ஆப்பிரிக்காவின் பிளவு: ஒரு கண்டத்தின் பிரிவும், புதிய கடலின் உருவாக்கமும்!

Why is Africa dividing?
On the continent of Africa
Published on

ப்பிரிக்கா கண்டத்தில் பல லட்சம் கோடி ஆண்டுகளாக நடைபெற்று வரும் புவி இயக்கம் இன்று புதிய வடிவத்தை எடுக்கிறது. கிழக்கு ஆப்பிரிக்கா பகுதியில் உருவாகும் மிகப்பெரிய பிளவு — East African Rift  கண்டத்தை மெதுவாக இரண்டு பகுதிகளாகப் பிரித்து வருகிறது. இந்த இயற்கை மாற்றம் வெறும் பிளவல்ல; வருங்காலத்தில் ஒரு புதிய கடல் உருவாகும் மிகுந்த வாய்ப்பை விஞ்ஞானிகள் முன்வைக்கின்றனர்.

ஆப்பிரிக்கா பிளவால் உருவாகும் புதிய கடல்

ஆப்பிரிக்கா ஏன் பிளவுகிறது?

ஆப்பிரிக்க கண்டத்தின் கீழ் இருக்கும் டெக்டோனிக் பிளேட்டுகள் மெதுவாகப் பிரிவதால்தான் இந்த பிளவு ஏற்படுகிறது. கீழே உள்ள இரண்டு பிளேட்டுகள் ஒருவருக்கொருவர் விலகுகின்றன. Nubian Plate (மேற்கு ஆப்பிரிக்க பகுதி). Somali Plate (கிழக்கு ஆப்பிரிக்க பகுதி) இந்த விலகல் செயல்முறையை continental rifting என்று அழைக்கப்படுகிறது.

பிளவு எங்கு, எவ்வாறு நடக்கிறது?

பிரிவானது மூலமாக உருவாகும் மிகப்பெரிய பிளவை East African Rift என்று சொல்வார்கள். முக்கியமாக பிளவு ஏற்படும்  பகுதிகள் எத்தியோப்பியா (Afar Triangle), கென்யா, தான்ஸானியா, ருவாண்டா, உகாண்டா, மொசாம்பிக்.

புதிய கடல் எப்படி உருவாகும்?

பிளவு உருவாகும்  பிளேட்டுகள் விலகும்போது நிலம் விரியும். பல இடங்களில் 8 கி.மீ வரை பிளவு ஏற்படுகிறது. எடுத்துக் காட்டாக எத்தியோப்பியாவின் Afar பகுதியில் 2005ல் பெரிய பிளவு உருவானது.  இந்த Afar பகுதி மிகுந்த வெப்பம் (115° பாரன்ஹீட்) இருக்கும். ஏனெனில் அதன் அடியில் எரிந்து கொண்டிருக்கும்  எரிமலைகள் இருப்பதால், எரிமலைக் குழம்பு என்ற ஏரியும் (எர்த்தனாக்கல்) இருக்கும். பூமியின் கோரில் இருக்கும் வெப்பம் எந்த அளவுக்கு பிரமாண்டமானது என்பதை  ஆராய்ச்சி பண்ணும் இடம் தான் எர்த்தனாலை.

இதையும் படியுங்கள்:
லட்சக்கணக்கான ரூபாய் வருமானம் தரும் வைக்கோல் வியாபாரம்!
Why is Africa dividing?

இந்த இடத்தின் அருகில் லூசி என்கிற skeleton கண்டு பிடிக்கப்பட்டது. மனித இனம்  எப்படி பரிணாமம் அடைந்திருக்கும் என்பதை படிப்பதற்கு முக்கியமான இடம். பூமியின் வரலாற்றை தாங்கிய  இடம்தான் லூசி.

பிளவு அடையும் போது இடைவெளி உருவானதால், பூமியின் அடிக்கட்டில் இருக்கும் மாக்மா மேலே சென்று உறையும் புதிய பூமிப்பரப்பு உருவாகும். பிளவு மேலும் விரியும் போது,  இந்தியப் பெருங்கடலின் நீர் இந்த இடைவெளிக்குள் புகும். இதுவே புதிய கடல் உருவாக்கும் தொடக்கம்.

உருவாக இருக்கும் புதிய கடல் எந்த பகுதிகளில்?

புதிய கடல் Afar Depression (எத்தியோப்பியா) மற்றும் Red Sea இணையும் பகுதியில் உருவாகும். பிரிவால்  சோமாலியா, எத்தியோப்பியா, கென்யாவின் கிழக்கு பகுதிகள் ஒரு தனி சிறிய கண்டமாக மாறும். மேற்கு ஆப்பிரிக்கா  பெரிய ஆப்பிரிக்கக் கண்டமாகத் தொடரும்

இது மனிதர்களின் வாழ்க்கைக் காலத்தில் நடக்காது. விஞ்ஞானிகள் கூறும் கால அளவு  5 மில்லியன் முதல் 20 மில்லியன் ஆண்டுகள் வரை எடுக்கலாம். மிகவும் மெதுவான புவி இயக்கம். அடிக்கடி சிறிய நிலநடுக்கங்கள், எரிமலைச் செயல்பாடுகள்,  ஆழமான பள்ளத்தாக்குகள், புதிய ஏரிகள் உருவாகுதல். (எ.கா. Lake Tanganyika)

இதையும் படியுங்கள்:
ஒரே செடியில் மேலே தக்காளி, கீழே உருளைக்கிழங்கு: இதென்ன அதிசயம்?
Why is Africa dividing?

புதிய கடல் உருவானால் சோமாலியா & எத்தியோப்பியா கிழக்கு பகுதி  தனி மைக்ரோ-கண்டம். Red Sea புதிய கடலுடன் இணைந்து விரிந்து பெரிய கடலாக மாறும். ஆப்பிரிக்கா கண்டம் இன்றைய தோற்றத்தில் இருந்து மாறும்

ஆப்பிரிக்கா தற்போது அமைதியாகப் பிளந்துகொண்டு இருக்கும். மிகப்பெரிய புவி மாற்றம் எதிர்காலத்தில் ஒரு புதிய கடலை உருவாக்கும். இது கோடிக்கணக்கான ஆண்டுகள் எடுக்கக்கூடிய ஒரு இயற்கை செயல்முறை. இந்த பிளவு காரணமாக ஆப்பிரிக்கா இரண்டு பெரிய பகுதிகளில் பிரிந்து, உலக வரைபடம் மெல்ல மாறும். புவியின் அடிப்படை அமைப்பு தொடர்ந்து மாற்றம் அடைவதற்கான சிறந்த உதாரணம் இதுதான்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com