தனிநபர் புரட்சியால் உருவான 1,360 ஏக்கர் வனச் சரணாலயம்!

A 1,360-acre forest sanctuary created by a Individual revolution!
A 1,360-acre forest sanctuary created by a Individual revolution!

ஜாதவ் பயேங் - இவர்தான் ‘Forest Man of India’ என்ற பெருமைக்கு உரியவர். இவர் அசாமில் வாழும் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர். ஜாதவ் இந்திய சுற்றுச்சூழல் மற்றும் இயற்கையின் மீது அளவற்ற காதல் கொண்டவராவார்! இன்னும் தெளிவாக சொல்வதானால், இயற்கைக்கான அர்ப்பணிப்பு மற்றும் பொறுப்புணர்வு ஆகியவற்றின் மறு உருவகமாகத் திகழ்கிறார். ஒரு அடித்தட்டு விவசாயியாக துவங்கிய இவரது இந்தப் பயணம் இன்று உலகளாவிய சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக முக்கியப் பங்காற்றியுள்ளார்.

1,360 ஏக்கர் வனச் சரணாலயம்: ஜாதவ் பயேங்கின் இந்த சுற்றுச்சூழல் அறப்போராட்டமானது, 1979ம் ஆண்டு தொடங்கியது. ஜாதவ் தன்னுடைய 16வது வயதில், அசாமில் ஏற்பட்ட வெள்ளத்தின் பேரழிவைக் கண்டார். மேலும், இந்த வெள்ள பாதிப்பின் தாக்கமானது, வன விலங்குகளையும் பெரிய பாதிப்பிற்கு உள்ளாக்கியது.

வெள்ளத்தினால் இழந்த வாழ்விடத்தை மீட்டெடுக்கவும், விலங்குகளைப் பாதுகாக்க வேண்டும் என்ற தீர்மானித்தை கையிலெடுத்த  ஜாதவ், பிரம்மபுத்ரா நதிக்கரையில் ஒரு தரிசு மணல் பரப்பில் மரங்களை நடுவதற்கான பணியைத் தொடங்கினார். தன்னுடைய முழு மன உறுதியுடன் வெறும் 20 மூங்கில் நாற்றுகளை மட்டுமே விதைத்துள்ளார். பின்னர் அதுவே, 1,360 ஏக்கர் வனச் சரணாலயமாக மாறுவதற்கான விதையாக மாறியுள்ளது.

தரிசு நிலத்தில் எழுந்த காடு: ஒரு காலத்தில் வெட்டவெளி மணற்பரப்பாக இருந்த இந்த இடங்கள் தற்போது ஜாதவின் இடைவிடாத முயற்சியால் பசுமையான வனமாக மாறி உள்ளது. மேலும், இது வன விலங்குகள் மற்றும் பல்லுயிர் வளம் கொண்ட செழிப்பான சுற்றுச்சூழல் அமைப்பாகவும் மலர்ந்துள்ளது. இந்த வனச்சரகம் ஜாதவின் நினைவாக, ‘மோலாய் காடு’ எனப் பெயரிடப்பட்டு யானைகள், மான்கள், காண்டாமிருகங்கள் மற்றும் புலிகள் உள்ளிட்ட பல விலங்குகளுக்கான சரணாலயமாக விளங்குகிறது.

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் - ஜாதவ் பயேங்
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் - ஜாதவ் பயேங்https://bijitdutta.wordpress.com

எளிமையான தனிப்பட்ட வாழ்க்கை: ஜாதவ் பயேங் தனது மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் (1 மகள் மற்றும் 2 மகன்கள்) தனது காட்டில் கட்டிய வீட்டில்தான் வசித்து வந்தார். 2012ம் ஆண்டு, கோகில்முக் காட் அருகே ஜாதவ் ஒரு வீட்டைக் கட்டி, தனது குடும்பத்துடன் அந்த வீட்டிற்கு மாறினார். ஜாதவ் அந்தக் காடுகளில் உள்ள மரங்களையும் செடிகளையும் பாதுகாத்து, பராமரித்து வருவதோடு தனது பண்ணையில் பல கால்நடைகளையும் வளர்த்து வருகிறார். தனது வருமானத்திற்காகவும் வாழ்வாதாரத்திற்காகவும் பால் விற்பனை செய்கிறார்.

ஜாதவ் பயேங்
ஜாதவ் பயேங்https://www.northeasttoday.in

அங்கீகாரம்: ஜாதவ் பயேங்கின் இந்த அசாதாரண முயற்சி சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. அந்த வகையில் இவருக்கு, ‘பத்மஸ்ரீ’ விருது மற்றும் ‘காமன்வெல்த் பாயின்ட்ஸ் ஆஃப் லைட்’ விருது போன்ற மதிப்புமிக்க விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. ஜாதவின் உத்வேகமான வாழ்க்கைக் கதை பல எல்லைகளைத் தாண்டி, இளைய தலைமுறையை ஊக்குவிக்கிறது.

இதையும் படியுங்கள்:
Selaginella Lepidophylla: 100 வருடங்கள் கழித்தும் உயிர்த்தெழும் அதிசயம்!
A 1,360-acre forest sanctuary created by a Individual revolution!

அமெரிக்காவில் உள்ள சில பள்ளிகளில் ஜாதவின் இந்த தனிப்பட்ட செயலினால் ஏற்பட்ட  மாற்றம் மற்றும் தனி நபரால் சுற்றுச்சூழலில் ஏற்பட்டிருக்கும் ஆழமான தாக்கம் பற்றி மாணவர்களுக்குக் கற்பிக்கப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com