

பெரும்பாலும் பாம்புகள் ஆறுகள், குளங்கள் அல்லது கிணறுகள் போன்ற குளிர்ந்த இடங்களில் வசித்தாலும், சில தாவரங்களின் வாசனை பாம்புகளை ஈர்ப்பதால் அவ்விடத்திற்கு பாம்புகள் படையெடுத்த வண்ணம் வருகின்றன. அத்தகைய பாம்புகளை ஈர்க்கும் 6 தாவரங்கள் குறித்து இப்பதிவில் காண்போம்.
1. வாழை மரம்: குளிர்ச்சியான வாழை மரங்கள் பாம்புகளுக்கு கதகதப்பு அளிக்கின்றன. வாழை மரத்தின் மென்மையான இலைகள் பாம்புகளுக்கு ஒளிந்து கொள்ள ஒரு நல்ல இடமாக இருப்பதோடு, தவளைகள் மற்றும் எலிகளின் புகலிடமாக இருக்கின்றன. பாம்புகளின் வசதியான தங்குமிடமாக வாழை மரங்கள் இருப்பதோடு அவற்றின் உணவுகளுக்கும் சிறந்த தேர்வாக இருப்பதால் வாழைமரம் உள்ள இடங்களை பாம்புகள் தேடிச் செல்கின்றன.
2. தேவதாரு மரம் (cedar): பைன் குடும்பத்தைச் சேர்ந்த சிடார் என்ற தேவதாரு மரம், உயரமான அலங்கார ஊசியிலை மரமாக இருப்பதோடு, நறுமணம் கொண்டதாகவும் இருக்கிறது. இந்த மரத்தின் நறுமணம் பாம்புகளை ஈர்ப்பதோடு, தேவதாரு மரத்தின் நிழல் மற்றும் ஈரப்பதம் காரணமாக பாம்புகளின் விருப்பமான இடமாக சிடார் மரங்கள் இருப்பதால் அதிக அளவில் பாம்புகளின் நடமாட்டம் அங்கு தென்படுகிறது.
3. ஆரா கீரை (clover): குறுகிய கால செடியான மூடு பயிர்களாக பயிரிடப்படும் ஆரா கீரைகளை விலங்குகளுக்கு தீவனமாகப் பயன்படுத்தலாம். ஆரா கீரையின் பூக்கள் நறுமணம் மிக்கதாக இருப்பதால் தேனீக்கள் மற்றும் பட்டாம்பூச்சிகளை தன்னகத்தே மிகவும் கவர்ந்து இழுக்கின்றன. அத்தோடு, பாம்புகளின் விருப்ப உணவான தவளைகள் மற்றும் எலிகளை கவர்ந்து இழுப்பதால் இவற்றை உணவாக்க பாம்புகள் ஆரா கீரைகளுக்கு இடையில் வசதியான இடங்களை உருவாக்கி மறைந்து கொள்கின்றன.
4. சைப்ரஸ்: இருபது வெவ்வேறு இனங்களைக் கொண்ட சைப்ரஸ் வகை மரங்கள் அடர்த்தியான இலைகளைக் கொண்டுள்ளன. பறவைகள் கூடு கட்டி வாழ்வதற்கு இத்தகைய அடர்த்தியான இலைகள் வசதியான சூழ்நிலைகளை உருவாக்கியுள்ளதால் அதிகமாக பறவைகள் கூடுகட்டி இந்த வகை மரங்களில் வாழ்கின்றன. பாம்புகளுக்கு ஏற்ற இரையாக இவை இருப்பதால் சைப்ரஸ் மரங்களில் பாம்புகள் அதிக அளவில் காணப்படுகின்றன.
5. ஹோஸ்டாஸ்: ஹோஸ்டாக்கள் குளிர்ந்த, ஈரமான மண்ணைக் கொண்டுள்ளது. மேலும், மரங்கள் நிறைந்த சூழல்களுக்கு ஏற்றவையாக இருப்பதோடு, சில மாதங்களுக்கு 40 டிகிரி பாரன்ஹீட்டிற்கும் குறைவான வெப்பநிலையைத் தாங்கும் தன்மை கொண்டவையாக இருக்கின்றன. பாம்புகள் பாதுகாப்பாக வாழ்வதற்கு சிறந்த இடமாக இம்மரத்தின் இலைகள் இருக்கின்றன. இதனால் பாம்புகளுக்கு ஏற்ற இடமாக ஹோஸ்டாக்கள் இருக்கின்றன.
6. மல்லிகை: நறுமணம் மிக்க மல்லிகை செடிகள் வாசனை திரவியங்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகின்றன. செல்வத்தையும் செழிப்பையும் தரும் என நம்பப்படும் மல்லிகைப் பூக்களின் நறுமணம் பாம்புகளை கவர்ந்து இழுக்கின்றன. மல்லிகை பூக்களின் சூடான புல் தண்டுகள் மற்றும் இலைகள் பாம்புகள் தூங்குவதற்கு ஏற்ற இடமாக இருப்பதால் மல்லிகை செடிகள் உள்ள இடங்களில் பாம்புகளின் நடமாட்டத்தை அதிகம் காணலாம்.
மேற்கூறிய தாவரங்கள் பாம்புகளை ஈர்ப்பதால் அத்தகைய இடங்கள் பாம்புகளின் விருப்ப இடமாக இருப்பதால் அவற்றிற்கு அருகில் செல்லும்போதோ அல்லது வீட்டிற்குள் இருக்கும்போதோ கவனமாக இருப்பது மிகவும் நல்லது.