
1. Green peafowl
தென் கிழக்கு ஆசியப் பகுதியில் காணப்படும் இது நல்ல பச்சை வண்ண இறகுகளோடும், மேலும் இந்திய மயிலை விட வலிமையானதுமாக இருக்கும். இதன் வண்ணத்திற்காகவே இது தனித்தன்மை பெற்றது.
2. Congo peafowl
ஆப்ரிக்காவில் காணப்படும் இந்த மயில் இனம் அதிக வண்ணமில்லை என்றாலும் பச்சை மற்றும் நீல வண்ணம் கொண்டதாக இருக்கும்.
3. White peacock
இது காண்பவர்களை கண் கவரக்கூடிய வகையில் வெள்ளை வெளேரென்று இருக்கும். உலகத்தில் அனைவரையும் ஈர்க்கக் கூடிய வகையில் இந்த இனம் இருப்பது தனிச்சிறப்பு.
4. Japanese green peafowl
இதன் நிறம் பச்சை (emerald) மற்றும் நீண்ட இறகுகள் கொண்டதாக இருக்கும். இதை ஜாவாவின் அடர்ந்த காடுகளில் காண முடியும். கண்ணைக் கவரும் அழகில் இருக்கும்.
5. ஸ்பால்டிங் peacock
இந்திய மற்றும் கிரீன் peafowl சேர்ந்த கலப்பு இனமாகும். இது அடர்த்தியான பச்சை நிறமும், பெரியதாகவும் மற்றும் செழிப்பான வாலை உடையதாக இருக்கும்.
6. Black shouldered peacock
மிகவும் கருப்பான தோளும் மற்றும் கண்ணைப் பறிக்கும் நீல நிறத்தில் இருக்கும் இந்த மயில் இப்படி கருப்பு மற்றும் நீல எதிரெதிராக வண்ணத்தில் கண்ணைக்கவரும் தனித் தன்மையோடு இருக்கும்.
7. Purple peacock
இந்திய வகையைச் சேர்ந்ததான இந்த மயில் மிக அடர்த்தியான வயலெட் வண்ணத்தில் இருப்பது தனிச் சிறப்பு. இதன் அழகு எல்லோரையும் மயக்கும். எல்லோரையும் ஈர்க்கும்.
8. Opal peacock
இதன் உடலில் பச்சை மற்றும் சில்வர் வண்ணம் காணப்படும். இது மிகவும் அரிதாகவே உள்ளது. வண்ணமயமான நிறத்தில் அழகாக இருக்கும்.
9. கேமியோ peacock
க்ரீம் மற்றும் வெளிர் ப்ரௌன் நிறத்திலும் காணப்படும். இதன் இறகுகள் மிக மென்மையாக இருக்கும். பார்ப்பதற்கு மிக வித்தியாசமாக இருக்கும்.