இந்தியாவில் உள்ள 5 பிரபலமான வனவிலங்கு காப்பகங்கள்..!

5 famous wildlife sanctuaries in India..!
Payanam articles
Published on

மிழ்நாட்டில் முக்கியமான பாதுகாக்கப்பட்ட இடங்கள்.

1. உயிர் கோள காப்பகங்கள். 2 தேசிய பூங்காக்கள். 3. வன உயிரின உறைவிடம். 4. யானை காப்பகங்கள். 5 புலிகள் காப்பகங்கள். 6. பறவைகள் காப்பகங்கள்.

இந்த அனைத்து பாதுகாக்கப்பட்ட இடங்களிலும் மிகவும் அழிவுறும் அச்சத்திற்கு உள்ளாகி இருக்கும் வனவிலங்குகள் வாழ்கின்றன. இந்தியாவில் சுமார் 553 வனவிலங்கு சரணாலயங்கள் உள்ளன.

இதில் முக்கியமான 5 சரணாலயங்கள் எது என்று தெரியுமா?

உத்திர காண்ட், கார்பெட் தேசிய பூங்கா

கார்பெட் தேசிய பூங்கா இந்தியாவின் பழமையான தேசிய பூங்காக்களில் ஒன்றாகும். இது முதல் 10 தேசிய பூங்காக்களில் சிறந்தது. இது 1936-ல் வங்காளப் புலிகளைப் பாதுகாக்கும் வகையில் இளைய தலைமுறையினருக்கு வனவிலங்கு பற்றிய கதைகளைச் சொல்லி வந்த பிரபல வனவிலங்கு காதலர் ஜிம் கார்பெட்டின் நினைவாக இந்த பூங்காவிற்கு அவர் பெயரைச் சூட்டினார்கள்.

இதன் அழகு வனப்பகுதிக்கு பிரபலமானதால் அதிக சுற்றுலா பயணிகைளை ஈர்க்கிறது. புலிகளைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்தும், கல்வி கற்பிக்கவும் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் உதவுகிறது.

ராஜஸ்தான், ரந்தம்பூர் தேசிய பூங்கா

ராஜஸ்தானின் பாலைவனங்களில் அமைந்துள்ள இந்த பூங்கா இந்தியாவின் அரசதேசிய பூங்கா என்று அழைக்கப்படுகிறது. இந்த வனவிலங்கு சரணாலயத்தின் முக்கிய பெருமை இதன் கம்பீரமான புலிகள். இந்த பூங்கா சம்பல் நதியால் சூழப்பட்டுள்ளது. இந்தப் பூங்காவில் சிறுத்தைகள், காட்டு பன்றிகள், மற்றும் கழுதைப்புலிகளையும் நாம் காணலாம். புலி சஃபாரிகள் இந்த தேசிய பூங்காவின் முக்கியமான அம்சங்கள்.

கேரளா, பெரியார் வனவிலங்கு சரணாலயம்

பெரியார் வன விலங்கு சரணாலயம் கேரளாவின் ஏலக்காய் மலைகளுக்கு மத்தியில் அமைந்துள்ளது. இதன் பெயர் குறிப்பிடுவதுபோல பெரியார் நதியால் சூழப்பட்டுள்ளது. இந்த நதி அருகில் உள்ள உள்ளூர் கிராமங்களுக்கு நீர் ஆதாரமாக உள்ளது. இந்த வனவிலங்கு சரணாலயம் புலிகள் மற்றும் யானை சரணாலயங்களுக்கு பெயர் பெற்றது.

மேற்கு வங்காளம், சுந்தரவனதேசிய பூங்கா

சுந்தரவன தேசிய பூங்கா மிகப்பெரிய சதுப்புநில காடுகளுக்கும் ஒட்டுமொத்தமாக பெரிய பரப்பளவிற்கும் பெயர் பெற்றது. இந்த காடுகள் இந்தியா மற்றும் வங்காளதேச எல்லைக்கு இடையில் உள்ளன. இது வங்காள விரிகுடாவின் பகுதியை உள்ளடக்கியது. ஒன்றொன்று இணைக்கப்பட்ட நீர் வழி மலை அமைப்பின் இருப்புக்கு இந்த வனவிலங்கு சரணாலயமும் ஒன்று. ஒவ்வொரு பகுதியையும் பார்வையிடலாம் இந்த பூங்காவில் காணப்படும் முக்கிய விலங்குகள் முதலைகள் மற்றும் பாம்புகள்.

அசாம், காசிரங்கா தேசிய பூங்கா

காசிரங்கா தேசிய பூங்கா அதன் உயரமான யானை புல் வெளிகளுக்கு பிரபலமானது. இந்த வகை புல் 15 அடிவரை வளரும். மேலும் இந்த பூங்கா பிரபலமாக இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம். இந்த பூங்காவில் உள்ள யானை சபாரிகள் ஒவ்வொரு ஆண்டும் பல பார்வையாளர் களையும், சுற்றுலா வருபவர்கைளையும் ஈர்க்கின்றன.

இதையும் படியுங்கள்:
மகிழ்ச்சியான பாதுகாப்பான பயணத்திற்கு காரில் வைக்க வேண்டிய 6 பொருட்கள்!
5 famous wildlife sanctuaries in India..!

காசிரங்கா தேசிய பூங்கா இப்போது யுனெஷ்காவின் உலக பாரம்பரிய தளமாகும். மேலும் உலகிலேயே மிகப்பெரிய காண்டாமிருகம் எண்ணிக்கையை அதிகமாக கொண்டு உள்ளது இந்த பூங்கா.

நாட்டின்நிலையான வளர்ச்சிக்கு வனவிலங்கு சரணாலயங்கள் மிகவும் முக்கியமானவை. இதனை அரசாங்கமும் பிற அதிகாரிகளும் இந்த சரணாலயங் களையும் அவற்றுக்குள் இருக்கும் தாவர மற்றும் விலங்குகளையும் பாதுகாக்க பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com