Armored catfish: பாலைவனத்திலும் வாழும் அபூர்வ மீன்!

Armored catfish
Armored catfish
Published on

மீன்கள் என்றாலே தண்ணீரில்தானே வாழும், அது எப்படி தரையில் வாழும்? அதுவும் பாலைவனத்தில்? என்று தோன்றுகிறதா? ஆம்! மனிதர்களே நீர் இல்லாமல் வாழ முடியாத பாலைவனப்பகுதியில் ஒரு மீன், ஒரு நீர்த்தேக்கத்திலிருந்து பயணம் செய்து இன்னொரு நீர்த்தேக்கத்திற்குச் செல்லும் இடைவெளியில் வாழ்கிறது என்றால் ஆச்சர்யம்தானே. வாருங்கள்! அது எப்படியெல்லாம் தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள போராடுகிறது என்பதைப் பார்ப்போம்.

ஒருமுறை ப்ரேசிலில் உள்ள Lencois Maranhenses என்றப் பாலைவனத்தில் ஒரு உயிரினம் ஊர்ந்து போனத் தடயத்தை இரண்டு மீனவர்கள் கவனித்திருக்கிறார்கள். சுற்றிலும் பார்க்கையில் எந்தவித உயிரினமும் இருந்ததற்கான அறிகுறிகளே இல்லை. அதன்பின்னர் மீன் பிடிக்கும்போதுதான் அந்தத் தடயம் யாருடையது என்று  கண்டுபிடிக்கப்பட்டது.

பாலைவனங்களின் அருகே உள்ள கடல் போன்ற நீர்த்தேக்கங்களில் வாழும் இந்த மீன்கள், அதிக வறட்சியினால் நீர் வற்றியவுடன் வேறு நீர்த்தேக்கத்தைத் தேடிச் செல்கிறது. அப்படி போகும்போது தனது வயிற்றை வைத்து உடம்பை முன் தள்ளி ஊர்ந்துச் செல்கிறது.

Armored Fish தன்னை தற்காத்துக்கொள்ள Mucous என்ற ஒன்று அதன் தோலின் மேல் சுரக்கிறது. அதுவே இந்த மீன் நிலப்பரப்பில் உயிர்வாழ உதவி செய்கிறது. ஆம்! இந்த Mucous காற்றில் இருக்கும் ஈரப்பதத்தை உறிஞ்சும் தன்மைக்கொண்டது. ஆகையால் இந்த மீனுக்கு ஈரப்பதம் கிடைத்துக்கொண்டே இருக்கிறது. அதேபோல் வெப்பநிலையில் இருந்தும் தன்னை தற்காத்துக்கொள்ளும்.

அவ்வப்போது ஈரப்பதம் கொண்ட அந்த மீனின் உடலின் மேல் வெப்பம் படும்போது நீராவியை வெளியே விடும். வெயில் காலங்களில் நீர் வற்றும் வரை ஒரு இடத்தில் வாழும் இந்த மீன்கள் வற்றியப்பின் நீரைத் தேடி செல்லும். மேலும் இதற்கு நீர் இருக்கும் இடத்தை உணர்வதற்கான ஆற்றலும் உள்ளதால், எந்தப் பக்கம் சென்றால் எளிதாக நீர்த்தேக்கத்தை அடைய முடியும் என்பதைத் தெரிந்து வைத்திருக்கும்.

இதையும் படியுங்கள்:
பூமிப் பிளவில் பிறக்கும் ஆறாவது சமுத்திரம்? விஞ்ஞானிகள் கூறுவது என்ன?
Armored catfish

இப்படி ஊர்ந்தே கஷ்டப்பட்டுச் செல்லும் இந்த மீன், நீரை அடைந்தவுடன் துள்ளிக் குதித்து சென்று நீரில் போய்விடும். அப்போது எதோ தனது பறிக்கப்பட்ட சுதந்திரம் மீண்டும் கிடைத்துவிட்டதாக எண்ணி ஆனந்தம் கொள்ளும்.

Lungfish குடும்பத்தைச் சேர்ந்த Armored catfish மீன் இடத்திற்கு ஏற்றவாரு தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதைப் புரிந்து வாழ்கிறது என்றே கூற வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com