மனிதர்களைப் போல் பெயர் சொல்லி அழைத்துக்கொள்ளும் விலங்குகள்!

animals
Animals
Published on

மனிதர்கள் அவரவர்களுக்கு ஒரு பெயர் வைத்துக்கொண்டு, மற்றவர்களை அழைக்கும்போது எப்படி பெயர் சொல்லி அழைப்பார்களோ? அதேபோல் ஒரு விலங்கு இனமும் தங்களுக்குள் பெயர் சொல்லி அழைத்துக்கொள்கிறது என்பதை ஒரு ஆராய்ச்சியின் மூலம் கண்டுபிடித்துள்ளனர்.

பொதுவாக மனிதர்களாகிய நமக்குப் பேசும் திறன் உள்ளதால், அழைக்கும்போது ஒருவரின் பெயர் சொல்லி அழைப்போம். ஆனால், விலங்குகள் வாயில்லா ஜீவனாயிற்றே? ஆகையால், விலங்குகள் பெயர்கள் வைத்துக்கொள்ளுமா, பெயர்களை சொல்லி அழைக்குமா? என்பனபோன்ற விஷயங்களை நாம் யோசிக்கக்கூட மாட்டோம். விலங்குகள் பேசும் பாஷை நமக்குப் புரியாததால், எப்படி அது வாயில்லா ஜீவனாகும். அப்படியென்றால், நாம் பேசும் பாஷை புரியாத விலங்குகள், நம்மையும் வாயில்லா ஜிவன் என்றுதானே நினைப்பார்கள்?

சரி விஷயத்திற்கு வருவோம். நமக்கு மிகவும் தெரிந்த ஒரு விலங்கினம் தங்களுக்குள் பெயர்களை சூட்டிக்கொண்டு, பெயரை சொல்லித்தான் அழைத்துக்கொள்ளுமாம்.

ஆம்! அது யானை இனம்தான். பச்சைக் கிளி நாம் சொல்வதை அப்படியே சொல்லி கேள்விபட்டிருப்போம். டால்பின் சத்தத்தை பயன்படுத்தி தங்களுக்குள் பேசிக்கொண்டாலும், யானைதான் பெயர் வைத்து அழைத்துக்கொள்ளுமாம்.

கென்யாவில் உள்ள ஆப்பிரிக்கன் யானைகளை வைத்து ஆராய்ச்சியாளர்கள் Audio algorithm சம்பந்தப்பட்ட ஒரு ஆய்வில் இந்த விஷயத்தை கண்டுபிடித்துள்ளனர். அதாவது 1986ம் ஆண்டிலிருந்து 2022ம் ஆண்டு வரை யானைகளின் சத்தங்களை ரெக்கார்டு செய்து அவற்றை முழுமையாக ஆராய்ச்சி செய்து பார்த்திருக்கிறார்கள்.

இதையும் படியுங்கள்:
வாலிஸ்னேரியா (Vallisneria) நீர் வாழ் தாவரத்தின் சிறப்பம்சம் மற்றும் மருத்துவ குணங்கள்!
animals

அப்போது ஒரு யானை மற்றொரு யானையையும் தனது குட்டியையும் அழைக்கும்போது ஒரு பெயரைச் சொல்லி அழைத்து இங்கு வரும்படி கூறுகிறது. கூட்டமாக இருந்தாலுமே, சரியான அந்த யானைகள் மட்டும் வந்து, அந்த அழைத்த யானையிடம் சேர்ந்துவிடுகின்றன.

அழைக்கும் யானையின் சத்தம் குறித்தும், அந்த சத்தத்திற்குதான் அந்த பெயர்களைக் கொண்ட யானைகள் செவி சாய்க்கின்றன என்பது குறித்தும் அந்த ஆடியோ ரெக்கார்ட் மூலம் தெரியவந்தது. ஆனால், சரியாக அந்த பாஷை குறித்து அதாவது பெயர் குறித்து தெரியவில்லையாம். இதுவும் கூடிய சீக்கிரம் ஆராய்ச்சியின்மூலம் தெரிய வந்துவிடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com