வாலிஸ்னேரியா (Vallisneria) நீர் வாழ் தாவரத்தின் சிறப்பம்சம் மற்றும் மருத்துவ குணங்கள்!

Vallisneria
Vallisneria
Published on

தாவரத்தின் சிறப்பம்சங்கள்:

நீர்நிலைகள்: வாலிஸ்னேரியா நீர் மூழ்கிய தாவரமாகும். இது பொதுவாக குளங்கள், ஆறுகள், மற்றும் ஏரிகள் போன்ற நீர் சூழலில் வளர்கிறது.

இலைகள்: இலைகள் நீண்டும், இளநீலப் பச்சையும் அல்லது இளஞ்சிவப்பு நிறத்துடனும் இருக்கும். இவை 1 மீட்டர் நீளம் வரை வளரக்கூடும். இவைகள் சாய்ந்து நீரில் மிதக்கும்.

பூக்கள்: வாலிஸ்னேரியாவில் பாலின ரீதியாக வேறுபட்ட பூக்கள் இருக்கின்றன. ஆண் மலர் நீர் மூலமாக பெண் மலர் மீது சென்று கருவுறும்.

வேர்கள்: இதன் வேர்கள் பலமானதாக உள்ளன. நீரின் ஓட்டத்தில் பாதுகாப்பாக நெடுக நீரின் உள்ளே தாங்கி நிற்கின்றன.

பரிணாம வளர்ச்சி: இது தானாகவே அவயவ வழியாக (Vegetative propagation) அல்லது விதைகள் மூலம் இனப்பெருக்கம் செய்கிறது.

மெல்லிய, குறுகிய இலைகளை கொண்டிருப்பதற்கான காரணங்கள்:

ஹைட்ரோ டைனமிக்ஸ்: குறுகிய இலைகள் நீர் எதிர்ப்பை குறைக்கின்றன. மற்றும் நீர்வாழ் சூழலில் இழுக்கப்படுகின்றன. இந்த தழுவல் தாவரங்கள் நங்கூரமிடபடுவதற்கு உதவு கிறது. மற்றும் நீரோட்டங்கள், அலை நடவடிக்கைகளால் ஏற்படும் சேதத்தை குறைக்கிறது.

ஒளி பிடிப்பு: மெல்லிய இலைகள் நீருக்கடியில் உள்ள சூழலில் ஒளியை பிடிக்கும். நீளமான இலைகள் இருப்பதால் தாவரங்கள் சூரிய ஒளியை உறிஞ்சுவதற்கும், அவற்றின் பரப்பளவை அதிகரிக்கவும் அனுமதிக்கிறது.

ஊட்டச்சத்து பெறுதல்: குறுகலான இலைகள் தாவரங்களுக்கிடையில் ஒளி மற்றும் வளங்களுக்கு போட்டியை குறைக்கலாம்.

ஆக்ஸிஜன் பரிமாற்றம்: இலைகளின் அமைப்பு வாயு பரிமாற்றத்தை மேம்படுத்தும். மெல்லிய இலைகள் அவற்றின் அளவுடன் ஒப்பிடும் போது ஒரு பெரிய பரப்பளவை வளங்கு கின்றது. ஆக்ஸிஜன் மற்றும் கார்பன்டை ஆக்ஸைடு போன்ற வாயுக்களின் பரவலை மேம்படுத்துகின்றன.

நீரில் மூழ்குவதற்கு தழுவல்: இவற்றின் இலைகளின் பண்புகள் தாவரங்கள் உயிர் வாழவும், திறம்பட இனப்பெருக்கம் செய்யவும் உதவுகின்றன.

இதையும் படியுங்கள்:
Sapria Himalayana: இது பூ அல்ல, அதிசயம்! 
Vallisneria

வாலிஸ்னேரியாவின் மருத்துவ குணங்கள்:

தூக்கத்தை மேம்படுத்துதல்: அதிகரித்த மன அழுத்தத்தால் பாதிக்கப்படும் நபர்களுக்கு தூக்கத்தை தூண்ட உதவுகிறது. இது தூக்கமின்மை மற்றும் தூக்க குறைபாடுகளுக்கு இயற்கையான சிகிச்சையாக பயன்படுத்தப்படுகிறது.

மன அழுத்தத்தை குறைத்தல்: மன அழுத்தத்தை குறைக்கவும், அமைதியளிக்கவும், பயன் படுகிறது. பதட்டம் மற்றும் மனக்கவலைகளின் அறிகுறிகளை குறைக்க உதவுகிறது.

தசை வலிகளை சமாளித்தல்: தசைகள் மற்றும் நரம்புகளின் மீது அமைதி படுத்தும் தாக்கத்தை கொண்டுள்ளது. இதனால் தசைவலிகள், மற்றும் தசை அழுத்தங்கள் ஆகியவற்றை குறைக்க உதவுகிறது.

இதையும் படியுங்கள்:
பிண வாசனை கொண்ட பிண மலர் பற்றித் தெரியுமா?
Vallisneria

வாலிஸ்னேரியாவின் பயன்கள்:

நீரின் சுத்தம்: இது தண்ணீரில் உள்ள கழிவுகளை சீரான அளவில் தூய்மை செய்கிறது. இது நெசவு முடிச்சு போன்று விரிவாக வளர்ந்து நீரின் எச்சில் கழிவுகளை உறிஞ்சி நீரை சுத்தம் செய்கிறது.

மற்ற உயிரினங்களுக்கு வசிப்பிடம்: இத்தாவரம் மீன்கள் மற்றும் நீர் மூல உயிரினங் களுக்கு சிறந்த வாழிடமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கிறது. இதன் செடியின் அடியொட்டு பகுதி சிறிய மீன்களுக்கு உறைவிடமாக திகழ்கிறது.

நீருக்கு ஆக்ஸிஜன் வழங்குதல்: ஒளி சேர்க்கை மூலமாக நீரில் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கிறது. இது நீருக்குள் சுவாசிக்கிற உயிரினங்களுக்கு மிகவும் உதவியாக உள்ளது.

பசுமை அழகு: தண்ணீர் தொட்டிகளில் அல்லது அக்வாரி யங்களில் வாலிஸ்னேரியா ஒரு அழகிய பசுமையாக தோற்றம் அளிக்கிறது. இது நீர்நிலை களுக்கு இயற்கையான மற்றும் அழகிய தோற்றத்தை வழங்குகிறது.

தண்ணீரின் வெப்பநிலை: தண்ணீரின் வெப்பநிலையை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது. இதனால் வெப்பநிலை மாற்றங்களை தவிர்க்க உதவுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com