Adaptogens: மன அழுத்தத்தைக் குறைக்கும் மூலிகைகள்! 

Adaptogens
Adaptogens

எதிர்பார்ப்புகள் நிறைந்த இன்றைய நவீன உலகில் மன அழுத்தம் என்பது நம் வாழ்வில் தவிர்க்க முடியாத அம்சமாகிவிட்டது. வேலை, குடும்பம் மற்றும் தனிப்பட்ட பொறுப்புகளின் தொடர்ச்சியான இயக்கங்களினால், நமது மனநலம் பெரிதளவில் பாதிக்கப்படுகிறது. இதற்கு நவீன மருத்துவம் பல தீர்வுகளை வழங்கினாலும், மன அழுத்தத்திலிருந்து நிவாரணம் அளிப்பதில் இயற்கை சில மூலிகைகளை வைத்துள்ளது. இவற்றை ஆங்கிலத்தில் Adaptogens என அழைப்பார்கள். இவை காலகாலமாக நமது ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. 

Adaptogens என்றால் என்ன? 

Adaptogens என்பது மன அழுத்தத்தை குறைத்து சமநிலையை மீட்டெடுக்க உதவும், தாவரப் பொருட்கள், காளான்கள் மற்றும் மூலிகைகளைக் குறிக்கும் சொல்லாகும். இத்தகைய மூலிகைகளை எடுத்துக் கொள்வதால், இயற்கையாகவே மன அழுத்தம் குறைவதாக சொல்லப்படுகிறது. 

மன அழுத்தத்தைக் குறைக்கும் மூலிகைகள்: 

அஸ்வகந்தா: இந்திய ஜின்செங் அல்லது குளிர்காலச் செர்ரி என அழைக்கப்படும் அஸ்வகந்தா, ஆயுர்வேத மருத்துவத்தில் மிகவும் மதிப்புமிக்க மூலிகைகளில் ஒன்றாகும். இது மன அழுத்தத்தை எதிர்த்து போராட உதவுகிறது. உடலில் உற்பத்தியாகும் மன அழுத்த ஹார்மோனான கார்ட்டிசோலின் அளவை இது குறைப்பதால், நரம்பு மண்டலம் அமைதியாகி மன அழுத்தத்திற்கு எதிராக செயல்படுகிறது. 

பிராமி: இந்த மூலிகையை ‘அருள் மூலிகை’ எனக் கூறுவார்கள். ஆயுர்வேதத்தில் பல நூற்றாண்டுகளாக மன அழுத்தத்தைக் குறைத்து புத்துணர்ச்சியூட்டும் விளைவுக்காகப் பயன்படுத்தப்படுகிறது. இது அமைதி மற்றும் தெளிவான உணர்வை அளிப்பதால் மன அழுத்தம், பதட்டம் மற்றும் மனச்சோர்வை எதிர்த்து போராட உதவுகிறது. பிராமி மூலிகை அறிவாற்றல் செயல்பாட்டை மேம்படுத்தி, நினைவகத் திறனையும் மேம்படுத்துவதால் சூடான பாலில் கலந்து இதை உட்கொள்வதால் பல நன்மைகள் கிடைக்கும். 

துளசி: துளசியை ‘புனித துளசி’ என்றும் அழைப்பார்கள். இது இந்தியாவில் பல்லாயிரம் ஆண்டுகளாக மருத்துவ குணங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. இது அதன் அடாப்டோஜெனிக் மற்றும் மன அழுத்த எதிர்ப்பு பண்புகளுக்குப் புகழ்பெற்றது. தினசரி காலை வேளையில் துளசி இலைகளை சாப்பிடுவதால், பதட்டத்தைக் குறைத்து மனதுக்கு அமைதி அளிக்கிறது. துளசி பயன்படுத்தி தேனீர் தயாரித்து குடித்து வந்தால் மனம் எப்போதும் புத்துணர்ச்சியுடன் இருக்கும். 

இதையும் படியுங்கள்:
Drug-GPT: மருந்துகளைப் பரிந்துரைக்கும் AI கருவி! மருத்துவத்துறையில் ஒரு புரட்சி!
Adaptogens

ஜடாமான்சி: இது இமாலயத்தை பூர்வீகமாகக் கொண்ட ஒரு மூலிகையாகும். பல நூறு ஆண்டுகளாக ஆயுர்வேதத்தில் மன அழுத்தம் மற்றும் பதட்டத்திற்கான இயற்கை தீர்வாக பயன்படுத்தப்படுகிறது. இது நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தி தளர்வைக் குறைக்க உதவும். ஜடாமான்சி தூக்கத்தை மேம்படுத்தவும், மன உளைச்சலைக் குறைக்கவும் பிரபலமாக அறியப்படும் மூலிகை ஆகும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com