மகிழ்ச்சியான பாதுகாப்பான பயணத்திற்கு காரில் வைக்க வேண்டிய 6 பொருட்கள்!

6 things to keep in your car for a happy and safe trip!
payanam articles
Published on

ம் அன்றாட வாழ்க்கையில் ஆரோக்கியமாகவும், அமைதியாகவும் மகிழ்ச்சியோடும், வாழ்வதற்கு வாஸ்து சாஸ்திரத்தில் பல குறிப்புகள் இருக்கின்றன. வாஸ்து சாஸ்திரத்தை பின்பற்றுவதால் நேர்மறை ஆற்றல் அதிகரித்து வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கிறது. அந்த வகையில் காரில் மகிழ்ச்சியாகவும், பாதுகாப்பாகவும் பயணம் மேற்கொள்ள வாஸ்து சாஸ்திரப்படி வைக்க வேண்டிய 6 பொருட்கள் குறித்து இப்பதிவில் காண்போம்.

1. விநாயகர் சிலை

தடைகளை தகர்ப்பவர் விநாயகர் என நம்பப்படுவதால் காரில் விநாயகர் சிலையை வைப்பது மிகவும் நல்லது. மேலும் விநாயகர் சிலை நேர்மறை ஆற்றலை அதிகரித்து, எதிர்மறை ஆற்றலையும், பயணத்தின்போது ஏற்படும் தடைகளையும் நீக்க வல்லது என்பதால் காரில் வைக்க வேண்டிய முக்கியமான பொருளாக விநாயகர் சிலை உள்ளது.

2. அனுமன் சிலை

அனுமன் சிலை மங்களகரமானதாக கருதப்படுவதோடு, கெட்ட விளைவுகள் இருந்தால் அதை அகற்றி விடும் தன்மையும் கொண்டது. மேலும் அனுமன் சிலை நேர்மறை ஆற்றலை அதிகரித்து, நம்மை காப்பதாக நம்பப் படுவதால் வாஸ்து சாஸ்திரத்தின் படி ஆஞ்சநேயரின் சிலையை காரில் தொங்கவிடலாம்.

3. கருப்பு ஆமை

நாம் செய்ய விரும்பும் வேலை நன்றாக அமைவதற்கு கருப்பு ஆமை சிலையை காரில் வைப்பது சிறந்தது. இது நேர்மறை ஆற்றலை அதிகரித்து நினைத்த காரியத்தை வெற்றியடைய செய்கிறது .

4. இயற்கை படிகங்கள்

இயற்கை படிகங்கள் மங்களகரமாக கருதப்படுவதோடு, நம்மை பாதுகாப்பாகவும் வைத்திருந்திருக்கும். இயற்கையான படிகங்களை காரில் வைத்திருப்பதால் நேர்மறை ஆற்றலின் ஓட்டத்தை அதிகரித்து மகிழ்ச்சியாகவும் வசதியாகவும் பயணம் செய்யலாம்.

இதையும் படியுங்கள்:
சுற்றுலாவில் ஆர்வம் உள்ளவர்களா நீங்க? உங்களுக்குத்தான் இந்தப் பதிவு!
6 things to keep in your car for a happy and safe trip!

5. சுத்தமான நீர்

சுத்தமான நீர் மனதை பலப்படுத்துவதோடு சிறந்த முடிவுகளை எடுக்கவும் உதவுகிறது. ஆகவே காரில் எப்போதும் சுத்தமான தண்ணீரை வைத்திருங்கள்.

6. கல் உப்பு

கல் உப்புடன் சிறிது பேக்கிங் சோடா சேர்த்து, காகிதத்தில் மடித்து காரின் இருக்கைக்கு அடியில் வைக்கவேண்டும். இது எதிர்மறை அம்சங்களை நீக்கி நேர்மறை ஆற்றலை அதிகரித்து பயணத்தை பாதுகாப்பாக்குகிறது. கல் உப்பு, பேக்கிங் சோடா கலவையை அடிக்கடி மாற்றுவது நல்லது.

மேற்கூறிய ஆறு பொருட்களையும் காரில் வைத்திருப்பது வாஸ்து சாஸ்திரத்தின்படி பயணம் மகிழ்ச்சியாகவும் பாதுகாப்பாகவும் இருப்பதற்கு வழிவகுக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com