காற்று மாசுபாடு உலகின் மிகப்பெரிய சுகாதார மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சினைகளில் ஒன்றாகும். உலகளவில் காற்றின் மாசுபாடு சுற்றுச்சூழல் ஆர்வலர்களை கவலைக் கொள்ள வைக்கிறது. காரணம் காற்று மாசுபட்டால் அந்த இடம் வசிக்க தகுதியில்லாத இடமாக மாறும். இதனால் லட்சக்கணக்கான மக்கள் மிகப் பெரியளவில் இடம் பெயரும் கட்டாயத்தை நோக்க வேண்டும்.
மாசுபட்ட இடத்தில் வசிப்பவர்களின் நுரையீரல் முதலில் பாதிக்கப்படும். சுவாசக் கோளறுகள் ஏற்படும். இதனால் மக்கள் எளிதிலேயே நோய்வாய்ப்பட்டு மோசமான உடல் நிலையை அடையலாம். அவர்கள் அதில் இருந்து மீண்டு வர வேண்டும் என்றால் வேறு நல்ல காற்றுள்ள இடத்தில் வசிக்க வேண்டும். காற்று மாசுபாடு உலகின் முக்கிய ஆபத்து காரணிகளில் ஒன்றாகும். ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கான இறப்புகளுக்கு காற்று மாசுபாடு காரணமாகிறது.
காற்று மாசுபாடு வெளிப்புற மற்றும் உட்புற துகள்கள் மற்றும் ஓசோன் ஆகியவற்றின் கலந்து மோசமாக்குகிறது. இதய நோய், பக்கவாதம், குறைந்த சுவாச நோய்த்தொற்றுகள், நுரையீரல் புற்றுநோய், நீரிழிவு மற்றும் நாள்பட்ட தடுப்பு நுரையீரல் நோய் (சிஓபிடி) உள்ளிட்ட இறப்புக்கான பல முக்கிய காரணங்களுக்கான ஆபத்து காரணியாகும்.
காற்று மாசுபாட்டு தர அட்டவணை:
காற்றுத்தரம் - வாழ்க்கைத்தரம்
0-50 - வாழும் சூழலுக்கு ஏற்றது
51-100 - மிதமானது
101-150 - சுவாசப் பிரச்சனை உள்ளவர்களுக்கு ஏற்ற இடம் அல்ல
151-200 - ஆரோக்கியமற்றது
201-300 - மிகவும் மோசமானது
301(+) - மிக அபாயகரமானது
இந்த அட்டவணையில் உள்ள அளவுகள் சுற்றுச் சூழல் மாசுபாட்டின் அளவீடுகளை கொண்டு வாழிட தரத்தை நிர்ணயிக்கின்றன.
உலகின் அதிக காற்று மாசுபாடுகளைக் கொண்ட நகரங்கள் ஆசிய நாடுகளில் தான் அதிகம் உள்ளது. முதல் 10 இடங்களில் எந்த அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளும் இடம்பெறவில்லை.
ஒப்பீட்டளவில் மிக மோசமான சூழலில் இந்தியாவும் இந்தியத் தலை நகரும் உள்ளது. பெருகி இருக்கும் மக்கள் தொகையும் தொழிற் சாலைகளும் வாகனங்களும் இந்தியாவின் வளர்ச்சியை விட வாழும் சூழலை மோசமாக்குகின்றது.
மோசமான காற்று தரம் கொண்ட நகரங்களின் பட்டியல் பின்வருமாறு:
நகரம் - காற்றுத்தரம்
லாகூர் - 392
டெல்லி - 340
மும்பை - 158
டாக்கா - 157
கொல்கொத்தா - 156
இந்தப் பட்டியலில் பாகிஸ்தானின் லாகூர் நகரம் முதலிடத்தில் உள்ளது. அதன் காற்றுத் தரம் ஆபாயகர நிலையில் உள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் இந்தியாவின் டெல்லி உள்ளது. இந்தியாவின் மற்ற பெரிய நகரங்களான மும்பையும், கொல்கொத்தாவும் கூட முதல் 5 இடங்களில் உள்ளது. இந்தியா தான் உலகிலேயே அதிக மாசுபாடுகளைக் கொண்டுள்ளது.