ஓர் அதிர்ச்சித் தகவல் - பூமியை விட்டு விலகும் நிலா! இனி ஒரு நாளைக்கு 25 மணி நேரமாம்!

Moon Earth
Moon Earth
Published on

விஞ்ஞான உலகை பல ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து வந்தாலும், விஞ்ஞானிகளின் தாகம் மட்டும் இன்னும் தீரவே இல்லை. எண்ணற்ற ஆராய்ச்சிகளை தொடர்ந்து மேற்கொள்வதன் விளைவாக, புதுப்புது தகவல்களும் நமக்கு கிடைக்கின்றன. அப்படியான ஓர் அதிர்ச்சித் தகவல் தான் இப்போது கிடைத்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இப்போது காண்போம்.

சூரியக் குடும்பத்தில் நாம் வாழும் பூமி, மூன்றாவது கோளாக இருக்கிறது. பூமிக்கு இருக்கும் ஒரே துணைக்கோள் நிலாதான். இப்போது இந்த நிலா குறித்த ஒரு தகவல் வெளியாகி விஞ்ஞான உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பூமியை விட்டு நிலவு விலகிச் செல்வதாக சமீபத்திய ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. விஸ்கான்சின்-மாடிசன் பல்கலைக்கழகத்தில் இருக்கும் ஒரு ஆராய்ச்சி குழுவானது, பல வருடங்களாக இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டது. இதன்படி, நிலவு ஆண்டுக்கு ஒருமுறை பூமியை விட்டு சுமார் 3.8 செ.மீ. விலகிச் செல்வதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

நிலவு தூர விலகிச் செல்வதன் விளைவாக பூமியிலும் பல மாற்றங்கள் நிகழ வாய்ப்புள்ளது. இப்போது ஒரு நாளைக்கு 24 மணி நேரங்கள் என கணக்கிடப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் குறிப்பிட்ட தொலைவுக்கு நிலவு விலகுவதன் மூலம், ஒரு நாளைக்கு 25 மணி நேரங்கள் என கணக்கிடப்பட வேண்டிய காலம் வரும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் இந்த மாற்றம் நிகழ சுமார் 20 கோடி ஆண்டுகள் ஆகும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இதன் விளைவாக பூமியில் இரவை விட பகல் நேரம் அதிகமாக இருக்குமாம்.

கடந்த காலங்களை நாம் புரட்டிப் பார்த்தால், பூமியில் ஒரு நாளின் மதிப்பானது தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருவதை தெரிந்து கொள்ளலாம். சுமார் 1.4 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னதாக, பூமியில் ஒரு நாள் என்பது 18 மணி நேரம் மட்டும்தான். ஆனால் கால மாற்றத்தில் நிலா விலகியதன் விளைவாக இப்போது 24 மணி நேரமாக நாம் கணக்கிடுகிறோம். பூமிக்கும், நிலவுக்கும் இடைய இருக்கும் ஈர்ப்பு விசையும், அலை சக்திகளில் உண்டாகும் மாற்றங்களுமே இந்த நிகழ்வுக்கு காரணமாகும்.

இதையும் படியுங்கள்:
புதன் கோளில் வைரமா? என்னப்பா சொல்றாங்க விஞ்ஞானிகள்!
Moon Earth

நிலவு விலகுவது தொடர்பாக விஸ்கான்சின்-மாடிசன் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் புவி அறிவியல் பேராசிரியரான ஸ்டீபன் மேயர்ஸ் கூறுகையில், "பூமியை விட்டு நிலவு விலகிச் செல்வதன் மூலம் பூமி சுழல்கின்ற வேகமும் வெகுவாக குறைந்து விடும். இதனால் ஒவ்வொரு நாளிலும் பகல் நேரம் அதிகரித்து காணப்படும். நிலவு குறித்த ஆராய்ச்சிக்குப் பின்னர், பல பில்லியன் ஆண்டுகள் பழமை வாய்ந்த பாறைகளை ஆராய்ச்சி செய்ய விரும்புகிறோம்" என தெரிவித்துள்ளார்.

நிலவு விலகிச் செல்வது ஒருபுறம் இருக்கட்டும். ஒருவேளை ஒரு நாளின் மதிப்பு 25 மணி நேரமாக கணக்கிடப்பட்டால், அது உங்களுக்கு சாதகமா அல்லது பாதகமா என்பதை கமெண்டில் பதிவிடுங்கள் பார்க்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com