
பொதுவாக, எந்த உயிரினமும் எரிமலை குழம்புகளின் அருகில் உயிர் வாழ முடியாது. இதற்கு காரணம் எரிமலை குழம்பில் இருந்து வெளிவரும் கடுமையான வெப்பம் மற்றும் கந்தக அமிலத்தின் கடுமையான நெடி.
ஆனால், இதை எல்லாம் கடந்து ‘அல்வினிகோஞ்சா’ என்று அழைக்கப்படும் நத்தைகள், எரிமலை குழம்புகள் கசியும் இடங்களில் வாழ்ந்து கொண்டு எரிமலை குழம்பில் கசியும் கந்தகத்தையும் இதர சில ரசாயனங்களை உணவாக உட்கொண்டு வாழ்கின்றன. அல்வினிகோஞ்சா இனத்தைச் சேர்ந்த முடி கொண்ட நத்தைகள், பாஸ்கென்டானிடே (Paskentanidae) குடும்பத்தில் உள்ள ஆழமான நீர் கடல் நத்தைகள் மற்றும் கடல் காஸ்ட்ரோபாட் மொல்லஸ்க்குகளின் (gastropod mollusks) ஒரு இனமாகும். இந்த நத்தைகள் வெப்பநிலை (5–33 °C (41–91 °F)), pH மற்றும் வேதியியல் கலவைகளில் பெரிய மாறுபாடுகளைத் தாங்கும் சக்தி கொண்டவை.
அல்வினிகோஞ்சாவின் அனைத்து இனங்களும் ஹைட்ரஜன் சல்பைடு போன்ற காற்றோட்டம் பெறப்பட்ட சேர்மங்களுடன் அவற்றின் பாக்டீரியா எண்டோசிம்பியோன்ட்களை வழங்கும் நீர்வெப்ப துவாரங்களின் அருகில் காணப்படும் அடிப்படை இனங்கள் என்று கருதப்படுகிறது.
இந்த நத்தைகள் இந்திய மற்றும் மேற்கு பசிபிக் பெருங்கடலில் உள்ள நீர்வெப்ப துவாரங்களின் வாழும் விலங்கினத்தின் ஒரு பகுதியாகும். குறிப்பாக, அல்வினிகோஞ்சா நத்தைகள் கடல் அடிவாரத்தில், எரிமலை குழம்புகள் கடலில் கசியும் வெப்பமான கடல்நீர் உள்ள இடங்களில் வாழ்கின்றன. இவை மிகவும் வெப்பமான நீர் உள்ள இடங்களில் காணப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த இடங்களில் எந்த உயிரினமும் வாழ முடியாது. இது பெரும்பாலான கடல்வாழ் உயிரினங்கள் பொறுத்துக்கொள்ள முடியாத அளவுக்கு வெப்பமாக இருக்கும்.
ஆனால், அல்வினிகோஞ்சா நத்தைகள் இந்த அளவுக்கு கடுமையான வெப்பத்தை தாங்கும் வகையில் உடல் அமைப்பை கொண்டுள்ளன. உலோகங்களை கூட கரைக்கும் அளவுக்கு வெப்பம் காணப்படும் இடத்தில் இந்த நத்தைகள் உயிரோடு இருக்க, அவற்றின் உடலில் செயல்படும் தனித்துவமான என்சைம்களை கொண்டுள்ளன என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இதன் ஓட்டின் அளவு 20 மிமீ (0.79 அங்குலம்) முதல் 60 மிமீ (2.4 அங்குலம்) வரை இருக்கும். ஓட்டின் மேற்பரப்பு பெரியோஸ்ட்ராகத்தில் (periostracum) முடிகளால் பதிக்கப்பட்டுள்ளது. இது மஞ்சள், பச்சை மற்றும் பழுப்பு நிறத்தில் இருக்கும். இந்த நத்தைகளின் ஓடுகள் இரும்பு தாதுக்கள் கொண்டு செறிவூட்டப்பட்டது போன்றும், நம்ப முடியாத அளவுக்கு உறுதியான அமைப்பும், ஒருவித உறையும் காணப்படுவதால் கடுமையான வெப்பத்தையும் அழுத்தத்தையும் எளிதில் தாங்க உதவுகிறது என்றும் கண்டறிந்து உள்ளனர்.
இந்த பூமியில் உள்ள சில தீவிர நிலைமைகளுக்கு ஒரு உயிரினம் தன்னை எவ்வாறு மாற்றிக் கொண்டு வாழ முடியும் என்பதற்கு அல்வினிகோஞ்சா நத்தைகள் அதிசயிக்கத்தக்க ஓர் உதாரணம் ஆகும்.