வீட்டிற்குள் ஈரப்பதத்தைக் குறைக்க வளர்க்க வேண்டிய 7 செடிகள்!

Plants that reduce humidity
Peace Lily, English Ivy, Snake Plant, Orchid
Published on

ழைக்காலம் மற்றும் குளிர்காலத்தில் வீட்டில் ஈரம் தேங்குவதன்  காரணமாக பூஞ்சை, காற்றின் தரம் குறைவு, மூச்சுத் திணறல் போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன. அந்த வகையில் வீட்டிற்குள் இருக்கும் ஈரப்பதத்தை உறிஞ்சும் தன்மை கொண்ட 7 செடிகள் குறித்து இப்பதிவில் காண்போம்.

ஈரப்பதத்தைக் குறைக்கும் செடிகளின் முக்கியத்துவம்: வீட்டில் ஈரப்பதம் 40 முதல் 50 சதவிகிதம் அளவிற்கு மேல் இருந்தால் பூஞ்சை வளர்ச்சி, தூசிப் பூச்சிகள், மூச்சுக்காற்று போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். வீட்டுக்குள் ஈரப்பதத்தை குறைக்கும் செடிகளை வளர்ப்பதால், ஈரப்பதம் குறைவதோடு வீடு அழகாக மற்றும் ஆரோக்கியமான சூழ்நிலையில் இருக்கும். இத்தகைய செடிகள் தண்ணீரை இலைகள் மூலம் உறிஞ்சி காற்றை சுத்தப்படுத்தி ஈரப்பதத்தை சமநிலையில் வைக்க உதவுகின்றன.

இதையும் படியுங்கள்:
புலிகளுக்கு பல் வைத்தியம் பார்க்கும் பறவை எது தெரியுமா?
Plants that reduce humidity

1. பீஸ் லில்லி (Peace Lily): வீட்டிற்குள் அழகாக மற்றும் எளிதில் வளரக்கூடிய செடியாக இருக்கும் பீஸ் லில்லி ஒரு நாளைக்கு 0.5 லிட்டர் வரை காற்றிலுள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி வெளியேற்றும் திறன் கொண்டது. இது குறைந்த ஒளியில் வளரக்கூடியதாக இருப்பதால் குளியலறை, சமையலறைக்கு ஏற்ற செடியாக இருக்கிறது. இந்தச் செடியின் மேற்பரப்பு உலர்ந்த பின் தண்ணீர் ஊற்ற வேண்டும்.

2. ஆங்கில ஐவி (English Ivy): படரும் செடியான ஆங்கில ஐவி 10 கேலன் வரை ஒரு நாளைக்கு ஈரப்பதத்தை உறிஞ்சும் ஆற்றல் கொண்டதாக இருப்பதால், இது அதிக ஈரப்பதம் உள்ள இடங்களான குளியலறைக்கு மிகவும் ஏற்ற செடியாக உள்ளது. இந்தச் செடி வளர மண்ணை சற்று ஈரமாக வைத்திருப்பதோடு, மிதமான ஒளி தேவைப்படுகிறது.

3. ஸ்னேக் பிளாண்ட் (Snake Plant): பராமரிக்க எளிதான செடியாக இருக்கும் மாமியார் நாக்கு என்ற ஸ்நேக் பிளான்ட் காற்றில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி குறைந்த பராமரிப்பில் நீண்ட காலம் வாழக்கூடியது என்பதால் எந்த அறைக்கும் ஏற்ற செடியாக இது உள்ளது. மேலும், இது குறைந்த ஒளியில் வளரும் தன்மை கொண்டது.

இதையும் படியுங்கள்:
இயற்கையாகவே கவசத்தோடு படைக்கப்பட்ட 5 உயிரினங்கள் தெரியுமா?
Plants that reduce humidity

4. பாம்பு பாம் (Bamboo Palm): அழகிய வெப்பமண்டல தோற்றம் கொண்ட செடியான பாம்பு பாம் ஈரப்பதத்தை உறிஞ்சுவதில் மிகவும் திறன் கொண்ட செடியாக இருப்பதோடு, வீட்டின் அலங்காரத்தை மேம்படுத்தி காற்றை சுத்தப்படுத்தவும் உதவுகிறது. இதற்கு மிதமான ஒளியுடன் மண்ணை சற்று ஈரமாக வைத்திருப்பது அவசியம்.

5. வீப்பிங் ஃபிக் (Weeping Fig): ஒரு மரம் போன்ற செடியான வீப்பிங் ஃபிக் 0.75 லிட்டர் ஈரப்பதத்தை ஒரு நாளைக்கு உறிஞ்சும் திறன் கொண்ட செடியாக உள்ளதால், இது அலுவலகங்கள் வாழ்க்கை அறைகள் போன்ற இடங்களுக்கு மிகவும் பொருத்தமானது. இந்தச் செடி வளர பிரகாசமான மறைமுக ஒளி தேவை என்பது குறிப்பிடத்தக்கது.

6. ஆர்க்கிட் (Orchid): அழகான பூக்களைக் கொண்ட ஈரப்பதத்தை குறைப்பதில் சிறந்த செடியான ஆர்க்கிட் செடிகள், அதிக ஒளி உடைய இடங்களில் சிறப்பாக வளரும் என்பதால் கோடைக் காலத்தில் வீட்டை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுகின்றன.

இதையும் படியுங்கள்:
கடலில் வாழும் விசித்திரமான உயிரினம் - ஆக்டோபஸ்!
Plants that reduce humidity

7. அலோவேரா (AloeVera): சருமப் பராமரிப்புக்கு பயன்படுவதோடு, காற்றில் உள்ள ஈரப்பதத்தை குறைக்கும் ஆலோவேரா, குறைந்த பராமரிப்பு தேவைப்படும் செடி என்பதோடு, காற்றை சுத்தப்படுத்துவதில் நாசாவால் அங்கீகரிக்கப்பட்ட செடியாக உள்ளது. இது வீட்டில் எந்த அறைக்கும் ஏற்ற செடியாக உள்ளது.

செடிகளைப் பராமரிக்கும் முறைகள்: பெரும்பாலான செடிகளுக்கு மறைமுக பிரகாசமான ஒளி தேவையாக இருப்பதால் நேரடி சூரிய ஒளியை தவிர்க்கவும். மேலும், மண்ணின் மேற்பகுதி உலர்ந்த பிறகு செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவது செடிகளை பாதிப்படையாமல் பாதுகாக்கும்.  மேற்கூறிய செடிகள் ஈரப்பதத்தை உறிஞ்சினாலும் மிதமான ஈரப்பத சூழலில் சிறப்பாக வளரும் தன்மையுடையவை என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்கூறிய முறைகளில் 7 செடிகளையும் வீட்டிற்குள் வைத்து வளர்த்தால் ஆரோக்கியம் மட்டுமல்ல, கண்களுக்கும் விருந்தாக அமையும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com