மடகாஸ்கர் தீவை செழிப்பாக்கிய அரிய வகை யானைப் பறவை!

Elephant bird
Elephant bird
Published on

ப்பிரிக்காவின் தென்கிழக்குப் பகுதியில் உள்ளது மடகாஸ்கர். இங்குள்ள மடகாஸ்கர் யானைப் பறவை மிகவும் அபூர்வமானது. இதன் விஞ்ஞானப் பெயர் Aepyornis maximus. இந்தப் பறவை இந்தத் தீவில் வாழ்ந்துள்ளது. இதனால் பறக்க முடியாது. மூன்று மீட்டர் உயரமும், 450 கி.கிராம் எடையுடனும் இது இருந்துள்ளது. உலகிலேயே இதுவரையில் இத்தனை பெரிய பறவையே கிடையாது. விஞ்ஞானிகள் மற்றும் இயற்கை ஆர்வலர்களை வியக்க வைத்த பறவையினம் இது. இது மிகப்பெரிய அளவில் முட்டை இடும். இந்த உயிரினம் மிகவும் விந்தையானது.

இதன் அலகு முக்கோண வடிவில் இருக்கும். குட்டையான, அடர்த்தியான மூன்று விரல்களை உடைய கால்களைக் கொண்டிருக்கும். சில வகை யானைப் பறவைகள் 3 மீட்டர் உயரமும், 850 கிலோ எடையுடனும் இருக்கக்கூடியதாகும். இவை பெரும்பாலும் பழங்கள், கொட்டைகள் மற்றும் செடி வகைகளையே அதிகமாக உண்ணும். அதன் மூலம் கொட்டைகள் பரவி காட்டையே செழிப்பாக்குகிறது.

இதையும் படியுங்கள்:
மரம் வளர்ப்பு: மழை, காற்று, ஆரோக்கியம், செல்வம் அனைத்துக்கும் ஒரே தீர்வு!
Elephant bird

இதனுடைய முட்டைகள் 19லிருந்து 24.5 செ.மீ. அகலம் கொண்டதாகும். இந்த இனம் சுமார் 150 குட்டிகள் வரை சுமக்கும். இவற்றின் உடல் அமைப்பு மிகப் பெரியதாக இருப்பதால் இவற்றால் உயரத்தில் பறக்க முடியாது. இவை தமது நீண்ட அலகின் உதவியோடு பல வகையான தாவரங்களை உண்டு காட்டுப் பகுதியில் மெதுவாக உலா வரும்.

அழிந்து விட்ட இந்த யானைப் பறவையின் புதைபடிவங்கள் மூலம் இவை காட்டு வாழ்க்கைக்கு பழக்கமாகி சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் முக்கியப் பங்கு வகித்துள்ளது தெரிய வருகிறது. இதன் புதை படிவங்கள் மூலம் இந்தப் பறவைகள் 1300 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்ததாக அறியப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
மாசுபாட்டை போக்கி, சுத்தமான காற்றைத் தரும் 7 வகை செடிகள்!
Elephant bird

மற்ற பறவைகளை விட இந்தப் பறவைகள் மெதுவாக நடந்து சாதுவாகவே இருந்ததாகவும் தெரிய வருகிறது. இந்த வகை பறவை புனிதமானதாகக் கருதப்பட்டுள்ளது. மனிதர்களின் நடவடிக்கைகளால் இந்த அரிய இனம் அழிந்து விட்டதாக அறியப்படுகிறது. 17ம் நூற்றாண்டு வரை இந்த யானைப் பறவை இருந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

அரிதான மடகாஸ்கர் யானைப் பறவை மனிதர்களின் நடவடிக்கைகளாலும், சுற்றுச்சூழல் பாதிப்பாலும் அழிந்துவிட்ட இனமாகி விட்டது வருத்தத்திற்குரியது. புதை படிவங்கள் (fossils) மூலமே இயற்கை ஆர்வலர்கள் இந்த அரிய பறவை குறித்து விஷயங்களை சேகரித்து இருப்பது வியப்பாக உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com