தென்னாப்பிரிக்காவின் தென்கிழக்கு பகுதியில் ஒரு பெரிய விரிசல் ஏற்பட்டுள்ளது. இது கண்டத்தை இரண்டு பகுதிகளாகப் பிரிக்கும் விரிசல் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வரும் விஞ்ஞானிகள் சில சுவாரசியமானத் தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
பல மில்லியன் வருடங்களுக்கு முன்னர் டெக்டானிக் தட்டுகளின் இயக்கத்தில்தான் ( கண்டத்தட்டு ) பூமியின் மேற்பரப்பு உருவானதாகக் கூறப்படுகிறது. கடினமானப் பாறைகளின் அடுக்குகள் Lithosphere ஐ உருவாக்குகிறது. சில ஆற்றல்கள் மூலம் இந்த லிதோஸ்பியர் செயல்பட்டு, பூமியை இயல்பாகச் சுழலவைக்கிறது. அந்தவகையில்தான் ஆராய்ச்சியாளர்கள் தென்னாப்பிரிக்காவின் தென்கிழக்கு பகுதியில் ஒரு பிரம்மாண்ட பிளவு ஏற்பட்டிருப்பதை கவனித்திருக்கிறார்கள்.
இது கண்டத்தை இரண்டு பகுதிளாகப் பிரிக்கப்போகும் பெரிய பிளவு என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுப்பிடித்துள்ளனர். அதே நேரத்தில் அந்த இடத்தில் ஒரு சமுத்திரம் உருவாகவுள்ளது என்றும் ஆராய்ச்சியின் மூலம் தெரியவந்துள்ளது. ஆகையால், பூமியில் ஏற்கனவே ஐந்து சமுத்திரங்கள் இருக்கும் நிலையில் விரைவில் ஆறாவது சமுத்திரம் உருவாகவுள்ளதாகக் கூறியுள்ளனர்.
East African Rift என்றழைக்கப்படும் கிழக்கு ஆப்பிரிக்காவின் பிளவு அமைப்பு கடந்த 2005ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் இந்தப் பகுதி சுமார் 22 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னரே தோன்றியதாக 'தி எர்த்' அறிக்கை வெளியிட்டது. East African Rift எப்படி உருவானது என்றால் கிழக்கின் சோமாலி தட்டு மற்றும் மேற்கின் நியூபின் தட்டு ஆகிய இரண்டு டெக்டானிக் தட்டுகள் இரண்டாகப் பிரிய ஆரம்பித்தப்பின் தான் இந்தப் பிளவு ஏற்பட ஆரம்பித்திருக்கிறது. இந்தப் பிளவு ஆண்டுக்கு 0.7மிமீ வேகத்தில் பிரிந்து வருவதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதேபோல்தான் பல மில்லியன் வருடங்களுக்கு முன் தென் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா கண்டங்கள் பிரிந்தது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
ஒருவேளை கிழக்கு ஆப்பிரிக்கா பிளவுப்பட்டால், எத்தியோப்பியா மற்றும் உகாண்டா ஆகியவைதான் பெருங்கடலின் இரு கரைகளாக விளங்கும் என்றும் கூறுகின்றனர்.
மேலும் இதுகுறித்து கடல் புவி இயற்பியலாளர் கென் மெக் டொனால்ட் கூறியதாவது, “ Aden Gulf மற்றும் Red sea ஆகிய பகுதிகளில் பெரியளவில் வெள்ளப்பெருக்கு ஏற்படும். பின் அந்த வெள்ளம் கிழக்கு ஆப்பிரிக்கா பிளவிடத்திலும் ஏற்பட்டு ஒரு தனி சமுத்திரமாக உருவாகும். அதன்பின் கிழக்கு ஆப்பிரிக்கா நிரந்தமாக ஒரு தனி கண்டமாக மாறிவிடும். “ என்று கூறினார்.