சுற்றுச்சூழல் சீர்கேட்டால் பெரும் அபாயத்தில் ஆக்ரா மாநகரம்!

Agra
AgraImg Credit: Kayak
Published on

முகலாயர்களின் தலைநகராகவும் இந்தியாவின் பெரிய நிலப்பரப்பின் ஆட்சி மையமாக இருந்த ஆக்ராவை அனைவரும் அறிவோம். ஆக்ரா பெரிய கோட்டைகளுக்கும் தாஜ்மஹால் மற்றும்  சில முகலாயர்களின் சமாதிகளின் கட்டிடக்கலை சிறப்புகளுக்கும் பெயர் பெற்றது. முகலாயருக்குப் பின் தனது விழ்ச்சியை ஆக்ரா சந்தித்தது. 

ஆக்ரா சில நூற்றாண்டுகளுக்கு முன் காலணி தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டது. அது வளர்ச்சியடைந்து நாட்டின் பெரிய காலணி உற்பத்தி மையமாக மாறியது. தினமும் பத்து லட்சம் ஜோடி செருப்புகள் இங்கு தயாரிக்கப்படுகின்றன. ஆக்ராவில் தோல் செருப்புகள் பிரசித்தி பெற்றவை.

ஆக்ரா நகரம் காலணி தொழில் கழிவுகளில் இருந்து சுற்றுச்சூழல் அச்சுறுத்தலை எதிர்கொள்கிறது. இந்தியாவின் 65% காலணி தேவையை பூர்த்தி செய்யும் ஒரு மாநகரம், ஒவ்வொரு நாளும் சுமார் 45 டன் காலணி கழிவுகளை உருவாக்குகிறது என்று அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தின் (CSE) சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. 

அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தின் ஆராய்ச்சி, ஒரு வருடத்திற்கு மேலாக நடத்தப்பட்டு, ஆக்ராவில் நடைபெற்ற தொழில் முனைவோர் கூட்டமைப்பில் சமர்ப்பிக்கப்பட்டது. ஆக்ராவின் சிக்கலான எதிர்கால சூழ்நிலையை எடுத்துக்காட்டியது. இங்கு தினசரி உருவாகும் 45 டன் காலணி கழிவுகளில்,13 டன்களுக்கு மேல் முறைசாரா 6200 வீட்டு தொழில்கூடங்களில் இருந்து வருகிறது,  அதே நேரத்தில் முறையான உற்பத்தி இத்துறை 31 டன்களுக்கு மேல் உற்பத்தி செய்கிறது.

ஆக்ரா முனிசிபல் கார்ப்பரேஷன் முறைசாரா நிறுவனங்களில் இருந்து உருவாகும் காலணி கழிவுகளில் சுமார் 57 சதவீதத்தை சேகரித்தாலும், மீதமுள்ளவை ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 6 டன்கள்  இன்னும் வடிகால்களில், திறந்தவெளிகளில் அல்லது எரிக்கப்படுகிறது. இது பெரிய அளவில் சுற்றுச்சூழல் அபாயத்தை உருவாக்குகியுள்ளது. 

இதையும் படியுங்கள்:
பேரிடரின் பின்னணி என்ன?
Agra

தினசரி 6 டன் ரப்பர், பாலிமர் மற்றும் தோல் பொருட்களை எரிப்பதால் ஏற்படும் காற்று மாசுபாடு சுவாச பிரச்சனைகளுக்கும் பல நோய்களுக்கும் மூலாதாரமாக இருக்கிறது. இந்த கழிவுகளை எரிப்பது, குறிப்பாக குளிர்கால மாதங்களில், நச்சுப் புகைகளை காற்றில் வெளியிடுவது மற்றும் உள்ளூர்வாசிகளுக்கு கடுமையான உடல்நல அபாயங்களை ஏற்படுத்துகிறது. வடிகால்களில் கழிவுகளை கொட்டும் நடைமுறையும் அடைப்புகளுக்கு வழிவகுக்கிறது, நீர்நிலைகளையும் மாசுபடுத்துகிறது.

அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தின் திடக்கழிவு மேலாண்மை மற்றும் சுற்றறிக்கையில் குறிப்பிடுகையில், "ஆக்ராவின் காலணித் தொழில் ஒரு பொருளாதார எந்திரம் மட்டுமல்ல, கணிசமான கழிவுகளின் ஆதாரமாகவும் உள்ளது. இந்த கழிவுகள் கட்டுப்படுத்தப்படாவிட்டால், கடுமையான சுற்றுச்சூழல் மற்றும் பொது சுகாதார அபாயங்களை ஏற்படுத்தும்."

காலணி கழிவுகளை மறுசுழற்சி மற்றும் மறுசுழற்சி செய்வதற்கான சாத்தியக்கூறுகளையும் இந்த ஆய்வு எடுத்துக்காட்டுகிறது. தற்போது பொறுப்பாக இருப்பதை பொருளாதார வாய்ப்பாக மாற்றுகிறது. உதாரணமாக, தோல் ஸ்கிராப்புகள் மற்றும் பிற பொருட்களை மீண்டும் பயன்படுத்துவதன் மூலம் சாவிக்கொத்துகள் அல்லது தரை விரிப்புகள் போன்ற சிறிய தயாரிப்புகளை உருவாக்கலாம். அதன் மூலமும் பொருளாதாரம் பெறலாம்.

இதையும் படியுங்கள்:
மனிதர்களைப் போல் பெயர் சொல்லி அழைத்துக்கொள்ளும் விலங்குகள்!
Agra

மாநில அரசு ஒரு நிலையான கழிவு மேலாண்மை அமைப்பு ஏற்படுத்த வேண்டும். பெரிய மற்றும் சிறிய உற்பத்தியாளர்களை அவர்கள் உருவாக்கும் கழிவுகளுக்கு பொறுப்பு ஏற்க வேண்டும். இல்லாவிட்டால் அவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும். குறிப்பாக முறைசாரா துறையிலிருந்து வரும் கழிவுகளை சேகரிக்க ஆக்ரா முனிசிபல் கா்ப்பரேஷன் பிரத்யேக வாகனங்கள் மற்றும் பணியாளர்களை ஈடுபடுத்த வேண்டும் என்று CSE பரிந்துரைத்தது. இந்த அணுகுமுறை பொது இடங்களில் கழிவுகளை கொட்டுவதையோ அல்லது எரிப்பதையோ தடுக்க உதவும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com