ஏர்ல் கிரேய் டீ (Earl Grey Tea) என்பது உலகில் பலராலும் விரும்பி அருந்தப்படும் சுவை மிக்க டீக்களில் ஒன்று. காலையில் நாம் அருந்தும் காபியில் இருப்பதை விட காஃபின் அளவு இதில் குறைவாகவே உள்ளது. தென் கிழக்கு ஆசியாவில் தோன்றிய இந்த டீ பிறகு பிரிட்டிஷ் டீயாகி, ஐக்கியப் பேரரசில் பிரதமராயிருந்த இரண்டாம் ஏர்ல் சார்லஸ் கிரேயின் பெயரைக் கொண்டு, ‘ஏர்ல் கிரேய் டீ’ என்று அழைக்கப்பட்டு வருகிறது.
பிளாக் டீ இலைகளுடன், பெர்காமியா மரத்திலிருக்கும் லெமன் போன்ற ஒரு வகை சிட்ரஸ் பழத்தின் தோலிலிருந்து எடுக்கப்படும் எஸ்ஸன்ஸ் சேர்த்து தயாரிக்கப்படும் தனித்துவமான சுவை கொண்ட டீ இது. இதை அருந்துவதால் கிடைக்கும் ஏழு ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
இதிலுள்ள பொட்டாசியம் சத்து தேவையான அளவு நீர்ச்சத்தை வழங்கி நாள் முழுவதும் தேவையான சக்தியை உடலுக்குத் தருகிறது. உடல் சோர்வை விரட்டவும் செய்கிறது. பிளாக் டீயிலுள்ள L.Theanine மற்றும் அமினோ ஆசிட் மாலை நேரம் உண்டாகும் மூளையின் மந்த நிலையைப் போக்கி, மனத் தெளிவு, கூர்நோக்குத் திறன், அறிவாற்றல் ஆகியவற்றை உயர்த்த மூளைக்கு உதவுகின்றன.
ஏர்ல் கிரேய் டீயின் கூட்டுப்பொருளான பெர்காமட் எஸ்ஸன்ஸ், LDL என்னும் கெட்ட கொழுப்பைக் குறைக்கவும், இரத்த அழுத்தத்தை சமநிலையில் வைக்கவும், நல்ல கொழுப்பை அதிகரிக்கவும் உதவி புரிந்து இதய நோய் வரும் ஆபத்தைத் தடுக்கிறது. பிளாக் டீயிலுள்ள பாலிபினால்கள் மெட்டபாலிசம் சிறந்த முறையில் நடைபெற உதவுகின்றன. சிட்ரஸ் ஃபுரூட்டின் எஸ்ஸன்ஸ் கொழுப்பை எரிக்கச் செய்கிறது, ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரெஸ்ஸை குறைக்கவும் உதவுகிறது. இச்செயல்களால் அதிகமுள்ள உடல் எடை குறையவும் வாய்ப்பு உருவாகிறது.
பிளாக் டீ மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி ஸ்ட்ரோக் வரும் அபாயத்தைத் தடுக்கிறது. இரத்த அழுத்தத்தை சமநிலையில் வைத்துப் பராமரித்து ஹைபர்டென்ஷன் சம்பந்தமான நோய்கள் வருவதையும் தடுக்க உதவுகிறது. ஏர்ல் கிரேய் டீயிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் பெர்காமட்டின் தனித்துவ குணங்களுடன் இணைந்து கேன்சரைத் தடுக்க உதவுகிறது.
பெர்காமட் எஸ்ஸன்ஸில் உள்ள ஆன்டி ப்ரோலிஃபெரேடிவ் (Anti proliferative) குணமானது கோலன், லிவர் மற்றும் சருமம் உள்ளிட்ட பல வகையான கேன்சரை பரவச் செய்யும் வீரியம் மிக்க செல்களை அழிக்க உதவி புரிந்து கேன்சர் நோய் பரவும் அபாயத்தைத் தடுக்கிறது. ஏர்ல் கிரேய் டீயிலுள்ள ஆன்டி இன்ஃபிளமேட்டரி குணமானது மலச்சிக்கலை நீக்கவும், வயிற்றிலுள்ள அமிலம் உணவுக் குழாய்க்குள் புகுவதைத் தடுக்கவும் உதவுகிறது.
இத்தனை நன்மை தரும் ஏர்ல் கிரேய் டீயை நாமும் அவ்வப்போது அருந்தி ஆரோக்கியம் பெறுவோம்.