உலகில் தனிமையாக வாழும் திமிங்கலங்கள் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? வாருங்கள் பார்ப்போம்.
இவ்வுலகில் படைக்கப்பட்ட அனைத்து உயிரினங்களுமே ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ்வது போலத்தான் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், எதோ ஒரு கட்டத்தில் மனிதர்களோ இல்லை மற்ற உயிரினங்களோ தனிமையையே விரும்புவார்கள். மகிழ்வோடு அதை ஏற்றும் கொள்வார்கள். தனிமையின் அழகு தனிதான். தனிமையை விரும்பும் மனிதர்களை நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், திமிங்கலத்தைப் பார்த்திருப்போமா?
இந்த வகையான திமிங்கலங்கள் ஹெர்ட்ஸ் திமிங்கலங்கள் என்று அழைக்கப்படுகின்றன. ஏனெனில், சாதாரண திமிங்கலத்தில் அதிர்வெண் 15 முதல் 25 ஹெர்ட்ஸ் வரை இருக்கும். ஆனால், தனிமை திமிங்கலங்களான ஹெர்ட்ஸ் திமிங்கலங்களின் அதிர்வெண்ணானது 52 ஹெர்ட்ஸாக இருக்கும். இந்த சத்தத்தை மற்ற சாதாரண திமிங்கலங்களால் கேட்கமுடியாது என்று கூறுகிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். இதனாலேயே இதன் தனித்துவம் இதனுடைய தனிமைக்கு காரணமாயிற்று. உதாரணத்திற்கு ஒரு நாயின் சத்தத்தை மற்ற நாய்களாலோ அல்லது மற்ற உயிரினங்களாலோ கேட்க மற்றும் புரிந்துக்கொள்ள முடியவில்லை என்றால், அந்த நாய் தனிமையில்தானே இருக்கும். அதேபோல்தான் இந்த ஹெர்ட்ஸ் திமிங்கலமும்.
இந்த வகையான திமிங்கலமானது 1991ம் ஆண்டு கண்டறியப்பட்டது. அதாவது அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையிலான போரில் ரஷ்யாவின் நீர்மூழ்கி கப்பலைக் கண்டறிவதற்காக கடலுக்கு அடியில் ஹைட்ரோபோன்களை அமெரிக்கா வைத்தது. இதில் கடலுக்கு அடியில் கேட்கும் சத்தங்கள் அனைத்துமே அமெரிக்கா ராணுவத்திற்கு கேட்கும். அப்போதுதான் இந்த திமிங்கலத்தின் சத்தமும் கேட்டிருக்கிறது. பின்னர் இது என்ன உயிரினம் என்பதை தெரிந்துக்கொள்ள மிகவும் ஆர்வம் காட்டினர்.
சாதாரண திமிங்கலத்தின் சத்தமானது 30 ஆயிரம் மைல்கள் வரைப் பயணிக்கும். ஆனால், இந்த தனிமை திமிங்கலத்தின் பிரம்மாண்ட சத்தம் அந்த சத்த வலைப்பின்னலிலிருந்து அதிகமாகயிருந்தது. இந்த சத்தத்தின்மூலமே தனிமைப்படுத்தப்படுகிறது. இவை ஆய்வாளர்களின் கண்ணில் சிக்கவில்லை. ஆனால், கலிபோர்னியா மாகாணத்தில் இன்றும் இது சுற்றித்திரிகிறது.
உலகின் அதிசயமான உயிரினங்கள் இன்னும் ஏராளம் உள்ளன. அவற்றை அறிந்துக்கொள்ள வேண்டுமென்றால், ஒரு வாழ்வு போதாது என்பது மட்டும் உண்மை.