற ஜூஸை வழக்கமாக எடுத்து வந்தால் முடி நரைப்பதைத் தடுக்கலாம். இல்லையெனில் அவ்வப்போது மாற்றி மாற்றி வெவ்வேறு ஜூஸ்களையும் குடித்து வரலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com