விலங்குகளுக்கு மரணத்தை முன்கூட்டியே அறியும் சக்தி இருக்கிறதா? அறிவியல் உண்மைகள் இதோ!

விலங்குகள் மரணத்தை முன்னறிவிக்குமா? தேனீக்கள், நாய்கள் மற்றும் பூனைகளின் விசித்திரமான திறன்கள் மற்றும் அறிவியல் உண்மைகளை அறியுங்கள்.
விலங்குகள் | Animals
விலங்குகள் | AnimalsImage credit: Gemini AI
கோவீ.ராஜேந்திரன்

வணக்கம், அடிப்படையில் நான் ஓர் ஆட்டோமொபைல் இன்ஜினியர், ரிலாக்சேஷனுக்காக பத்திரிகைகளில் ஆரம்பத்தில் துணுக்குகள் எழுத ஆரம்பித்தேன். பின்னர் கட்டுரைகள் எழுதும் அளவிற்கு வந்துள்ளேன். தமிழகத்தில் வரும் முன்னணி பத்திரிகைகளில் என்னுடைய கட்டுரைகள் 500க்கும் மேற்பட்டவைகள் வந்துள்ளது. பொது அறிவு சம்பந்தமாக இது வரை 12 புத்தகங்கள் எழுதியுள்ளேன். கல்கி ஆன்லைன் பத்திரிகை குழு நிர்வாகம் மற்றும் அதன் ஆசிரியர் குழு அன்பாலும், ஆதரவாலும் இது வரை 300 க்கும் மேற்பட்ட கட்டுரைகள் எழுதி உள்ளேன் என்பதை நன்றியடன் தெரிவித்துக் கொள்கிறேன். வித்தியாமான தகவல்கள் அடங்கிய படைப்புகள் வழங்க வேண்டும் என்பது என் விருப்பம்.

Updated on

விலங்குகளும் பறவைகளும் வெறும் எளிய உயிரினங்கள் அல்ல; மனிதர்களை வியக்க வைக்கும் பல அதிநவீன சக்திகளையும் கணிதத் திறன்களையும் கொண்டவை!

நீங்கள் இதுவரை அறிந்திராத உண்மைகள் இந்தப் பதிவில் காத்திருக்கின்றன: அறிவியலின் ஆச்சரியமூட்டும் கண்டுபிடிப்புகளையும், மனிதர்களின் மூடநம்பிக்கைகளையும் கடந்து விலங்குகள் பற்றிய பல சுவாரஸ்யமான தகவல்களைத் தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்!

மனிதர்களைப் போலவே சில விலங்குகளும், பறவைகளும் கணிதத் திறமை உள்ளவை என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். புறா, எறும்பு, சுறாமீன் போன்றவை கணக்கிடும் ஆற்றல் கொண்டவை.

மனிதர்களைப் போலவே சில விலங்குகளும் 'சூப்பர் சக்தி' கொண்டவை. உதாரணமாக வெளவால் சப்தத்தை வைத்தே தன்னை சுற்றி நடப்பதை உணரும் ஆற்றல் கொண்டவை. வௌவால்கள் மரணச் செய்தியைச் சுமந்து செல்கின்றன என்ற மூடநம்பிக்கை நம் நாட்டில் உள்ளது. தென் அமெரிக்காவின் மாயன் மற்றும் ஆஸ்டெக் நாகரிகங்களில், வெளவால்கள் மரணத்தை முன் கூட்டியே அறியும் ஆற்றல் உடையதாக கருதப்பட்டன.

தேனீக்களால் மனித முகங்களை அடையாளம் காண முடியும். அது தொடர்பான ஆய்வுகளில் பயிற்சி பெற்ற தேனீக்கள் சுமார் 80 சதவீதம் துல்லியமாக வெவ்வேறு மனித முகங்களை அடையாளம் கண்டறிந்து இருப்பது உறுதி செய்யப்பட்டது.

தேனீக்கள் வலிமையானவை, ஆக்ரோஷமானவை மற்றும் சிறந்த தோண்டும் திறன் கொண்டவை. அவற்றின் வளைகள், செட்டுகள் என்று அழைக்கப் படுகின்றன. பல அறைகள் கொண்ட நிலத்தடி வீடுகள், அவை தலைமுறை தலைமுறையாக முழு குடும்பங்களையும் தங்க வைக்க முடியும். தேனீக்கள் பகலில் தங்கள் வளைகளில் ஓய்வெடுக்கின்றன, இரவில் உணவிற்காக வெளியே வருகின்றன. அவை சிறிதாக இருந்தபோதிலும், அவை தங்களை விட பெரிய வேட்டையாடுபவர்களிடமிருந்து கூட தற்காத்துக் கொள்வதில் பெயர் பெற்றவை.

இதையும் படியுங்கள்:
​10 அடி தள்ளியிருந்தே விஷப் பாம்பைக் கண்டுபிடிப்பது எப்படி? தப்பிக்க சூப்பர் ட்ரிக்ஸ்!
விலங்குகள் | Animals

மரணம் எப்போது வரும் என்பதை அனைவரும் முன்கூட்டியே தெரிந்துகொள்ள விரும்புகிறார்கள். ஆனால் மகான்களால் மட்டுமே அதை அறிய முடியும். ஆனால் அறிவியல் செய்தி வலைத்தளமான ஹவுஸ்ஸ்டஃப்வொர்க்ஸில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கை, மரணத்தை முன்னறிவிக்கக்கூடிய பல விலங்குகள் இருப்பதாகக் கூறுகிறது.

நாய்கள் மரணத்தை முன்கூட்டியே உணர முடியும் என்று பலர் நம்புகிறார்கள். அந்த அறிகுறி தோன்றும்போது அழும் குரலில் குரைக்கின்றன. நாய்கள் தங்கள் உரிமையாளர்களின் இறப்புச் செய்திகளை முன்கூட்டியே உணர்ந்த பல நிகழ்வுகள் நடந்துள்ளதாக ஹவுஸ்ஸ்டஃப்வொர்க்ஸ் அறிக்கை கூறுகிறது.

பூனைகள் மரணத்தின் வாசனையை உணரும் என்று பண்டைய காலங்களிலில் இருந்து மக்கள் நம்பினர்.

எல்லாப் பூனைகளாலும் மனிதர்கள் அல்லது பிற விலங்குகளின் மரணத்தை முன்கூட்டியே உணர முடியும். எப்படி? இறப்பதற்கு சற்று முன்பு, மனிதர்கள் அல்லது பிற விலங்குகளின் உடலில் சில வேதியியல் மாற்றங்கள் ஏற்படுகின்றன. மேலும் சில உயிர்வேதியியல் பொருட்கள் வெளியிடப்படுகின்றன. மனிதர்களால் உணர முடியாத அந்த உயிர்வேதியியல் வாசனையை பூனைகளால் உணர முடியும் என்கிறார்கள்.

விலங்குகள் | Animals
விலங்குகள் | AnimalsImage credit: Gemini AI

கருப்பு பட்டாம்பூச்சி மரணத்தின் முன்னோடியாகக் கருதப்படுகிறது. கருப்பு வண்ணத்துப்பூச்சி உண்மையில் ஒரு பட்டாம்பூச்சி அல்ல, ஆனால் ஒரு வகை அந்துப்பூச்சி. இரவின் இருட்டில் பறக்கும் இந்த கருப்பு அந்துப்பூச்சியை பலர் ஒரு அபசகுன அறிகுறியாகக் கருதுகின்றனர்.

பல நம்பிக்கைகளின்படி, பகலில் ஒரு நரி ஒரு வீட்டிற்குள் நுழைந்தால், அந்த வீட்டில் யாராவது ஒருவர் நிச்சயமாக இறந்துவிடுவார்கள். நரிகள் பொதுவாக பகலில் காணப்படுவதில்லை. அவை மனிதர்கள் வசிக்கும் இடத்திலிருந்து விலகி இருக்கும்! எனவே, மனித மூடநம்பிக்கையின்படி, பகலில் ஒரு வீட்டிற்குள் நரி நுழைந்தால் மரணம் வந்துவிட்டது என்று அர்த்தம்.

விஞ்ஞானிகளின் ஆய்வுப்படி, விலங்குகளின் வாசனை, கேட்கும் திறன் மற்றும் கவனிப்பு ஆகியவை பல ஆபத்துகளை முன்கூட்டியே உணரும் திறனை அவற்றிற்கு அளிக்கின்றன. இருப்பினும், இதுவரை எந்த விஞ்ஞானியும் இந்த விஷயத்தில் 100 சதவீதம் தெளிவாகவோ அல்லது உறுதியாகவோ எதையும் சொல்ல முடியவில்லை.

தீக்கோழிகள் மிக வேகமாக ஓடுவதுடன் உலகின் மிகப்பெரிய பறவையாகும் திகழ்கிறது. இது 8 அடி வரை உயரமாக வளரக்கூடிய பறவையாக இருந்தும் பறக்கத்தெரியாது. அதனால் தொடர்ந்து 45 நிமிடங்கள் வரையில் ஒரே வேகத்தில் ஓட முடியும். ஒரு மாத வயதுள்ள நெருப்புக்கோழி மணிக்கு 55 கிலோமீட்டர் வேகத்தில் ஓடக்கூடிய ஆற்றலை கொண்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
சாம்பல் புகைக்குள் பிறக்கும் மின்னல்: எரிமலை மின்னலின் விசித்திரம்!
விலங்குகள் | Animals

தீக்கோழிகள் கற்களை சாப்பிடுவதை அனைவருமே பார்த்திருப்பார்கள். ஆனால் அவை ஏன் கற்களை சாப்பிடுகின்றன. அதற்கு பின்னால் இருக்கும் அறிவியல் உண்மை. தீக்கோழிகளுக்கு பற்கள் கிடையாது. இவை செரிமானத்தை எளிதாக்குவதற்காக கற்களை விழுங்குகின்றன. அதற்கு பற்கள் இல்லாததால், அவற்றால் உணவை நன்கு மென்று துண்டாக்கி செரிக்க முடியாது. எனவே, இவை உணவை வயிற்றுக்குள் உணவை நன்றாக அரைக்க வேண்டும் என்பதற்காக கற்களை சாப்பிடுகின்றன.

இந்த கற்கள் தசைப்பையில் (gizzard) தங்கி, உட்கொள்ளும் உணவை அரைத்து உடைக்க பெரிதும் துணைப்புரிகின்றன. அதனால் அதன் செரிமானம் எளிதாகின்றது.

நிலத்தடியில் செழித்து வளரும் ஒரு விலங்கு இருக்கிறது என்றால், உண்மையிலேயே அது எலிதான். இந்த ரோமமற்ற கொறித்துண்ணிகள் எறும்புகள் அல்லது தேனீக்களைப் போலவே பெரிய கூட்டமைப்புகளில் வாழ்கின்றன. ஒரு ராணி எலி பொறுப்பாளராக இருக்கிறது.. குறைந்த ஆக்சிஜன் சூழலில் உயிர்வாழும் திறன் தான் அவற்றை இயற்கையின் மிகவும் வினோதமான மீள்தன்மை கொண்ட உயிரினங்களில் ஒன்றாக்கிறது என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

சிறந்த சுரங்கப்பாதை தோண்டும் விருதை வழங்கினால், அது மூஞ்சூறுகளுக்கே கிடைக்கும். இந்த சிறிய, ரோமம் நிறைந்த உயிரினங்களுக்கு சக்திவாய்ந்த முன் பாதங்கள் உள்ளன. அவை மண்வெட்டிகள் போல செயல்பட்டு, நம்பமுடியாத வேகத்தில் சுரங்கங்களை தோண்ட உதவுகின்றன - சில சமயங்களில் ஒரு மணி நேரத்திற்கு 15 அடி வரை தோண்டும் திறன் கொண்டவை. அவற்றின் கண்கள் மிகச் சிறியவை ஆனால் அவற்றின் உணர்திறன் மிக்க முகவாய் அதை ஈடுசெய்கிறது. இது மண்புழுக்கள் மற்றும் பூச்சிகளை கண்டறிய உதவுகிறது என்கிறார்கள்.

விலங்குகளின் விசித்திரமான திறன்கள் மற்றும் அவற்றின் பின்னுள்ள அறிவியல் உண்மைகளைப் புரிந்து கொள்வதன் மூலம், இயற்கை மற்றும் விலங்கினங்களின் மீதான உங்கள் புரிதலை மேம்படுத்திக் கொள்ளலாம்.

logo
Kalki Online
kalkionline.com