தலையை 90 டிகிரி திருப்பும் பிங்க் நிற டால்ஃபினின் வியக்க வைக்கும் ரகசியங்கள்!

அமேசான் நதி டால்ஃபின்: பிங்க் நிற டால்ஃபினின் வியக்க வைக்கும் வாழ்வியல் ரகசியங்கள்
அமேசான் நதி டால்ஃபின் | Amazon river dolphin
அமேசான் நதி டால்ஃபின் | Amazon river dolphinImage credit: Chatgpt
இந்திரா கோபாலன்

மங்கையர் மலரின் 40 வருஷத்து வாசகியான எனக்கு படிப்பது எழுதுவது மிகவும் பிடித்த விஷயம். புத்தக வடிவிலிருந்து ஆன் லைன் அவதாரத்தை ம.மலர் எடுத்தபின்பும் என்எழுத்து. ஆர்வத்தை ஊக்குவிக்கும் படி என் படைப்புகளை வெளியிடுவதில்.மகிழ்ச்சி. பி.எஸ சி பட்டதாரியான நான் திருமணத்திற்குப் பிறகு தான் எழுத்துப் பணியைத் தொடர்ந்தேன். ஃபெமினா சவ்வி உமன்ஸ்ஈரரசொசைடி போன்ற பல பத்திரிகைகளில் பல கடிதங்கள் எழுதி பரிசு பெற்றுள்ளேன்.தொடர்ந்து மங்கையர் மலருக்கு படைப்புகளை அனுப்புவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

Updated on: 

தலையை 90 டிகிரி திருப்பும் திறன் கொண்ட உலகின் மிகப்பெரிய நன்னீர் டால்ஃபின் பற்றி உங்களுக்குத் தெரியுமா? 'போடோ' என்று அழைக்கப்படும் இந்த அதிசய விலங்கு பற்றிய யாரும் அறியாத பல சுவாரஸ்யமான தகவல்களையும், அதன் வியக்க வைக்கும் வாழ்வியலையும் இந்தக் கட்டுரையில் முழுமையாகப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்!

அமேசான் நதி டால்ஃபின் (Amazon river dolphin) என்பது உலகிலேயே மிகப்பெரிய அளவில் உள்ளது. இது நீர்நிலையில் வாழும் டால்ஃபின் ஆகும். தென் அமெரிக்காவில் காணப்படும் இது அமேசான் மற்றும் ஒரினோகோ ஆறுகளில் காணப்படும்‌. இது குறைந்த அளவே உள்ளது. இதன் விஞ்ஞானப் பெயர் Inia geofferensis. இதை தென் அமெரிக்க நதிகளில் மட்டுமே பார்க்கமுடியும். இதற்கு கழுத்து நீண்டு காணப்படும். இதை போடோ என்றும் அழைப்பார்கள். தற்போது இது குறைந்த அளவிலேயே உள்ள இனமாகக் கருதப்படுகிறது.

இது பற்கள் நிறைந்த திமிங்கிலமாகக் கருதப்படுகிறது. இதை மடேரியாநதி, ஒரினோகோ பகுதிகளில் காணமுடியும்‌. 2014ம் ஆண்டில் ஆராய்ச்சியாளர்களால் Araguaian ரிவர் dolphin வகையை கண்டுபிடித்தனர்.

போடோ என அழைக்கப்படும் ரிவர் டால்ஃபின்கள் 8.2 அடிகள் நீளமும் மேலும் 285 கிலோகிராம் எடையில் இருக்கும். இதில் பெண்ணினம் சிறிய அளவில் இருக்கும். இந்த டால்ஃபின் பிறக்கும் போது க்ரே நிறத்திலும் பெரிதாக ஆகும்போது பிங்க் நிறத்தில் மாறும்‌. அதிக அளவில் பிங்க் நிறத்தில் இருந்தால் அது மிக வயதானதாகக் கருதப்படுகிறது. இதன்உடல் கனமாகவும், நீந்குவதற்கு பெரிய துடுப்பும் நீண்ட கழுத்து மற்றும் வலுவான பற்களும் கொண்டிருக்கும். இது தன் தலையை 90 டிகிரி அளவில் திருப்பும்.

அமேசான் நதி டால்ஃபின் | Amazon river dolphin
அமேசான் நதி டால்ஃபின் | Amazon river dolphin

இதன் வாழ்வியல்:

இதை பொலிவியா 'கொலம்பியா, பெரு மற்றும் வென்சுலாவில் காணலாம்‌. பெரும்பாலும் நீரிலேயே இருக்கும்‌. மழைக்காலங்களில் அதிக அளவு நீர் வெளியேறும் போது இவை வெளியேறி பக்கத்து காடுகளின் மரங்களில் சரணடையும்‌. திரும்பவும் ஆறுகள் நீர் நிறையும் போது ஆறுகளுக்கு வந்து சேரும்‌.

இதையும் படியுங்கள்:
ஆபத்தை உணர்ந்தவுடன் நத்தை ஓட்டுக்குள் திரும்புவது எப்படி? ஆச்சரியமான உண்மை!
அமேசான் நதி டால்ஃபின் | Amazon river dolphin

உணவு:

அமேசான் நதி டால்ஃபின் சுமார் 50 வகை மீன்களை உணவாக உண்ணும். அவற்றில் முக்கியமானது க்ரோகெர்ஸ், மெட்ராஸ், காட்ஃபிஷ் மற்றும் பிரன்ஹாஸ் ஆகும். இது கடல் நண்டு, ஆமைகளையும் உண்ணும்.

இது ஒலி அமைப்பை பயன்படுத்தி வேட்டையாடுகிறது‌. ஒலியின் மூலமாகவே உயிரினத்தை கண்டுபிடிக்கும்‌. இதன் பற்கள் வலுவாக இருப்பதால் எந்த இரையும் இதனிடம் அகப்பட்டால் தப்புவது சிரமமாகும்‌. இது தனிமையான வாழ்க்கை வாழும்‌. இது நாள் முழுவதும் சுறுசுறுப்பாக வேட்டையாடும்.

இது உணவைத் தேடும்போது விசில் போன்ற ஒலியை எழுப்பும். இதன் நீண்ட கழுத்து இரையைப் பிடிக்க வசதியாக உள்ளது‌. மிக வேகமாக வேட்டையாடக் கூடியதாகக் கருதப்படுகிறது‌. இதன் இனத்தில் இனப்பெருக்கம் குறைவாகவே நடைபெறுகிறது‌. இதன் இனப்பெருக்க காலம் 15 மாதம் வரையில் இருக்கும். ஒரே ஒரு குட்டியை மட்டுமே ஈனும். இதன் தாய் இந்த குட்டி சுதந்திரமாகச் செயல்படும் வரை பாதுகாப்பது தனிச்சிறப்பாகும்‌. இதன் நீண்ட இனப்பெருக்க காலமே இந்த இனம் குறைவாக உள்ளதற்குக் காரணம் என கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
செல்போன் டவர்களால் சிட்டுக் குருவிகள் அழிவது உண்மையா? விஞ்ஞானிகள் சொல்லும் சீக்ரெட்!
அமேசான் நதி டால்ஃபின் | Amazon river dolphin

சுற்றுச்சூழல் பாதுகாப்பு:

இந்த அமேசான் ரிவர் டால்ஃபின் நீர்நிலைகளை நல்ல சுகாதாரத்தோடு வைப்பதாக அறியப்படுகிறது‌. இது பல பெரிய மீன்களை உண்ணுவதால் மீன் இனத்தைக் கட்டுப்படுத்துவதாகத் தெரிகிறது‌. நீர்நிலைகளில் சுற்றுச் சூழலை பாதுகாப்பாக வைக்கும் இந்த டால்ஃபின் மிக முக்கியமாக கருதப்படுகிறது‌.

அமேசான் நதி டால்ஃபின் டூரிஸ்டுகளின் வருகையை அதிகரிக்கிறது‌. இந்த இனம் குறைவாகவே உள்ளதாலும் நீர்நிலை சுகாதாரத்தை இது மேம்படுத்துவதாலும் இதை நன்கு பாதுகாப்பாக கவனித்துப் பேணுகிறார்கள். போடோ என்று அழைக்கப்படும் இந்த டாலாஃபின் நீர்நிலை பாதுகாப்பாளராகச் செயல்படுவது இதன் தனிச்சிறப்பு.

குறைந்த அளவிலேயே காணப்படும் இந்த டால்ஃபின் இனத்தைப் பாதுகாக்க உரிய நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.

நீர்வாழ் உயிரினங்களின் மர்மமான உலகத்தையும், இயற்கைச் சூழலை அவை எவ்வாறு பாதுகாக்கின்றன என்பதையும் அறிந்துகொள்வதன் மூலம் பல்லுயிர் பெருக்கத்தின் முக்கியத்துவத்தை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியும்.

logo
Kalki Online
kalkionline.com