
பறவைகள் மட்டும் வண்ணமயமாகக் காட்சி தருவதில்லை, சில வகை பல்லி உயிரினங்களும் பெயிண்ட் அடித்தது போன்று வண்ணமயமாகக் காட்சி தருகின்றன. அப்படிப்பட்ட பத்து பல்லி வகைகள் குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்
Leopard geckos: ஆசியாவில் காணப்படும் இந்த பல்லிக்கு மஞ்சள் நிறம் அல்லது வெள்ளை உடலில் கருப்புப் புள்ளிகள் ஓடு காணப்படும். இவை பெரும்பாலும் இரவிலேயே காணப்படும். இதன் உடல் நிறம் எதிரிகளிடமிருந்து காக்கவும் பயன்படுகிறது.
Neon day gecko: இதன் உடல் பச்சை நிறத்தில் சிவப்பு புள்ளிகளுடன் காணப்படும். மொரீஷியஸ் தீவில் காணப்படும். இதன் பச்சை நிறம் இலையோடு இலையாக இருப்பதால் எதிரிகளிடமிருந்து தன்னைக் காத்துக்கொள்ளும்.
flat headed agana: இதை ‘ஸ்பைடர் மான் அடகாமா’ என்றும் கூறுவதுண்டு. சிவப்பான தலையும் உடல் நல்ல நீல நிறத்திலும் இருக்கும். ஈ.கென்யா, ருவாண்டா, டான்சேனியா போன்ற இடங்களில் இதைக் காணலாம். ஆண் இனம் இந்த நிறங்களோடு இனப்பெருக்கத்தின்போது காணப்படும்.
Today gecko: நீலம் மற்றும் க்ரே நிற உடலில் ஆரஞ்சு புள்ளிகளுடன் இவற்றைக் காணலாம். இது மிகவும் பெரிதாக ஒலி எழுப்பும். காட்டில் இரவில் இக்குரலைக் கேட்கலாம்.
Rainbow agama: இதன் பெயருக்கு ஏற்றாற்போல் ஆரஞ்சு, சிவப்பு, நீல நிறங்களில் இருக்கும். சோர்வாக இருக்கும்போது இதன் நிறம் மங்கும்.
Green igauna: இந்த வகை பல்லிகளை மரங்களில் பார்க்கலாம். பச்சை நிறத்தில் ஆங்காங்கே ஆரஞ்சு திட்டுக்களுடன் காணப்படும். மத்திய மற்றும் தென் அமெரிக்காவில் இது காணப்படுகிறது.
Collared lizard: இந்த பல்லி இனம் நெக்லஸ் அணிந்தது போல் காணப்படும். மஞ்சள் நிற தலையும், பச்சை நிற வாலும் உள்ளது. வட அமெரிக்காவில் இந்த பல்லிகளைக் காணலாம்.
Blue created gecko: இந்த வகை பல்லியின் பின்பகுதி ஊதா நிறத்தில் இருக்கும். இது தாய்லாந்து, வியட்நாம் போன்ற இடங்களில் காணப்படுகிறது. இதன் மூட் மற்றும் வெப்பநிலைக்கு தகுந்தாற்போல் இதன் நிறம் மாறும்.
Fiji banded igauna: ஃபிஜிவில் மட்டுமே காணப்படும் இந்த இனத்தின் உடல் நீல நிறத்திலும் மற்றும் வெள்ளை கோடுகளுடன் காணப்படும். இந்த வகை பல்லி இனம் அழிந்து வருவது குறிப்பிடத்தக்கது.
Jewled lacerta: இந்த வகை பல்லி எமரால்டு பச்சை நிற உடல் கொண்டது. அதில் நீல நிற புள்ளிகள் காணப்படும். இது ஐரோப்பாவில் காணப்படும். பெரிய உடல் கொண்டதாகும். இவற்றைக் பெரும்பாலும் காடுகளில் காணலாம்.