ஆயுட்காலம் குறைவாக உள்ள 8 உயிரினங்கள்!

8 creatures with the shortest lifespan!
Mosquitoes, Ants,
Published on

ந்த உலகில் சில அரியவகை உயிரினங்கள் இருக்கின்றன. இதில் நிறைய விலங்குகளின் ஆயுட்காலம் அதிகமாகவும் சில விலங்குகளின் ஆயுட்காலம் குறைவாகவும் இருக்கும். ஒரு சில உயிரினங்கள் பிறந்த சில மணி நிமிடங்கள் உயிர்வாழ்ந்த பிறகு இறப்பதற்கான வாய்ப்புள்ளது என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அந்த வகையில் குறைவான ஆயுட்காலம் கொண்ட 8 உயிரினங்கள் குறித்து இப்பதிவில் காண்போம் .

1.எறும்புகள்

எறும்புகள் குறைந்த ஆயுட்காலம் கொண்டவை. இவை ஒரு வாரம் கூட உயிர் வாழ்வது இல்லை. மேலும் இது இயற்கைக்கேற்ப தன்னுடைய புற்றிலிருந்து வெளிவந்து உயிர் வாழ்ந்து இறந்துவிடுகிறது.

2.தட்டான் பூச்சிகள்

குறுகிய காலம் மட்டுமே உயிர் வாழக்கூடியவை தட்டான் பூச்சிகள். இதில் ஆண் தட்டான் பூச்சிகள் ராணியுடன் இணைந்து இனச்சேர்க்கை செய்கிறது. இதன் பிறகு சில வாரங்கள் மட்டுமே உயிர் வாழும் என அறிவியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

3.கஸ்ட்ரோட்ரிச்சா

நீர் நிலைகளில் வாழும் ஒருவகை உயிரினம்தான் கஸ்ட்ரோட்ரிச்சா.மேலும் இது நன்னீரில் மிதக்கும் முதுகெலும்பில்லாத உயிரினமாகும். இந்த உயிரினம் குஞ்சு பொரித்த பிறகு இனப்பெருக்கம் செய்துவிட்டு கொஞ்ச காலம் மட்டுமே வாழ்ந்து இறந்துவிடும்.

4.வீட்டு ஈக்கள்

வீடுகளில் பொதுவாக சமையல் அறைகள் என எல்லா இடங்களிலும் பார்ப்பதுதான் வீட்டு ஈக்கள். இவை இனப்பெருக்கம் செய்த பிறகு அடுத்த சந்ததிகளை தயார் செய்துவிட்டு 4 வாரங்களில் இறந்து விடுகிறது.

இதையும் படியுங்கள்:
குங்குமப்பூ உற்பத்தி மையமாக மாறும் வட கிழக்கு மாநிலங்கள்!
8 creatures with the shortest lifespan!

5. மே வண்டு

இரவு நேர விருந்தாளியான மே வண்டு சில வாரங்கள் மட்டுமே உயிர் வாழும். மேலும் மண்ணிலிருந்து வெளிவந்து இனச்சேர்க்கை செய்து முட்டை இடுகிறது. அதன் பிறகு தானாகவே இறந்து விடுமாம்.

6.மே ஃப்ளை

காற்றிலேயே நடனமாடக்கூடிய மே ஃப்ளை என்ற சிறிய பூச்சி 24 மணி நேரம் மட்டுமே உயிர் வாழக்கூடியது. இது விரைவான நேரத்தில் இனச்சேர்க்கை செய்து முட்டை இடுகிறது.

7.கொசுவினப்பூச்சி

மாலையில் கூட்டம் கூட்டமாக சலசலப்பு சத்தத்தை எழுப்பக்கூடிய பார்ப்பதற்கு கொசு போன்றே இருக்கும் ஒரு உயிரினம். இது அதிகபட்சமாக ஐந்து நாட்கள் மட்டுமே உயிர் வாழக்கூடியது.

8.கொசு

பலருக்கு தொல்லையாக உலகில் இருக்கக்கூடிய கொசுக்கள் ஒரு குறிப்பிட்ட காலம்வரை மட்டுமே வாழக்கூடியது. இது இனப்பெருக்கம் செய்து தன்னுடைய சந்ததியை விட்டுச்செல்கிறது. மேலும் அதிகபட்சமாக ஒரு மாதம் வரை வாழக்கூடியது.

மேற்கூறிய 8 உயிரினங்களும் நமக்கு மிகவும் பரீட்சயப்பட்ட உயிரினங்களாக இருப்பதோடு குறைந்த ஆயுட்காலங்களைக் கொண்டுள்ளன.

இதையும் படியுங்கள்:
‘இயற்கையின் சிறிய தூதர்களுக்கு ஒரு பாராட்டு’
8 creatures with the shortest lifespan!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com