மனிதர்களைப் போலவே பாசம், அன்பு போன்ற குணங்கள் நிறைந்த விலங்குகள்!

wild animals
wild animals
Published on

கொரில்லாக்கள்: 

மிகுந்த பாசத்துடன் இருக்கக்கூடியவை கட்டிப்பிடிப்பது கைகளை பிடிப்பது இணைந்து செயல்படுவது போன்ற குணங்களைப் பெற்றுள்ளன. பொதுவாக இவை கருணையும், அன்பும் கொண்டவை. கொரில்லாக்கள் தங்கள்  தற்காப்புக்காக மட்டுமே தாக்குகின்றன. குறிப்பாக தங்கள் குட்டிகளை எடுக்க முயற்சிக்கும் மனிதர்களை தாக்குகின்றன.

எலிகள்: 

எலிகள் மனிதர்களைப் போலவே பச்சாதாபத்தையும், தன்னலமற்ற தன்மையையும் கொண்டுள்ளன. ஆண் எலிகள் தங்கள் துணையை உயர்ந்த தொனியில் காதல் பாடல்களால் கவர்ந்திழுக்கின்றன. தாய் எலிகளோ தங்கள் குழந்தைகளை நன்கு பாதுகாக்கின்றன.

யானைகள்: 

இவையும் அன்பை செலுத்துவதில் நிகரில்லாத விலங்காக உள்ளது. யானைகளுக்கும் பாகன்களுக்கும் இடையேயான உறவு மிகவும் சுவாரஸ்யமானது. குழந்தைகள் தன் தாயின் கைகளை பிடித்து நடப்பது போன்று யானைக் குட்டிகளும் தன் தாய் யானையின் வால்களைப் பிடித்து நடக்கின்றன. மனிதர்களைப் போலவே தன்னுடைய சக யானைகளோ, தன்னை வளர்க்கும் முதலாளியோ இறந்து விட்டால் துக்கப்படுகிறது. தங்களுடைய குட்டிகளை மிகுந்த பாசத்துடன் மனிதர்களைப் போலவே வளர்க்கிறது.

பென்குயின்கள்: 

பனிப்பாலங்களில் தன் சகாக்களுடன் ஒன்றாக நடந்து செல்வதும், குழந்தை வளர்ப்பின் பொறுப்புகளையும் பகிர்ந்து கொண்டு வாழ்கின்றன.  வாழ்நாள் முழுவதும் ஒரே காதல் துணையைக் கொண்டு இருப்பதும் வியப்பை அளிக்கிறது.

கிப்பன்கள்:

கிப்பன்கள் ஒரு சிறிய வகை மனித குரங்கு. இவை தங்கள் கூட்டாளர்களிடம் மிகுந்த அன்பைப் பொழிபவையாக உள்ளன. இவை மிகுந்த அன்புடன் வாழ்நாள் முழுவதும் தன்னுடைய ஜோடியுடனேயே சுற்றித் திரிகின்றன. இவை மனிதர்களைப் போலவே அன்பு நிறைந்ததாக காணப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
குங்குமப்பூ ஏன் மிகவும் விலை உயர்ந்ததாக இருக்கிறது தெரியுமா?
wild animals

ஓநாய்கள்: 

ஓநாய்கள் மிகுந்த விசுவாசமானவை, அன்பானவை. தன்னுடைய  குடும்பங்களை அச்சமின்றி பாதுகாக்கிறது. அதனுடைய துணை இறந்துவிட்டாலோ பல மாதங்கள் துக்கத்தில்தான் இருக்குமாம்.

ஃப்ரெஞ்ச் தேவதை மீன்கள்: 

இந்த மீன்கள் ஒருபோதும் பிரிந்து செல்லாமல் தங்கள் துணையுடனே எப்பொழுதும் அருகருகில் நீந்துமாம். தங்கள் இடத்தை பாதுகாக்க ஒன்றாக சேர்ந்து போராடும் குணத்தையும் கொண்டுள்ளன. 

நாய்கள்: 

இவை எப்பொழுதும் விசுவாசத்துடனும், அன்பை வெளிப்படுத்தும் தன்மையுடனும் காணப்படும். இவை தன்னுடைய அன்பை வெளிப்படுத்த வாலை மிகவும் வேகமாக அசைத்து முகத்தை நக்கும். நாய்கள் பொதுவாக மனிதர்களுடனும், மற்ற விலங்குகளுடனும் நட்பையே பாராட்டும்.

அன்னங்கள்: 

அன்னங்கள் எப்பொழுதும் அன்பின் சின்னமாகத்தான் பார்க்கப்படுகின்றன. இதனால்தான் நிறைய வீடுகளில் அன்னத்தின் சிலைகள் வைக்கப்படுகிறது. அன்ன நடை என்று பெண் அன்னத்தின் நடை அழகை சிறப்பித்துக் கூறுவதுண்டு. அன்றைய  காலங்களில் அன்னத்தின் தூவியை அடைத்து அரசியின் மெத்தை செய்யப்பட்டதாக கூறுவதுண்டு.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com