இரவில் பூத்து, காலையில் உதிரும் தெய்வீக நறுமணம் கொண்ட பிரம்ம கமலம்!

Brahma Kamalam
Brahma Kamalam
Published on

பிரம்ம கமலம் - இதன் அறிவியல் பெயர் சாஸ்சுரியா ஒப்வல்லட்டா.

இந்தச் செடியில் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கள் பூக்கின்றன. பிரம்ம கமலம் இரவில் பூத்து, காலையில் உதிரும் தாவர வகையாகும். பிரம்ம கமலம் கள்ளிச் செடி வகையைச் சேர்ந்த தாவரமாகக் கருதப்படுகிறது. ஒரே செடியில் 10க்கும் மேற்பட்ட பூக்கள் பூக்கக்கூடிய இவை, 5 முதல் 10 சென்டிமீட்டர் உயரம் வரை வளரக்கூடியவை. இந்தப் பூவானது, அதனைச் சுற்றியுள்ள பகுதி முழுவதும் தெய்வீக நறுமணம் கமழ வைக்கும் தன்மை கொண்டது.

பொதுவாக, பிரம்ம கமலம் உயரமான இடங்களில் வளரும் தாவரமாகும். உத்தரகாண்ட் மற்றும் இமயமலைப் பகுதிகளில் அதிகமாக செழித்து வளர்கின்றன. இந்தியாவின் பிற பகுதிகள், நேபாளம், பூடான், பாகிஸ்தான் போன்ற பகுதிகளிலும் காணப்படுகிறது. இவை, பெரும்பாலும் ஜூலை முதல் ஆகஸ்ட் மாதங்களில் அதிகமாக மலருகின்றன.

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத், ஹேம்குந்த் சாஹிப் மற்றும் துங்கநாத் போன்ற இடங்கள் பிரம்ம கமல மலர்களைக் காண்பதற்கு சிறந்த இடங்களாகும். பிரம்ம கமலம் பிரத்தேகமான மருத்துவக் குணங்களையும் கொண்டுள்ளது என்ற கருத்து நிலவி வருகிறது. ஆனால், அதன் மருத்துவ குணங்கள் மருத்துவ ரீதியாக இதுவரை நிரூபிக்கப்படவில்லை

பிரம்மகமலமும் ஆன்மிகமும்:

பிரம்ம கமலம் அழகான மலராக மட்டுமில்லாமல், ஆன்மிகம் மற்றும் தூய்மையின் சின்னமாகவும் கருதப்படுகிறது. பிரம்மனின் நாடிக்கொடி எனவும் இது வர்ணிக்கப்படுகிறது. இந்து மற்றும் புத்த மதங்களில் புனித மலராகவும், மங்களகரமானதாகவும் பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
ஒற்றைக் கூடு கட்டி ஒரே வாரிசை உருவாக்கும் ஆச்சரியப் பறவை!
Brahma Kamalam

பிரம்மகமலம் என்பது பிரபஞ்சத்தைப் பிரதிபலிப்பதாகக் கூறப்படுகிறது. பிரம்ம கமலம் மலருவதை பார்ப்பவர்களுக்கு அதிர்ஷ்டத்தையும் செழிப்பையும் தருகிறது என நம்பப்படுகிறது. மேலும், பிரம்ம கமல மலர்கள் மலரும்போது, ஒருவர் மனதில் தன் விருப்பத்தை நினைத்து பிராத்தனை செய்தால், அந்த விருப்பம் நிறைவேறும் எனவும் நம்பப்படுகிறது. இது மன அமைதியைக் கொண்டு வருவதாகவும், மனதையும், ஆன்மாவையும் தூய்மைப்படுத்தும் சக்தியை கொண்டுள்ளதாகவும் சொல்கிறார்கள். மேலும், எதிர்மறை ஆற்றல் அல்லது தீய சக்திகளிடமிருந்து பாதுகாப்பதாகவும் கூறப்படுகிறது. இமயமலைப் பகுதிகளில் வசிக்கும் சில மலைக்கிராம மக்கள், இந்த பிரம்ம கமலம் பூக்கும்போது அதனைக் கொண்டாடும் விதமாக அவர்கள் நடனமாடி, பாடி ரசிப்பார்களாம். திருவிழாக்களின் போது மலைக் கோயில்களில் பிரசாதமாகவும் இது பயன்படுத்தப்படுகிறதாம்.

சிறந்த தோட்டப் பராமரிப்பு தெரிந்திருந்தால், இந்த செடி பற்றிய போதிய தகவல்கள் அறிந்திருந்தால், பிரம்ம கமலத்தை நம் வீட்டு தோட்டத்திலும் வளர்க்கலாமோ?

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com