செல்லும் இடமெல்லாம் மரணத்தை கொண்டு செல்லும் எறும்புகள்! 

Army Ants
Ants that carry death wherever they go!
Published on

தன் வழியில் வரும் எல்லா ஜீவராசிகளையும் கொலை செய்யும் எறும்பு இனம் பற்றி உங்களுக்குத் தெரியுமா? அவைதான் ராணுவ எறும்புகள். இந்த எறும்புகள் பெரும்பாலும் தென் அமெரிக்கா மற்றும் மத்திய அமெரிக்காவின் வெப்பமண்டல காடுகளில் காணப்படுகின்றன. இவை சமூக அதாவது ஒரு குழுவாகவே எப்போதும் வாழும். இந்த குழுவில் ராணி எறும்பு ஆண் எறும்புகள் தொழிலாளி எறும்புகள் என பல்வேறு வகையான எறும்புகள் இருக்கும். 

ராணி எறும்புதான் குழுவின் தலைவி. இது முட்டையிட்டு புதிய இரும்புகளை உருவாக்கும். எறும்புகள் இனப்பெருக்கத்திற்காக மட்டுமே பயன்படுகின்றன. தொழிலாளி எறும்புகள்தான் உணவு தேடுவது கூடு கட்டுவது இளம் எறும்புகளை பராமரிப்பது போன்ற அனைத்து வேலைகளையும் செய்யும். 

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும், ஆவணப் படங்களிலும் ராணுவ எறும்புகள் குறித்த காட்சிகளை நீங்கள் பார்த்திருப்பீர்கள். மில்லியன் கணக்கான எறும்புகள் ஒன்று சேர்ந்து, தங்கள் பாதையில் வரும் எந்த உயிரினத்தையும் அழித்த பின்னர், வேறு இடத்திற்கு நகர்ந்து செல்லும் அந்த காட்சிகள் உண்மையிலேயே நம்மை ஆச்சரியப்படுத்தும். அந்த அளவுக்கு, தான் செல்லும் இடலமெல்லாம் மரணத்தை இந்த எறும்புகள் கொண்டு செல்கின்றன.‌ 

ராணுவ எறும்புகள் தங்கள் வாழ்நாளில் பெரும்பாலான நேரத்தை உணவு தேடுவதிலேயே செலவிடுகின்றன. இவை வேகமாக நகரக்கூடியவை. ஒரு நாளைக்கு பல கிலோமீட்டர் தூரம் பயணிக்கும். இவற்றின் பாதையில் வரும் எந்த உயிரினத்தையும் தாக்கி மிருகத்தனமாக கொன்று உண்ணும். இவற்றின் பின்புறத்தில் இருக்கும் கொடுக்கு மூலமாக கொட்டப்படுவது மிகவும் மோசமாக இருக்கும். சில இனங்கள் மனிதர்களையும் கொல்லும் திறன் கொண்டவை. ராணுவ எறும்புகள் தங்கள் உணவை குழுவாகவே பகிர்ந்து உண்ணும். 

இந்த எறும்புகள் பல சிறப்பான திறன்களைக் கொண்டுள்ளன. மில்லியன் கணக்கான எறும்புகள் ஒரே நேரத்தில் ஒரே திசையில் நகர்ந்து, ஒருங்கிணைப்புடன் செயல்படும். எறும்புகள் ஒன்றுக்கொன்று தகவல்களைப் பரிமாறிக்கொள்ள பல்வேறு வழிகளைப் பயன்படுத்துகின்றன. இவற்றின் உடல் மிகவும் வலுவானது என்பதால், தங்களது எடையை விட பல மடங்கு இவற்றால் தூக்க முடியும். 

இதையும் படியுங்கள்:
உலகில் மிக அதிக மழைப்பொழிவு பெரும் 6 இடங்கள் நமக்கு உணர்த்துவது என்னனு பார்ப்போமா?
Army Ants

இவை தன் வழியில் வரும் எல்லா இறந்த உயிரினங்களையும் உண்டு சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்திருப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆனால், அதிக அளவில் ராணுவ எறும்புகள் இருப்பது மற்ற உயிரினங்களின் எண்ணிக்கையை கணிசமாகக் குறைத்து சுற்றுச்சூழல் சமநிலையை பாதிக்கும் வாய்ப்புள்ளது. 

ராணுவ எறும்புகள் தங்களின் தனித்துவமான திறன் மற்றும் பயமுறுத்தும் நடத்தகளால் நம்மை ஆச்சரியப்படுத்தும் ஒரு அற்புதமான உயிரினம். இவற்றைப் பற்றி நாம் மேலும் அறிவதன் மூலம், இயற்கையின் அற்புதங்களை நாம் நன்கு புரிந்துகொள்ளலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com