
டெல்லி என்றவுடன் இந்தியாவில் தலைநகர் என்பதைவிட காற்று மாசு என்பதுதான் அனைவரின் நினைவுக்கும் வரும். ஆனால் ஒரு சில நாடுகள் தங்கள் நாட்டில் காற்றை சுத்தமாகவும் சுவாசிக்கக் கூடியதாகவும் வைத்துள்ளன. அந்த வகையில் காற்று மாசுபாடு இல்லாமல் சுத்தமான காற்றை சுவாசிக்கும் 5 நாடுகள் குறித்து உட்பகுதியில் காப்போம்.
1.ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி மற்றும் மெல்போர்ன் நகரங்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்த பொது போக்குவரத்திற்கு பெரிய அளவில் செலவுகளை செய்துள்ளன. இதன் காரணமாக இங்குள்ள மக்கள் தூய காற்றையும் ஆழமான நீல வானத்தையும் அருமையாக சுவாசித்து ரசிக்கின்றனர். மேலும் ஆஸ்திரேலியாவில் தொழில்துறை மாசுபாடை கட்டுப்படுத்தும் கடுமையான சுற்றுச்சூழல் சட்டங்கள் உள்ளன. அதோடு காற்று மாசுபாட்டின் குறிப்பிடத்தக்க ஆதாரமாக இருக்கும் காட்டுத்தீயை தீவிரமாக கட்டுப்படுத்துவதில் முனைப்போடு செயல்படுகிறது.
2.நியூசிலாந்து
இந்தியர்களின் விருப்ப நாடான நியூசிலாந்து சுத்தமான நிலப்பரப்புகளை கொண்டுள்ளது. பாரம்பரிய நிலைத்தன்மைக்கு நியூசிலாந்து முன்னுரிமை அளிப்பதை அதன் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி விதிமுறைகளில் காணலாம். கடுமையான ஆட்டோமொபைல் உமிழ்வு விதிமுறைகள், புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான உந்துதல் மற்றும் நிலையான விவசாய முறைகள் ஆகியவை காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்துகின்றன.
3.பஹாமாஸ்
அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள பஹாமாஸ் தீவு அழகிய நீலப் பெருங்கடல்கள் மற்றும் வெள்ளை மணல் கடற்கரைகளை கொண்டுள்ளதால் இங்கு, இயற்கையாகவே நல்ல காற்றின் தரம் உள்ளது, ஏனெனில் இந்த நாட்டு அரசாங்கம் உற்பத்தியை விட சுற்றுலாவை சார்ந்திருப்பதால் அவர்களின் கடலோர மற்றும் கடல் சூழலை தீவிரமாக பாதுகாப்பதோடு, எந்த கனரக வணிகங்களும் இல்லை.
4.பார்படாஸ்
மேற்கிந்திய தீவுகளில் இருக்கும் பார்படாஸ் தீவு புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில், குறிப்பாக சூரிய மின்சாரத்தில் பெரிய முதலீடுகளைச் செய்து கடுமையான காற்று மாசுபாடு சட்டத்தை அமல்படுத்தியுள்ளது. மேலும் வளரும் நாடுகளைப் போலல்லாமல்,கார்பன் உமிழ்வை ஒழுங்கு படுத்தியுள்ளதால், உலகின் சிறந்த காற்றைக் கொண்ட ஒரு சிறிய தீவாக சிறந்து விளங்குகிறது.
5.எஸ்டோனியா
வட ஐரோப்பிய நாடான எஸ்டோனியா அதிநவீன ஏஐ கண்காணிப்பு அமைப்புகளுடன் காற்று மாசுபாடை கண்காணிக்கிறது. நாட்டின் பாதிக்கும் மேற்பட்ட பகுதிகள் காடுகளால் சூழப்பட்டுள்ளதால் அவை இயற்கையாகவே காற்றை சுத்திகரிக்கின்றன. கடுமையான மாசு வரம்புகள் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் குறிப்பிடத்தக்க முதலீடு காரணமாக எஸ்டோனியா சுத்தமான காற்று திட்டங்களில் முன்னணியில் உள்ளது.
மேற்கூறிய ஐந்து நாடுகளும் சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி மனிதர்கள் சுவாசிக்க தூய காற்றை வழங்கும் நாடுகளாக இருக்கின்றன.