காற்று மாசுபாடு கற்றுத் தரும் பாடம்!

காற்று மாசுபாடு
Air pollutionhttps://medium.com
Published on

டக்கு திசையிலிருந்து வீசும் காற்றுக்கு வாடைக்காற்று என்றும், தெற்கிலிருந்து வீசும் காற்றுக்கு சோழகம் எனவும், கிழக்கிலிருந்து வீசும் காற்றுக்கு கொண்டல் என்றும், மேற்கிலிருந்து வீசும் காற்றுக்கு கச்சான் எனவும், காற்று வீசும் திசைக்கு தக்கவாறு காற்றின் பெயர்களைக் கூட வைத்து கொண்டாடியது நமது தமிழ் சமூகம்தான். அறிவியல் ரீதியாக காற்றுக்கு சூரிய காற்று, கோள் காற்று, வன் காற்று, சூறாவளி காற்று என்ற பெயர்களும் உள்ளன.

பலமான காற்று நீண்ட நேரம் வீசினால் சூறாவளி என்றும், குறைந்த நேரத்தில் மிகவும் வேகமாக வீசும் காற்றுக்கு வன்காற்று என்றும், சூரியனிலிருந்து வெளியேறும் வளிமங்கள் சூரியக் காற்று என்றும், கோள்களிலிருந்து வெளியேறும் வளிமத் தனிமங்கள் கோள் காற்று என்றும் அழைக்கப்படுகிறது.

உலக உயிரினங்கள் உயிர் வாழ காற்று மிகவும் அவசியம். எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் காற்றை மாசுபடாமல் காப்பது நம் கடமை. மாசுபட்ட காற்றை சுவாசிப்பதன் மூலம் ஆஸ்துமா, காசநோய், சுவாசக் கோளாறுகள், நுரையீரல் பிரச்னைகள் உருவாகின்றன. காற்றால் புராதன நினைவுச் சின்னங்கள் கூட பாதிப்புக்கு உள்ளாகின்றன. இதற்கு சிறந்த உதாரணமாக தாஜ்மஹாலை கூறலாம். பளிங்குக் கல் மாளிகையாக இருந்த தாஜ்மஹால் மாசு காற்றால்  இன்று நிறம் மாறி இளம் மஞ்சளாகக் காட்சி தருகிறது. டெல்லியின் சில இடங்களில் மாசடைந்த காற்றால் மக்கள் மூச்சு விட சிரமப்படுவதாக் கூட கூறப்படுகிறது.

விமானங்களில் இருந்து வெளியேறும் நைட்ரஜன் ஆக்சைடும், குளிர்சாதன பெட்டியிலிருந்தும், ஏஸியிலிருந்தும், குப்பை கிடங்குகளை எரிப்பதன் மூலமும், பிளாஸ்டிக் கழிவுகளை எரிப்பதன் மூலமும் வெளியேறும் வாயுக்களால் ஓசோன் படலம் ஓட்டையாகிப் போனது. நம் வருங்கால சந்ததியினர் சுத்தமான காற்றை சுவாசிக்க வேண்டாமா? காற்றாலைகளை அமைத்து காற்றின் சக்தியை பயன்படுத்தி மின்சாரத்தை உருவாக்குகிறது. இவை இயற்கை வளங்களை குறைக்காது.

இதையும் படியுங்கள்:
ஆப்பிள், ஆரஞ்சு பழங்களில் ஒட்டப்படும் ஸ்டிக்கர் சொல்லும் செய்தி தெரியுமா?
காற்று மாசுபாடு

காற்றாலை மின்சாரம் மற்ற மின் உற்பத்தி முறைகளை ஒப்பிடும்போது செலவும் குறைவு,  கார்பன் வெளியேற்றத்தையும் குறைத்து சுற்றுச்சூழலையும் பாதுகாக்கிறது. மக்களின் ஆரோக்கியத்திற்கும் அன்றாட வாழ்க்கைக்கும் மாசுபடாத சுத்தமான காற்று முக்கியமானது. மனிதன் உணவு இல்லாமல் கூட சில நாட்கள் வாழ்ந்து விட முடியும். ஆனால், காற்று இல்லாமல் ஒரு நிமிடம் கூட வாழ முடியாது. மனிதனுக்கு மட்டுமின்றி தாவரங்கள், விலங்குகளுக்கும் காற்று மிகவும் அவசியம்.

காற்று மாசுபட்டால் சுற்றுச்சூழலில் மிகப்பெரிய ஆபத்தும், நோய்கள் பெருகுவதும் ஏற்படும். எனவே,  மாசுபாட்டை குறைத்து சுற்றுச்சூழலை பாதுகாக்க இனியாவது விழித்துக் கொண்டு முயற்சி எடுப்போம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com