
மணிக்கட்டுகள் பற்றி அவ்வளவாக நாம் அறிந்திருக்க வில்லை. என்றாலும், நன்றாக ஜாதகம் தெரிந்தவர்கள் மணிக்கட்டில் இருக்கும் ரேகைகளை பார்த்து பலன் கூறுவது உண்டு. ஆனால் அதை நாம் நம்பமாட்டோம். ஆனால் அதே விஷயத்தை லட்சண சாஸ்திரம் கூறும் போது நாம் நம் மணிக்கட்டை ஒரு முறை பார்த்துக் கொள்வது உண்டு. அப்படி மணிக்கட்டுகள் சொல்லும் சாஸ்திர குறிப்புகளைப் பற்றி இப்பதிவில் காண்போம்.
சிலருக்கு மணிக்கட்டை பார்த்தால் மணிக்கட்டுகள் முழுமையான மூன்று ரேகைகளுடன் இருக்கும். இதுபோன்ற அமைப்பை உடையவர்கள் திருமகளின் திருவருளைப் பெற்று செல்வ வசதிகளுடன் சிறப்பாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ்வார்கள் என்கிறது லட்சண சாஸ்திரம். எலும்புகள் மறைந்தும் ,நெருங்கிய இணைப்பு மூட்டுகளுடனும் இருப்பவர்கள் திட சித்தர்கள் ஆகவும் ,ஆட்சி பொறுப்பிலோ, நிர்வாக துறையிலோ மேன்மையுடனும் விளங்குவார்கள் என்கிறது லட்சண ஜாதக அமைப்பு.
மணிக்கட்டில் இரண்டு ரேகைகள் அமைய பெற்றவர்கள் மணவாழ்க்கையில் மகிழ்ச்சி உடையவர்களாகவும், பலராலும் மதிக்கப்படும் மரியாதை உடையவர்களாகவும் திகழ்வார்களாம்.
நான்கு ரேகைகள் அமைய பெற்றவர்களுக்கு நிலங்களும், வீடுகளும், வாகன வசதிகளும் வாழ்க்கையின் பல திசைகளிலும் அமைந்திருக்கும் என்பதாக கூறப்பட்டுள்ளது. மேலும் இப்படிப்பட்டவர்களுக்கு அரசியல் செல்வாக்கும், வணிகத் துறையில் ஆதாயமும் கிடைக்குமாம்.
மணிக்கட்டு ரேகைகளுக்கு கங்கண ரேகைகள் என்று பெயர். இந்த ரேகைகள் சிறப்பாக அமைய பெற்றவர்களின் மணவாழ்க்கையும், தாம்பத்தியமும் ஒற்றுமையாகவும், இன்பம் தருவதாகவும் அமைந்திருக்கும் என்கிறது மணிக்கட்டு பற்றிய சாதக அமைப்பு.
மணிக்கட்டுகள் தசைக்குள் மறைந்து கெட்டியாகவும், இரண்டு கைகளிலும் வித்தியாசம் இல்லாமல் சமமாகவும் அமைந்திருப்பவர்களை பார்த்திருக்கிறோம். அதை சிலர் வியந்து கூறுவதும் உண்டு. அப்படிப்பட்டவர்கள் நில புலன்களுக்கு அதிபதியாகவும், தெய்வ பக்தி மிக்கவர்களாகவும் இருப்பார்களாம். இவ்வாறாக மணிக்கட்டுகள் பற்றிய லட்சண அமைப்பு அழகுபட கூறுகின்றது.