அற்புதங்கள் பல நிறைந்த இந்த பூமியில் ஆச்சரியம் தரும் பல்வேறு தாவரங்களும் உள்ளன. பகலிலேயே கண்ணுக்குத் தெரியாத பல தாவரங்கள் இந்த மண்ணில் இருக்கையில், ஆச்சரியம் தரும் வகையில் இரவில் பிரகாசிக்கும் தாவரங்களும் உள்ளன. அவற்றைப் பற்றி இந்தப் பதிவில் காணலாம்.
1. கட் புல்: இது, ‘இரவின் ராணி’ என்று அழைக்கப்படுகிறது. இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட கற்றாழை. இதன் பூக்கள் இரவில் ஒளிரும். இதற்கு மாய சக்தி இருப்பதாக நம்பப்படுகிறது. இது நள்ளிரவில் பூத்துப் பிரகாசிக்கும் அழகான மற்றும் மணம் கொண்ட பூக்களைக் கொண்டுள்ளது.
2. ஒளிரும் பாசி: டிராகன்ஸ் கோல்ட் (Dragon's gold), Goblin Gold என்றும் அழைக்கப்படும் இந்த ஒளிரும் பாசிகள் மங்கலான விளக்குகளில் நீலம் பச்சை நிறத்தில் ஜொலிக்கும்.
3. நிலவு மலர்: ‘ஐபோமியா ஆல்பா’ என்று அழைக்கப்படும் மூன் ஃபிளவர். இது இரவில் அழகாக பிரகாசிக்கும்.
4. ஏஞ்சல்ஸ் ட்ரம்பெட்: இது பெரிய, மிகவும் மணம் மிக்க பூக்களைக் கொண்டது. இதன் ட்ரம்பெட் வடிவ மலர்கள் சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு ஒளிரும் தன்மை கொண்டது. இதனை ப்ரூக்மான்சியா என்றும் அழைக்கிறார்கள்.
5. ஃபயர்ஃபிளை பெட்டூனியா: ஃபயர்ஃபிளை பெட்டூனியா என்று அழைக்கப்படும் மின்மினிப் பூச்சி ஆலைத் தாவரம். இதன் பிரகாசமான மொட்டுக்கள் மின்மினி பூச்சிகளைப் போல் காணப்படும். இவை இருட்டில் பிரகாசிக்கும் சிறிய பெர்ரிக்களை உற்பத்தி செய்யும்.
6. டஸ்டி மில்லர்: சில்வர் ராக்வார்ட் என்று அழைக்கப்படும் டஸ்டி மில்லர் தாவரம் இரவில் செழுமையான வெள்ளி சாம்பல் போன்று காணப்படும். நிலவின் ஒளியை இது அழகாக பிரதிபலிக்கும்.
7. காசா பிளாங்கா: காசா பிளாங்கா எனப்படும் வெள்ளை மாளிகை அல்லிகள் பிரம்மாண்டமாக தூய வெள்ளை நிறத்தில் பூக்களை கொண்டது. இதன் மகரந்தங்கள் சிவப்பு அல்லது ஆரஞ்சு வண்ணத்தில் காணப்படும். இவை இருட்டில் பிரகாசிக்கும்.
8. கார்டினியா (Gardenia): நிலவின் ஒளியில் அழகாக பிரகாசிக்கும் வெள்ளைப் பூக்கள் இவை.
9. Echeveria: இதன் இலைகள் நிலவு ஒளியில் மிக அழகாக ஒளிரும் தன்மை கொண்டவை.
10. வெள்ளை ஹைட்ரேஞ்சா (Hydrangea): அன்னாபெல் போன்ற சில வகையான வெள்ளை ஹைட்ரேஞ்சாக்கள் இரவில் மிக அழகாக பிரகாசிக்கும்.