இறைவனின் படைப்பில் ஒவ்வொரு உயிரினமும் ஏதாவது ஒரு தனித்துவமான திறமையை தன்னகத்தே கொண்டு விளங்குகின்றன. வித்தைக்காரன் ஒருவன் கம்பி மேல் நடந்து சாகசம் புரிவது போன்ற நம்ப முடியாத செயல்களை செய்து நம்மை அசர வைக்கக் கூடிய சில வகை பூச்சி இனங்களும் பூமியில் உண்டு.
தண்ணீரின் மேற்பரப்பில் மந்திர வித்தை புரியக்கூடிய 7 வகைப் பூச்சிகள் பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.
இது ஏரி மற்றும் குளம் போன்ற நீர் நிலைகளுக்கு அருகில் வசித்து வருவது. கொஞ்சம் பெரிய உருவம் கொண்டது. வேகமாகவும், திறமையுடனும் வேட்டையாடக் கூடியது. மெழுகு போன்ற பிசு பிசுப்புத் தன்மை கொண்ட இதன் கால்கள் நீரின் மேற்பரப்பில் நடப்பதற்கு மட்டுமின்றி, நீருக்குள் மூழ்கி தலைப்பிரட்டை (tadpole), சிறிய வகை மீன்கள் போன்றவற்றைப் பிடித்து உண்பதற்கும் உதவி புரிகின்றன. எட்டுக் கால்கள் கொண்ட படகு போல் நீரில் மிதந்து கொண்டிருக்கும் இந்த ஸ்பைடர், ஆபத்து வரும் போது நீருக்குள் மூழ்கி ஒளிந்து கொள்ளவும் செய்யும்.
வெள்ளம் போன்ற அபாயகரமான நேரங்களில், ராணி எறும்பு, வேலைக்காரர்கள், முட்டை, லார்வா என அனைத்தும் ஆயிரக் கணக்கில் ஒன்று சேர்ந்து ஒரு மிதவை (Raft) போன்ற அமைப்பை உண்டு பண்ணி பதற்றத்துடன், மைல் தூரம் கடந்து, உலர்ந்தத்தரைப் பகுதியை சென்றடையும் வரை பயணிக்கக் கூடிய திறமை கொண்டவை. உயிர் பிழைக்க உடல் பலம் இருந்தால் மட்டும் போதும் என்ற கூற்றைப் பொய்யாக்கி, ஒற்றுமையும் தேவை என நிரூபிக்கும் எறும்புக் கூட்டம் இவை.
இவை நீரின் மேற்பரப்பிற்கு அடியில் தலை கீழாக நிற்கக்கூடியவை. ஒரு கனமான தரைப் பரப்பில் நிற்பதுபோல் பாவித்து சறுக்கியபடி சென்று கொண்டிருக்கும். நீரின் மேற்பரப்பிலிருந்து காற்றை இழுத்து தன் ஓட்டிற்குள் (shell) வைத்துக்கொள்ளும். ஒரு சளி பாதையை உருவாக்கி அதில் முன்னோக்கிச் செல்லும். மேற்பரப்பு பதற்றம் (Surface tension) மற்றும் சிறு உந்து சக்தி மூலம், எதனுடனும் தொடர்பின்றி மிதந்து கொண்டிருக்கும்.
இலகுவான உடல் மற்றும் நுண்ணிய மயிர்கள் அடர்ந்த மைக்ரோசேட் (microsetae) எனப்படும் தனித்துவமான கால்களை உடையவை. அதன் மூலம் சுலபமாக ஏரி, குளம் குட்டைகளில் சறுக்கிக் கொண்டே செல்லும். இதன் கால்களிலுள்ள முடிகள் காற்றை இழுத்து வைத்து மிதக்கும் சக்தி பெறுகின்றன. நீரின் மேற்பரப்பில் நின்றபடி, சிறிதும் நனையாமல், சுலபமாக மற்ற பூச்சிகளைப் பிடித்து உட்கொண்டு வாழ்கின்றன. இதை 'ஜீசஸ் பக்ஸ்' என்றும் அழைக்கின்றனர்.
'ஜீசஸ் லிசார்ட்' என்றும் அழைக்கப்படும் இந்தப் பூச்சி அபாரமான திறமை கொண்டது. மத்திய மற்றும் தென் அமெரிக்காவில் காணப்படுகின்றது. ஜவ்வுகளால் இணைக்கப்பட்ட நீண்ட கால் விரல்களைக்கொண்டு மின்னல் வேகத்தில் நீரின் மீது ஓடக் கூடியது. போகிற போக்கில், நீரில் மூழ்காதிருக்க சிறு சிறு ஏர் பாக்கெட்டுகளை உண்டுபண்ணிக்கொண்டே செல்லும்.
கொசு பறக்கும் நிலைக்கு வளர்வதற்கு முன் அதன் லார்வா சில காலம் நீரின் மேற்பரப்பிற்கு அடியில் தொங்கிக் கொண்டிருக்கும். சிறு மூச்சுக் குழாய்களை உண்டுபண்ணி அதை மூச்சு விடுவதற்கான ஸ்னோர்கெளாக (Snorkels) உபயோகப்படுத்தும். மேற்பரப்பு பதற்றத்தை புத்திசாலித்தனமாக பயன்படுத்தி அமைதியாக வளர்ந்து கொசுவாக வெளிவரும்.
இது யூரோப் பகுதியில் காணப்படுவது. நீண்ட பிசு பிசுப்புத் தன்மை கொண்ட கால்களுடன் குளத்து நீரின் மேற்பரப்பில் நடந்து கொண்டே சலனத்தை உண்டுபண்ணும். அப்போது தென்படும் நீர் வாழ் பூச்சிகள், தவளைக் குஞ்சுகள் போன்றவற்றை உட்கொண்டு பசியை தீர்த்துக் கொள்ளும். இது நீருக்குள் டைவ் அடிக்கவும், நீந்தவும், சறுக்கிக் கொண்டே செல்லவும் கூடிய பன்முகத்தன்மை கொண்ட உயிரினம்.