Spiders
Spiders

இந்தியாவில் உள்ள 6 வகையான சிலந்திகள் மற்றும் அவற்றைப் பற்றிய ஆச்சரியமான உண்மைகள்!

Published on

சிலந்தி வகைகள்:

1. ஹார்வெஸ்ட் மேன் சிலந்தி: வழக்கமாக இந்த சிலந்தியை மரத்தின் டிரங்குகளில் அல்லது தரையில் காணலாம். அவற்றின் முக்கிய உணவு சிறிய நத்தைகள், வண்டு லார்வாக்கள் மற்றும் கம்பளி பூச்சிகள்.

2. டரான்டுலா: இந்திய டராண்டுலா உடல் மற்றும் கால்களில் முடியுடன் கவர்ச்சிகரமான வடிவத்தைக் கொண்டுள்ளது. டரான்டுலாவின் ஆயுட்காலம் 25 முதல் 40 ஆண்டுகள் ஆகும். பொதுவாக அவை துளைகளில் வாழ்கின்றன. டரான்டுலாவின் கடி நிச்சயமாக அசௌகரியத்தை ஏற்படுத்தும்.

3. ஓநாய் சிலந்தி: நிறம் பொதுவாக பழுப்பு முதல் சாம்பல் வரை இருக்கும். இளஞ் சிலந்திகள் பொரித்து சில வாரங்கள் தாயின் முதுகில் சவாரி செய்கின்றன. பொதுவாக ஓநாய் சிலந்திகள் தங்கள் வேட்டையாடும் காலங்களை இரவிற்கு ஒதுக்குகின்றன. அடர்ந்த தாவரங்களுக்கு மத்தியில் வாழ்நாளை கழிக்கின்றன. தலையின் மேல் ஒரு சதுர வடிவில் 4 பெரிய கண்கள் மற்றும் முன்வரிசையில் 4 சிறிய கண்கள் அவற்றின் தனித்துவமான கண்களை உருவாக்குகின்றன.

4. மஞ்சள் பை சிலந்தி: ஒரு வளமான பெண் சிலந்தி 150 முதல் 240 முட்டைகள் வரை பைகளில் இடும். இந்த இனத்தில் ஆண் சிலந்திகள் பெண் சிலந்திகளால் உண்ணப் படுகின்றன. இவற்றின் முதன்மை உணவு சிறிய பூச்சிகள். இரவில் உணவுகளை வேட்டையாடுகின்றன. இதன் கடியும் அசௌகரியத்தை ஏற்படுத்தும்.

5. வீட்டு சிலந்தி: இந்த சிலந்திகள் வட்ட வடிவ அடிவயிற்றை கொண்டுள்ளன. சில வெள்ளை நிறத்திலும், வேறு சில சாம்பல் நிறத்திலும் இருக்கும். இவை பிளவுகள், அலமாரிகளுக்கு அடியில் பாதாள அறைகள் மற்றும் ஈக்கள் இருக்கும் ஜன்னல்களுக்கு அருகில் உள்ள கேரேஜ்களில் தங்களை மறைத்து கொள்கின்றன.

6. குதிக்கும் சிலந்தி: சால்டிசிடே குடும்பத்தில் குதிக்கும் சிலந்திகள் அடங்கும். இவை ஒரு சென்டிமீட்டருக்கு குறைவான நீளம் கொண்டவை. மற்ற சிலந்திகளை விட தெளிவானவை. அவற்றின் உடல் முழுவதும் துடிப்பான நிறங்களை கொண்டிருக்கும். இந்த சிலந்திகள் சிவப்பு, வெள்ளை, மற்றும் உலோக பச்சை நிறங்களைக் கொண்டிருக்கும்.

இதையும் படியுங்கள்:
மீண்டும் மீண்டும் சிலந்தி பூச்சிகளின் தொல்லையா?
Spiders

சிலந்திகள் பற்றிய ஆச்சரியமான உண்மைகள்:

  • சிலந்திகள் உண்மையில் பூச்சிகள் அல்ல. பூச்சிகளுக்கு 6 கால்கள், 3 உடல் பிரிவுகள் உள்ளன. ஆனால் சிலந்திக்கு 8 கால்கள் 2 உடல் பிரிவுகள் உள்ளன. சிலந்திகள் அராக்னிடா வகுப்பை சேர்ந்தவை. இதில் உண்ணி, பூச்சிகள், மற்றும் தேள் ஆகியவை அடங்கும்.

  • சிலந்திகள் அதிக பன்முகத் தன்மையை வெளிப்படுத்துகின்றன. ஆராய்ச்சியாளர்கள் 48,000 த்துக்கும் அதிகமான சிலந்தி இனங்களை அடையாளம் கண்டு உள்ளனர்.

  • சிலந்திகள் அண்டார்டிக்காவைத் தவிர உலகின் எல்லா மூலைகளிலும் காணப்படுகிறது.

  • பட்டு உற்பத்தி செய்யும் திறனுக்காக பிரபலமானவை.

  • சில இனங்கள் சமூகத் தன்மை கொண்டவை. நூற்று கணக்கான அல்லது ஆயிரக்கணக்கானவை வலைகளில் ஒன்றாக வாழ்ந்து குஞ்சுகளை பராமரித்து ஒன்றாக வேலை செய்கின்றன.

  • சிலந்திகளுக்கு இழந்த கை, கால்களை மீண்டும் உருவாக்கும் திறன் உள்ளது. இந்த செயல்முறை ஆட்டோ டோமி என்று அழைக்கப் படுகிறது.

  • சிலந்தி புத்தக நுரையீரல் அல்லது மூச்சுக் குழாய்களைக் கொண்ட ஒரு தனித்துவமான சுவாச அமைப்பை கொண்டுள்ளது.

  • சிலந்திகள் பூச்சிகளின் எண்ணிக்கையைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும் முக்கியமான வேட்டையாடு பவர்கள். சில சிலந்திகள் விஷத்தன்மை கொண்டவை.

சிலந்திகளை வீட்டில் அணுக விடாமல் அடிக்கடி வலைகளை அகற்றி சுத்தமாக வைத்திருப்பது அவசியம்.

logo
Kalki Online
kalkionline.com