
நமது முன்னோர்கள் அதிகம் பயன்படுத்திய மரங்களில் ஒன்றுதான் இந்த கருங்காலி மரம். இதை அபூர்வமான மரம் என்று கூறுவார்கள். இந்த மரத்தின் ஆற்றலானது இந்த மரத்தைச் சுற்றி ஒரு கிலோமீட்டர் இருக்குமாம். அவ்வளவு சக்தி வாய்ந்த மரம்.
மின்காந்த ஆற்றல் சேமிக்கும் ஆற்றல் இந்த மரத்திற்கு அதிகம் இருக்கிறது. இதன் காரணமாகத்தான் இந்து மதங்களில் குடமுழுக்கில் இந்த மரத்தின் குச்சிகளை போடுகின்றார்கள்
மேலும் இந்த மரத்திற்கு எதிர்மறை ஆற்றல்களை அழிக்கும் சக்தி உள்ளது. இதன் காரணமாகத்தான் இந்த மரத்தில் செய்யப்பட்ட சிற்பங்களை வீட்டில் வைத்திருப்பார்கள. அந்தக் காலத்தில் பெரிய பணக்காரர்கள் கருங்காலி மரத்தால் செய்யப்பட்ட வாக்கிங் ஸ்டிக் வைத்திருந்தனர்.
சிலர் கெட்ட ஆத்மாக்கள் இருப்பதாக நம்புகிறார்கள். அதை விரட்ட இந்த கருங்காலி மரத்தை பயன்படுத்துவார்களாம்.
அந்தக் காலத்தில் நம் முன்னோர்கள் கருங்காலி மரத்தால் செய்யப்பட்ட உலக்கையைப் பயன்படுத்தி நெல்குத்தி அரிசியை எடுத்து சமைப்பார்களாம். இதற்குக் காரணம் அந்த மரத்தின் வீரிய குணம் மற்றும் மூலிகைத்தன்மை அரிசியுடன் சேரும். அந்த அரிசியை உண்பதால் வியாதிகள் அண்டாது.
மரப்பாச்சி பொம்மைகள் இந்த கருங்காலி மரத்தை பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது.
இந்த கருங்காலி மரம் செவ்வாய் கிரகத்தின் உள்ள நற்குணங்களைப் பெற்றது என்று சொல்லப்படுகிறது.
குறிப்பாக இந்த மரத்தின் அடியில் அமர்ந்திருப்பது உடலுக்கு மிக நல்லது.
இந்த மரத்தின் வேர் பட்டை பூ கோந்து அல்லது பிசின் மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. இந்தப் பிசினை காயவைத்துப் பொடி செய்து பாலுடன் கலந்து அருந்த கரப்பான் நோய் தீரும்.
கருங்காலி கட்டையை தண்ணீரில் ஊறவைத்தால் அந்நீரின் நிறம் மாறும். அந்த நீரைக்கொண்டு குளித்தால் அனைத்து வலிகளும் தீரும்.
கருங்காலி மரப்பட்டை ஓரு பங்கு ஏடுத்து அதில் 8 பங்கு நீர் சேர்த்துக் காய்ச்சி அதனுடன் கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் சேர்த்து காய்ச்சி வடிகட்டி குடிநீராக அருந்த சுவாச நோய்கள் அகலும், இரத்தம் சுத்தமாகும்.
கருங்காலிப்பட்டை, வேப்பம் பட்டை, மற்றும் நாவல் பட்டை இம்மூன்றையும் ஒரு எடை அளவு எடுத்து இடித்துப் பொடியாக்கி புண்களின் மீது தடவ அவை குணமாகும்.
கருங்காலி மாலை அணிவதால் நோயெதிர்ப்பு அதிகரிக்கும். மேலும் நேர்மறை ஆற்றல்கள் அதிகமாகும்.