2023ல் உலகை அச்சுறுத்திய இயற்கை பேரிடர்கள்!

2023ல் உலகை அச்சுறுத்திய இயற்கை பேரிடர்கள்!
2023 Highlights strip-1
2023 Highlights strip-1

1. வரலாறு காணாத உச்சம் தொட்ட வெப்பம்!

மாதிரி படம்
மாதிரி படம்

ந்த வருடம் உலகத்தின் வெப்பநிலை 1.46 டிகிரி செல்சியஸ் என்று வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது. 2015ஆம் ஆண்டு நடந்த பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில், உலக வெப்ப நிலை உயர்வை 2 டிகிரி செல்ஷியஸூக்கு மிகாமல் கட்டுப்படுத்த வேண்டும் என்று உலக நாடுகள் முடிவெடுத்தன. இதனால் உலகில் பல இடங்களில் வெப்பநிலை மாற்றம், காட்டுத் தீ, வறட்சி, அதீத வெள்ளம் ஆகியவை நடந்தேறின.

அதேபோல், காற்றாலை மற்றும் சூரிய சக்தி ஆகியவற்றில், முதலீடுகள் அதிகரித்து உள்ளன. கரியமில வாயுவை குறைப்பதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. துபாயில் நடந்த சுற்றுச்சூழல் மகாநாட்டில் முதல் முறையாக புதைபடிவ எரி பொருள் குறைப்பதற்கான முயற்சி செய்ய வேண்டும் என்பது ஒத்துக்கொள்ளப்பட்டது.

2. எல்லாவற்றும் பதில் அளிக்கும் ChatGPT!

New feature in ChatGPT
New feature in ChatGPT

ChatGPT என்ற செயற்கை நுண்ணறிவிற்கான மென்பொருள் மார்ச் 14இல் வெளியிடப்பட்டது. இந்த செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் கதை, கட்டுரைகள் போன்றவற்றை எழுத முடியும். இந்த நுண்ணறிவு பரவலான பாராட்டைப் பெற்றாலும், இது மனித குலத்திற்கு உதவுமா அல்லது ஆட்டிப் படைக்குமா என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எலான் மஸ்க், ஸ்டீவ் வோஸ்னியாக் போன்ற வல்லுநர்கள் “இது மனித குலத்திற்கும், சமூகத்திற்கும் பெரிய ஆபத்தை விளைவிக்கும்” என்று எச்சரிக்கை செய்துள்ளார்கள்.

3. இயற்கை பேரிடர்:

hp

லகின் பல நாடுகளிலும் நடந்த நிலநடுக்கம், காட்டுத்தீ, வெள்ள அபாயம் ஆகியவை பருவநிலை பாதிப்பினால் ஏற்படுகிறதா என்கிற அச்சத்தை தோற்றுவித்துள்ளது. இந்த வருடம் உலகம் முழுவதும் 53 ஆயிரத்தி 685 என்ற எண்ணிக்கையில் பல பகுதிகளில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது.இதனால், 2.61 மில்லியன் ஏக்கர் நிலங்கள் தீக்கிரையாகின. காட்டு தீயின் காரணமாக 2,100 மெகாடன் கரியமிலவாயு வெளியேறியது. பல நாடுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டன. செப்டம்பரில் லிப்யாவில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் 4000 பேர் உயிரிழந்தனர். 10000 நபர்களைக் காணவில்லை.

இதையும் படியுங்கள்:
2023ல் உலகளவில் அதிக பாக்ஸ் ஆபிஸ் வசூல் செய்த டாப் 10 இந்திய படங்கள்!
2023ல் உலகை அச்சுறுத்திய இயற்கை பேரிடர்கள்!

4. துருக்கி,சிரியா நிலநடுக்கம்!

www.aljazeera.com

பிப்ரவரி 6ஆம் தேதி 7.7 அளவிளான நிலநடுக்கம் துருக்கி மற்றும் சிரியாவைத் தாக்கியது. துருக்கியில் 59000 நபர்களும். சிரியாவில் 8000 பேரும் இடிபாடுகளில் சிக்கி இறந்ததாகக் கூறப்படுகிறது. ஆயிரத்திற்கும் அதிகமான கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. மொராக்கோ நாட்டின் அட்லாஸ் மலைப் பகுதியில், செப்டம்பர் 8ஆம் தேதி 6.8 அளவிளான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் ஆயிரக்கணக்கானவர் உயிரிழந்ததுடன், பெருத்த சேதமுமேற்பட்டது.

5. நேபாள நிலநடுக்கம்!

வம்பர் 3ஆம் தேதி மேற்கு நேபாளத்தில், தலைநகர் காட்மண்டுவிலிருந்து சுமார் 500 கி.மீ தொலைவிலுள்ள ராமிடாண்டாவை மையமாகக் கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டது. 6.4 ரிக்டர் அளவில், இரவு 11.47 மணிக்கு ஏற்பட்ட நில நடுக்கத்தில் 150 மக்களுக்கு மேல் கொல்லப்பட்டனர். நூற்றுக் கணக்கானவர்கள் காயமடைந்தனர். பொருட் சேதமும் அதிகம். டிசம்பர் 18 நள்ளிரவில் 6.2 அளவிளான நிலநடுக்கம், சீனாவின் ஜிஷிஷான் நகரைத் தாக்கியது. இதில்,151 நபர்கள் உயிரிழந்தனர், 982 நபர்கள் காயமடைந்தனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com