
இது ஆப்பிரிக்காவில் வளரக்கூடிய மரம். இந்த மரங்கள் பூமியில் பழமையான மரங்களாகும். மிகவும் வறண்ட பகுதியான ஆப்ரிக்காவின் சவன்னா பகுதியில் செழித்தோங்குகிறது. மழைக்காலங்களில் பாவோபாப் மரம் அதன் அகன்ற கிளைகளில் தண்ணீரை உறிஞ்சி சேமிக்கிறது. தன் கிளையில் சேமித்து வைத்திருக்கிற தண்ணீரால் பல வருடங்கள் வாழும் மரம் இது. ஒரு முழு மரம் பல்லாயிரக்கணக்கான தண்ணீரை சேமிக்க முடியும். அதனால் இது வறட்சியிலும் வாழக்கூடிய மரமாகிறது.
இது 30மீட்டர் வரை வளரமுடியும். பாவோபாப் மரம் விலங்குகள் மற்றும் மனிதர்களுக்கு தங்குமிடம், உணவு மற்றும் தண்ணீர் வழங்குகிறது. அதனால்தான் பல சவன்னா சமூகங்கள் தங்கள் வீடுகளை கட்டியுள்ளனர். பாவோபாப் மரங்களுக்கு அருகிலேயே வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இந்த மரம் ஒரு உயிர் போன்ற மரமாக கருதப்படுகிறது. மரத்தின் பழங்களில் விதிவிலக்காக சத்துக்கள் நிறைந்துள்ளன.
உலகிலேயே இயற்கையாகவே கிளையிலேயே பழுத்து காய்ந்து போகும் ஒரே பழம் பாவோப் பழம். கீழே விழுந்து கெடுவதைவிட கிளையிலேயே இருந்து 6மாதம் வெயிலில் பழுக்கும்.
பழத்தின் பருப்பு மொத்தமாக காய்ந்துவிடும். அதன் பச்சை வெல்வெட் பூச்சு கடினமான தேங்காய் ஓடாக மாறுகிறது. இது இயற்கையான வடிவில் 100 சதவீதம் தூய பழமாகும். இந்த பழத்தில் 3வருட இயற்கையான சத்து வாழ்க்கைக்கு உகந்ததாக உள்ளது. சோர்வு,செரிமானம் நோய் மற்றும் தொற்றியிருந்தது பாதுகாப்பு மற்றும் சருமத்தை அழகுபடுத்த பல ஆண்டுகளாக இது பயன்படுத்தப்படுகிறது.
இந்த மரங்களில் வெள்ளை பூக்கள் அந்தி வேளையில் பூக்கும். இந்த பூக்கள் மகரந்த சேர்க்கையாக வௌவ்வால்களை ஈர்க்கின்றன. இந்த வௌவால்கள் பூக்களின் தேனை உண்பதற்காக அதிக தூரம் பறந்து வருகின்றன. இந்த மரங்கள் பறவைகள் கூடு கட்டும் முக்கியமான இடங்களாக உள்ளன.
இந்த மரத்தின் கிளைகளில் இருந்து கயிறுகள் தயாரிக்கப்படுகின்றன. அதன் இலைகளை கால்நடைகள் உண்ணும்போது அதன் தண்டின் தெளிவான நீரை குடிக்க முடியும். இதன் பழவிதைகளால் தயாரிக்கப்பட்ட எண்ணை அழகு சாதனப் பொருட்களில் பயன் படுத்தப்படுகிறது.
நேஷனல் ஜியோ கிராஃபிக் அறிக்கையின்படி இந்த மரத்தின் தனித்துவமான குணநலன்களால் இதன் தேவை அதிகரித்து வருகிறது.