
குங்கிலிய மரம் மருத்துவ குணம் கொண்ட தாவரமாகும். இதை சாம்பிராணி மரம் என்று கூறுவதுண்டு. இது மிக உறுதியாக இருப்பதால் வீட்டு மரச்சாமான்கள் செய்யவும் பயன்படுகிறது. இம்மரத்தின் பாலிலிருந்து எடுக்கப்படும் பிசினே குங்கிலியம். இதை தீயிலிட மிகுந்த நறுமணம் தரும். இந்தியாவில் தெய்வ வழிபாட்டுக்கு இதைப் பெரிதும் பயன்படுத்துகிறார்கள். குங்கிலியம் பொடியாகவும், தைலமாகவும் பயன்படுத்தப்படுகிறது.
குங்கிலியம் சிவப்பு, வெள்ளை மற்றும் பூனைக்கண் குங்கிலியம் என மூன்று வகையாகப் பயன்பாட்டில் உள்ளது. இதில் சிவப்பு வகை சீமை குங்கிலியம் என்றும், வெள்ளை வகை நாட்டு குங்கிலியம் என்றும், பூனைக்கண் வகை ‘ரூமிமஸ்தகி’ எனவும் கூறப்படுகிறது. வெள்ளை குங்கிலியம் விஷக்கடிக்கு மருந்தாகப் பயன்படுகிறது. மஞ்சளான பூனைக்கண் வகையை சந்தனக் கட்டையுடன் நெருப்பில் போட நல்ல புகை வரும். இது விஷக் காற்றை சுத்தம் செய்யும்.
மூட்டு வலிக்கான குங்கிலிய எண்ணெய்: 100 கிராம் குங்கிலியத்தில் அரை லிட்டர் நல்லெண்ணெய் சேர்த்து தைலம் காய்ச்சலாம். நல்லெண்ணையை லேசாக சூடாக்கி இறக்கி. அதில் குங்கிலியத்தை கலக்கவும். இதை ஆற வைத்து முட்டிக்குத் தடவ வலி குறையும்.
பெண்களின் வெள்ளைப்படுதல் நீங்க: பசு நெய்யில் 10 கிராம் பொடியை சேர்த்து காலை மாலை உணவிற்கு முன்பு சாப்பிட, வெள்ளைப்படுதல் குணமாகும்.
இருமல் குணமாக: பசும் பால் ஒரு டம்பளர் காய்ச்சி அதில் 3 கிராம் குங்கிலியம் கலந்து இரவில் குடித்து வர இருமல் பிரச்னை குணமாகும்.
மார்பு சளி நீங்க: பாலில் குங்கிலியம் பொடி கலந்து சாப்பிட மார்பு சளி தொல்லை நீங்கும்.
நீரிழிவு நோய் பாதிப்பால் உண்டாகும் புண்ணை குணப்படுத்தும் வீரியம் கொண்டது குங்கிலியம். இதனுடன் மருதாணி விதை, வெண் கடுகு ஆகியவற்றைக் கலந்து வீட்டில் புகை போட, குடும்பத்தில் சண்டை, சச்சரவுகள் ஏற்படாது.
ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளில் வியாபாரம் மற்றும் தொழில் செய்யும் இடங்களில் குங்கிலியம் தூபம் போட, வாடிக்கையாளர்களை இது பெரிதும் ஈர்க்கும். செல்வ வளம் பெருகும்.