உணவு கிடைக்காமல் பசியால் அவதிப்படும் விலங்குகள்! இது நியாயமா?

Animals
Animals
Published on

பசி என்பது எல்லா உயிர்களுக்கும் வரும் ஒரு பொதுவான உணர்வு. அப்படி இருக்க, பசியிலே ஏங்கித் தவிக்கும் உயிரினங்கள் பற்றி உங்களுக்குத் தெரியுமா?

என்னென்ன உயிரினங்கள்? உலகம் முழுவதும் ஏராளமான விலங்கு இனங்கள் உணவு பற்றாக்குறையால் அவதிப்படுகின்றன. இவற்றில் மிகவும் பாதிப்புக்குள்ளானவையாக பனி கரடிகள்(polar bears), ஆப்பிரிக்க யானைகள், உராங்குட்டான்கள்(orangutans) என்ற குரங்கு இனம், தேனீக்கள், திமிங்கலங்கள் மற்றும் கடல் பறவைகள் போன்ற உயிரினங்கள் அடங்கும்.

இந்த விலங்குகள் இயற்கை சுழற்சிகளால் மட்டுமல்ல; மனிதனால் தூண்டப்பட்ட பல மாற்றங்களாலும் பாதிக்கப்பட்டிருக்கின்றன. இது அவற்றின் உணவு சங்கிலியிலும் (Food chain) பெரிதும் எதிரொலிக்கிறது.

எந்தெந்த வகையில் பாதிப்பு இருக்கிறது?

ஒவ்வொரு ஆண்டும் தொடக்கத்தில் ஆர்க்டிக் பனி (Arctic ice) உருகுவதால் பனி கரடிகள் பட்டினியை எதிர்கொள்கின்றன. இதனால் அவற்றின் முதன்மை இரையான சீல்களுக்கான (seals) வேட்டை தடைப்படுகிறது.

தென்கிழக்கு ஆசியாவில் உள்ள ஒராங்குட்டான்கள் (orangutans) என்ற குரங்கு இனம், பனை எண்ணெய் தோட்டங்கள் காரணமாக அவற்றுக்கு சிறிய அளவிலான பழ மரங்களே இறுதியில் உணவாக மிஞ்சுகின்றன.

பரந்த சவன்னாக்களில் (savannahs) சுற்றித்திரிந்த ஆப்பிரிக்க யானைகள் இப்போது அங்கு காணப்படும் வறட்சி காரணமாக ஆங்காங்கே இடம்பெயர்ந்து உணவு, தண்ணீரைக் கண்டுபிடிக்கப் போராடுகின்றன.

இதையும் படியுங்கள்:
வசீகர அம்சங்களுடன்... தூள் கிளப்பும் புதிய மாடல் கார்கள்...
Animals

அத்தியாவசிய மகரந்த சேர்க்கையாளர்களான(pollinators) தேனீக்கள் பூச்சிக்கொல்லி பயன்பாடு, ஒற்றை வளர்ப்பு விவசாயம் (monoculture farming) காரணமாகக் குறைந்து வருகின்றன. இது அவற்றைச் சார்ந்து பூக்கும் தாவரங்களின் வகையையும் கட்டுப்படுத்துகிறது.

கடலில் உள்ள திமிங்கலங்கள், கடல் பறவைகள் அதிகப்படியான மீன்பிடித்தல், சுருக்கு மீன்பிடி வலையால் அவற்றிற்கு ஏற்படும் பாதிப்பு, பிளாஸ்டிக் போன்ற பிரச்னைகளால் அவற்றின் வாழ்விடம் பாதிப்படைந்து உணவு தேவையை அதிகரிக்கின்றன.

எதனால் இது நிகழ்கிறது? இந்த நெருக்கடிகள் காலநிலை மாற்றம், காடழிப்பு, மாசுபாடு, தவறான முறையில் செய்யப்படும் விவசாயம் ஆகியவற்றின் கலவையால் உருவாகின்றன.

மனிதர்கள் நகர்ப்புறங்கள், தொழில்துறை என்று தங்கள் வாழ்வாதாரத்தை விரிவுபடுத்தும்போது இயற்கை வாழ்விடங்கள் சுருங்குகின்றன. இதன் காரணமாக உணவு சங்கிலிகளும்(FOOD CHAINS) குறைகின்றன.

மனிதனால் இதைக் கட்டுப்படுத்த முடியுமா?

மனிதர்கள் அனைவராலும் கொண்டுவரப்பட்ட ஓர் ஒன்றுபட்ட தீர்வால் இந்தப் போக்கை பழைய நிலைமைக்கு மாற்றியமைக்க முடியும். காடு வளர்ப்பு (reforestation), பூச்சிக்கொல்லி பயன்பாட்டை ஒழுங்குபடுத்துதல், நிலையான மீன்பிடி விதிமுறைகளை அமல்படுத்துதல், பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தைக் குறைத்தல் (reducing greenhouse gas emissions) ஆகியவற்றின் மூலம் வாழ்விடங்களை பாதுகாக்கலாம்.

இந்த உலகம் அனைவருக்கும் சமம் என்ற மனநிலைக்கு அனைவரும் வரும்போது இழந்த சுற்றுச்சூழலை மீண்டும் மீட்டெடுக்க முடியும். இப்போது கஷ்டப்படும் வனவிலங்குகளுக்கான உணவு ஆதாரங்களையும் மீண்டும் உருவாக்க உதவும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com