"வண்ணான் கணக்கு" அப்படின்னா என்ன தெரியுமா?

வண்ணான்...
வண்ணான்...Image credit - ta.wiktionary.or
Published on

வாஷிங் மெஷின் வருகைக்கு முன் எல்லா வீட்டிற்கும் மாதமொரு முறையோ, இருமுறையோ வண்ணான் வருவதுண்டு. பெட்ஷீட், தலையணை உறையுடன் வீட்டிலுள்ளவர்களின் ஆடைகள் போன்ற, அழுக்கு துணிகளை, ஆற்றில் துவைத்து, அங்கேயே காயவைத்து, அயர்ன் பண்ணி எடுத்து வரும் பணி அவருக்கு. அப்பல்லாம் வண்ணான் டைரி இல்லாத வீடுகளே கிடையாது எனலாம். அதில் உடைகளின் கணக்குடன் எக்ஸ்ட்ராவாக, காபிபொடி கடன் கொடுத்தது முதல் எதிர்வீட்டு பார்வதி அக்காவின் டெலிவரி டேட் வரை குறிப்பதுண்டு.

வெளுத்து வந்த துணிகளை சரி பார்த்து, கூட்டி கூலி கொடுப்பது சவாலான விஷயம். டைரியில் கூட்டும்போது, நமக்கு ஓர் எண்ணிக்கை வரும். அவர் துணிகளை எண்ணும்போது வேறு மாதிரி வரும். ஒரே மாதிரி வரும் வரை, பொறுமையாக மீண்டும், மீண்டும்  எண்ண வேண்டும். 

பின், அழுக்கு கூடையில் உள்ள துணிகளை எடுத்து பிரித்துச்சொல்ல, குறிக்க வேண்டும். "வண்ணான் வந்தானா, நேரம் சரியாப் போச்சுன்னு" அம்மாக்கள் அலுத்துக் கொள்வது இப்போ இல்லை. வாஷிங் மெஷினிலேயே, எல்லாவற்றையும் துவைத்து விடுவதால், வண்ணான் எல்லோரும் அயர்ன் மட்டுமே பண்ணுகிறார்கள்.

புடவையை பத்து பைசாவிற்கு, துவைத்து, அயர்ன் பண்ணி வாங்கிய காலம் போய், இன்று அயர்ன் பண்ண மட்டுமே முப்பது ரூபாய் கொடுக்கிறோம். அன்று, உருப்படிக்கு இரண்டு பைசா கூட்ட சொல்லி வண்ணான் கெஞ்ச, இலேசில் அப்பா கூட்டித் தர மாட்டார்கள்.

இதையும் படியுங்கள்:
எல்லா பிரச்னைகளையும் தீர்க்கும் வல்லமை நமக்கு உண்டு!
வண்ணான்...

இன்று, எவ்வளவு கேட்டாலும், மறுபேச்சின்றி அயர்ன் மட்டும்  பண்ணக் கொடுத்து விடுகிறோம்.  அன்று வெள்ளாவி வாசம் வீசும் வெளுத்த துணிகளை அணிந்தபோது, எந்த இன்பெக்சனும் வரலை அன்று என்பதையும் மறுக்க முடியாது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com