மரம் வளர்ப்பு: மழை, காற்று, ஆரோக்கியம், செல்வம் அனைத்துக்கும் ஒரே தீர்வு!

One solution for rain, wind, health, and wealth
Tree cultivation
Published on

ழையை வானத்திலிருந்து வரவழைப்பதற்கு இருக்கும் ஒரே வழி மரங்களை வளர்ப்பதுதான். இன்று நாம் சந்திக்கும் இன்னொரு சவால், காற்று மாசுபாடு. ஆண்டுக்கு சராசரியாக 17 லட்சம் பேர் காற்று மாசுபாட்டால் இறப்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளது இந்திய மருத்துவ கவுன்சில். இதிலிருந்து தப்பிக்கவும் மரங்கள்தான் நமக்கு கைகொடுக்கின்றன. இப்போது அடித்து நொறுக்கும் வெப்ப சலனத்தை மறந்து விடாமல் மண்ணில் மரங்களை நடவு செய்தால் மட்டுமே அடுத்து வரும் காலங்களில் வெப்ப சலனத்தை தாக்குப்பிடிக்க முடியும். கண்டிப்பாக வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் மரங்களை நட்டு பாதுகாப்பாக வளருங்கள்.

உலகிலேயே அதிக மழை பெய்யும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இங்கு வருடத்திற்கு சராசரியாக 170 மி.மீ. மழை பெய்கிறது. இது 100 வருடங்களுக்கு மேலாக நடக்கின்றது. ஆனால், அதில் பாதிக்கும் மேற்பட்ட நீர் கடலில் வீணாகக் கலக்கிறது. அது போகும்போது நிலப்பகுதியின் மேல் உள்ள மண்ணையும் எடுத்துப் போகிறது.

இதையும் படியுங்கள்:
ஆங்லர்ஃபிஷ்: தன் உடலை விட இரு மடங்கு பெரிய இரையை விழுங்கும் மர்ம மீன்!
One solution for rain, wind, health, and wealth

இவ்வாறு எடுத்துச் செல்லும் மண்ணை செங்கல் ஆக்கினால் இந்தியாவின் ஒரு வருட கட்டடத் தேவையைப் பூர்த்தி செய்யலாம். இதனைத் தவிர்க்க ஒரே வழி அதிகளவில் மரங்களை நடுவதுதான். வீட்டிலேயே பயனுள்ள மரங்களை நடலாம். வீட்டில் 10 முதல் 12 மரங்கள் வரை வளர்க்கலாம். அவை முருங்கை, வாழை, மா, பலா, பப்பாளி, சீத்தாப்பழம், கொய்யா, கறிவேப்பிலை, நெல்லிக்காய், எலுமிச்சை, வேப்பிலை போன்றவை.

முருங்கை மரம்: இதிலுள்ள இலை, பூ, காய் என அனைத்தும் இரும்புச்சத்து, சுண்ணாம்பு சத்து, புரதச்சத்து நிறைந்தது. மலச்சிக்கலைப் போக்க உதவும்.

பப்பாளி மரம்: இந்தப் பழத்தில் வைட்டமின் ஏ, பி, சி உள்ளன. பப்பாளி வெப்ப மண்டலம் சார்ந்த பழங்கள் கொண்டது. பப்பாளி மரங்கள் பெரிய இலைகளைக் கொண்டுள்ளன. அவை மருத்துவ குணங்கள் கொண்டவை.

நெல்லிக்காய் மரம்: சளித்தொல்லை போக்கும் நெல்லிக்காயில் வைட்டமின் சி மட்டுமல்ல, சகல நோய்கள் போக்கும் அருமருந்தாக நெல்லிக்காய் உள்ளது.

எலுமிச்சை மரம்: எலுமிச்சை பழத்தில் வைட்டமின் சி நிரம்பியுள்ளது. இது ஒரு சக்தி வாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாகும். இது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. உடலுக்கு குளிர்ச்சி தரும்.

இதையும் படியுங்கள்:
வீட்டை சோலைவனமாக்க தண்ணீரில் வளரும் இந்த 6 செடிகள் போதும்!
One solution for rain, wind, health, and wealth

வாழை: அடி முதல் நுனி வரை பயன் தரும் மூலிகை மரம் வழை. இந்த மரத்தை எந்த இடத்தில் வைத்தாலும் அசராமல் வளரும். இவை தவிர, சீத்தா மரம், கொய்யா மரம் போன்றவற்றின் பழங்கள் மற்றும் அதன் இலைகளும் மருத்துவப் பலன்களைத் தரக்கூடியது.

கறிவேப்பிலை மரம்: இது எளிதாகவும் வேகமாகவும் வளரும் மரங்களில் ஒன்றாகும். பல சமையல் உணவுகளில், சுவையும், ஆரோக்கியமும் தரும் மூலப்பொருளான இது, 15 அடி உயரம் வரை வளரலாம். இதை உங்கள் வீட்டில் பின்புறம் வளர்க்க உகந்தது.

வேப்ப மரம்: வீட்டின் முன் குளிர்ச்சி தரும் வேப்ப மரத்தை வளர்க்கலாம். வீட்டுக்கு அருகில் ஒரு வேப்பமரம் இருந்தால் நமது ஆரோக்கியம் எப்போதும் மேம்பட்ட நிலையில் இருக்கும். இதை ஒரு மூலிகை மரம் என்றும் சொல்லலாம். இதன் இலைகள் சிறந்த கிருமி நாசினியாக செயல்படுகிறது. வீட்டின் முன்புறம் வேப்பமரம் தவிர்த்து, பலதரப்பட்ட பயன்கள் தரும்.

தென்னை மரம், மாமரம், பலா மரம் போன்றவற்றை வளர்க்கலாம். மாமரத்தின் இலை முதல் அதன் கனி வரை பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்டது. மா மரம் காலநிலை மாற்றத்தைத் தணிக்க உதவும் என்று புதிய ஆய்வுகள் வெளிவந்துள்ளன. வீட்டின் பின்புறத்தில் முருங்கை, மாமரம், பலாமரம், எலுமிச்சை மரம், வேப்ப மரம் ஆகிய மரங்களை வளர்த்தால் வீட்டில் செல்வம் பெருகும்.

இதையும் படியுங்கள்:
மண் வளத்தையும், சுற்றுச்சூழலையும் பாதுகாக்கும் காட்டுக் காவலன் நம்பட்டின் ரகசியம்!
One solution for rain, wind, health, and wealth

மரங்கள் அதிகம் உள்ள இடங்களில் வளரும் குழந்தைகளுக்கு ஆஸ்துமா வருவதற்கான வாய்ப்பு குறைவு. அதிக மரங்கள் உள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் குறைவான இருதயம் மற்றும் வளர்சிதை மாற்ற உடல்நலக் குறைபாடுகளைக் கொண்டுள்ளனர் மற்றும் இருதய அல்லது நுரையீரல் நோயால் இறக்கும் வாய்ப்பு குறைவு என்கிறார்கள்.

மரங்கள் இயற்கையான நிழல் தருகின்றன. உங்கள் வீட்டைச் சுற்றியுள்ள வெப்பத்தைக் குறைத்து வீசும் காற்றை குளிர்விக்கும். தோட்டம் மற்றும் பழ மரங்களைப் பராமரிப்பது ஒரு மன சிகிச்சையாக இருக்கும். ஆம், அது மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. மரங்கள் சூழ்ந்த இடத்தில் வாழும் மக்கள் நல்ல ஆரோக்கியத்துடன், நீண்ட ஆயுளுடன் வாழ்வதாக ஜப்பானிய ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com