மனிதனின் தவறா? 50 ஆண்டுகளுக்கும் மேலாக அணையாமல் எரியும் 'நெருப்பு பள்ளம்'!

Doorway to hell
Doorway to hell
Published on

துருக்மெனிஸ்தான் நாட்டின் தலைநகரான அஷ்கபாபாத்திலிருந்து 260 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள Karakum desert ல் அமைந்துள்ளது இந்த 'நரகத்தின் நுழைவாயில்' என்று அழைக்கப்படும் தர்வாசா எரிவாயு பள்ளம். இந்த இடம் கடைசி 50 வருடங்களாக எரிந்துக் கொண்டேயிருக்கிறது.

1971ல் சோவியத் விஞ்ஞானிகள் natural gas கிடைக்குமா? என்று தேடிக் கொண்டிருக்கிறார்கள். அதற்காக Karakum desert ல் டிரில் செய்துக் கொண்டிருக்கிறார்கள். 

இப்படியே டிரில் செய்துக் கொண்டிருக்கும் போது அந்த இடம் உடைந்து பெரிய பள்ளம் உருவாகியிருக்கிறது. அந்த பள்ளம் 70 மீட்டர் நீளமும், 30 மீட்டர் ஆழத்திலும் இருந்திருக்கிறது. அதுமட்டுமில்லாமல் அந்த பள்ளத்தில் இருந்து மீத்தேன் வாயு வெளி வந்துள்ளது. 

அங்கிருக்கும் விஞ்ஞானிகளுக்கு இதை பார்த்ததும் என்ன செய்வதென்று புரியவில்லை. ஏனெனில், மீத்தேன் கேஸ் வெளியிலே சென்றால் அது சுற்றுச்சூழலுக்கு மிகவும் கேடு விளைவிக்கும் என்பதால் அதில் தீயை கொழுத்தி போட்டு விடுகிறார்கள். அந்த மீத்தேன் கேஸ் அப்படியே வெளியே போவதை விட அது எரிந்து அதனால் ஏற்படும் மாசு பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என்று நினைக்கிறார்கள். 

இது ஒரு இரண்டு, மூன்று வாரத்தில் எரிந்து நின்று விடும் என்று நினைக்கிறார்கள். ஆனால், அந்த பள்ளம் தொடர்ந்து 50 வருடங்களாக எரிந்துக் கொண்டேயிருக்கிறது.

இதை மக்கள் 'Doorway to hell' என்று அழைக்கிறார்கள். அதனுடைய Temperature 1000 டிகிரி செல்சியஸை தொடுகிறதாம். அதிலும் இரவு நேரத்தில் இந்த இடத்தை பார்க்க பயங்கரமாக இருக்கிறதாம். ஆகவே மற்ற நாட்டு மக்கள் இதை பார்ப்பதற்காகவே இந்த இடத்திற்கு வருகிறார்கள். பாலைவனத்தின் நடுவே இரவு நேரத்தில் இந்த பள்ளம் பிரம்மாண்டமாக எரிவது பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும், பயமாகவும் இருக்கும். இதனால் உலகெங்கிலும் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகின்றனர்.

இவ்வளவு வெப்பத்திலும் இந்த பள்ளத்தின் அடியில் சில வகை பாக்டீரியாக்கள் உயிர் வாழ்வதை 2013-ல் அங்கு இறங்கி ஆய்வு செய்த George Kourounis கண்டுபிடித்தார்.

இதையும் படியுங்கள்:
பனிக்கால துளசி பராமரிப்பு: இனி ரொம்பவே ஈஸி!
Doorway to hell

ஆனால், இது மிகவும் ஆபத்தானது என்பதாலும் நிறைய இயற்கை வாயு வீணாகிறது என்பதாலும் அந்த நாட்டு அரசாங்கம் அந்த நெருப்பை அணைக்க முயற்சித்து வருகிறது. நாம் எப்போதெல்லாம் இயற்கையை கட்டுப்படுத்த நினைக்கிறோமோ அப்போதெல்லாம் இயற்கை நம்மை கட்டுப்படுத்தி விடுகிறது. இது ஒரு இயற்கை அதிசயம் என்பதை விட, மனிதனின் தவறால் ஏற்பட்ட ஒரு நீண்ட கால எரிமலை பள்ளமாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com