
உங்கள் குழந்தைகள் புறா, காக்கை, கோழி போன்ற பறவைகளைக் காண விரும்பினால் உடனே அவர்களை தெருப்பக்கம் கூட்டிச் சென்று காட்டி விடலாம். ஆனால், அவர்கள் மயிலைப் பார்க்க ஆசைப்பட்டால் மிருகக்காட்சி சாலைக்கு அழைத்துச் சென்று காட்டிவிடலாம். ஆனால், அது தோகை விரித்து நடனம் ஆடும் காட்சியை நாம் நினைத்தபோது காண முடியாது. பருவக்காற்று வீசும் மழைக்காலங்களில் மயில்களை அவை வாழும் இடங்களுக்கு சென்று, மயில் நடனத்தைக் கண்டு களிக்க இந்தியாவில் 10 இடங்ககள் உள்ளன. அவை எங்குள்ளன என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.
1. சரிஸ்கா டைகர் ரிசர்வ்: இது ராஜஸ்தானில் உள்ள நேஷனல் பார்க். பசுமையான சுற்றுச்சூழல் கொண்ட இந்த இடம் வனவிலங்குகள் அதிகம் வாழுமிடம். மயில்களின் சொர்க்கம் என்று கூறும் அளவுக்கு இங்கே மயில்களின் எண்ணிக்கை அதிகம். மழை நேரங்களில் இங்கு சென்றால் சர்வ சாதாரணமாக மயில் தோகை விரித்து ஆடும் அழகைக் கண்டு களிக்கலாம்.
2. மொராச்சி சின் சோளி: மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் புனே அருகில் உள்ளது இந்த இடம். 'பீகாக் வில்லேஜ்' எனவும் அழைக்கப்படும் இடம் இது. இவ்விடத்தில் மயில்களின் எண்ணிக்கை மிக அதிகம். அதிகாலை அல்லது சூரிய அஸ்தமன நேரத்தில் இங்கு சென்றால் அவை வாழுமிடத்திலேயே நடனமாடும் அழகைக் காணலாம்.
3. ரன்தம்போர் நேஷனல் பார்க்: ராஜஸ்தானில் உள்ள இந்தப் பார்க்கில் டைகர்களுக்கு அடுத்ததாக மயிலினம் அதிகம். அடர்த்தியான காடுகள் மற்றும் சிதைந்து போன பழங்காலக் கோட்டைகளின் பின்னணியில், வானவில்லின் வர்ணஜாலம் கொண்ட தன் அழகிய தோகையை விரித்து அடிக்கடி மயில் நடனம் ஆடுவதைக் காணக் கண் கோடி வேண்டும்.
4. கெலாடியோ நேஷனல் பார்க்: ராஜஸ்தானின் பரத்பூரில் உள்ள பறவைகள் சரணாலயம் இது. இடம் பெயர்ந்து வரும் பறவைக் கூட்டத்துடன் மயில்களும் சேர்ந்து வாழ்கின்றன. குளிர் காலங்களில் மயில் நடனமாடுவது ஒரு சாதாரணக் காட்சி இங்கே.
5. ஜிம் கார்பெட் நேஷனல் பார்க்: உத்தர்காண்டில் உள்ள மிகப் பழைமையான பார்க் இது. திறந்த புல்வெளி நிறைந்த வனத்தின் உள்ளே மெதுவாக காரை ஓட்டிக் கொண்டு சென்றால் மயில்கள் நடனமாடுவதைப் பார்த்து ரசிக்கலாம்.
6. கன்ஹா நேஷனல் பார்க்: மத்தியப் பிரதேசத்தில் உள்ளது. 'ஜங்கிள் புக்' படமெடுக்க தூண்டு கோலாயிருந்த இடம். குளிர் காலங்களில், அடர்ந்த காடுகளுக்கிடையே ஆண் மயில் கூட்டம் 'பீ ஹென்'களைக் கவர வித விதமான அசைவுகளில் நடனமாடுவது பார்க்க அழகாயிருக்கும்.
7. பன்னர்கட்டா நேஷனல் பார்க்: கர்நாடகா மாநிலத்தில் பெங்களூருவுக்கு வெளிப்புறம் அமைந்துள்ளது. வார இறுதி நாளை கழிக்க சிறந்த இடம். அதிகாலை சஃபாரி சென்றால் மயில் நடனம் பார்க்கலாம்.
8. பரத்பூர் பறவைகள் சரணாலயம்: இந்தியாவின் மிக முக்கிய சரணாலயங்களில் ஒன்று. இங்கே குளிர் காலங்களில் ஆயிரக்கணக்கில் மயில்கள் வருகின்றன. அவை மனங்கவரும் நடனத்தை பார்த்து ரசிக்கவே அங்கு சென்று வரலாம்.
9. கிர் நேஷனல் பார்க்: குஜராத்தில் உள்ளது. சிங்கக் கூட்டம் நிறைந்த இக்காட்டில் மயில் கூட்டமும் அதிகம். குளிர் காலங்களில் ஆண் மயில் கூட்டத்தின் கோர்ட்ஷிப் நடனம் பிரபலமானது.
10. பந்திப்பூர் நேஷனல் பார்க்: கர்நாடகா மாநிலத்தில் மேற்கு மலைத் தொடரின் அருகே அமைந்துள்ளது. இங்குள்ள அமைதியான சூழலும் அடர்ந்த காடுகளும் மயில்கள் வாழத் தகுதியான இடமாக உள்ளது. பனி சூழ்ந்த மான்சூன் காலம் இங்கு சென்று மயில்களின் நடனம் காண ஏற்ற நேரம்.