அதிக மழைப்பொழிவு என்பது உலகின் சில பகுதிகளில் நிகழும் ஓர் அன்றாட விஷயம் என்று சொன்னால், நமக்கு பொறாமை சற்றே எட்டிப் பார்க்கும்தானே? இதனால் இங்கு வசிக்கும் மக்களும் அதற்கேற்ற ஒரு தனித்துவமான வாழ்க்கை வாழ்கின்றனர் என்பது சுவாரஸ்யம்! அப்படி கடுமையான மழைப்பொழிவு நிகழும் உலகின் ஆறு இடங்களும் மற்றும் அந்த சூழலில் மனிதர்கள் எவ்வாறு வாழ்கிறார்கள் என்பதை பற்றியும் தெரிந்துகொள்வோம்.
1. மவ்சின்ராம் (Mawsynram), இந்தியா:
இந்தியாவின் மேகாலயா மாநிலத்தில் அமைந்துள்ள மவ்சின்ராம், ஆண்டுக்கு 11,871 மிமீ (467 அங்குலம்) மழையைப் பெற்று, அதிக சராசரியைக் கொண்ட மழை பொழிவுக்கான புகழைப் பெற்றுள்ளது. இப்பகுதியில் வசிக்கும் காசி பழங்குடியினர், வெள்ளத்தைத் தடுக்க தரைமட்டத்திலிருந்து உயர்த்தப்பட்ட வீடுகளைக்(stilt houses) கட்டி, பாரம்பரிய மழைநீர் சேகரிப்பு நுட்பங்களைப் பயன்படுத்தி நீர் ஆதாரங்களைத் திறம்பட நிர்வகிக்கின்றனர்.
2. சிரபுஞ்சி (Cherrapunji), இந்தியா:
மவ்சின்ராமுக்கு அருகாமையில், சிரபுஞ்சியில் அதிக மழைப்பொழிவை காண முடியும். சராசரியாக ஆண்டுக்கு 11,777 மிமீ (464 அங்குலம்) மழைப்பொழிவைப் பெறுகிறது. உள்ளூர்வாசிகள் ரப்பர் மரங்களின் வேர்களில் இருந்து உருவாக்கப்பட்ட தனித்துவமான ‘வேர்’ பாலங்களை(Root Bridges) உருவாக்கியுள்ளனர், அவை கடுமையான மழை மற்றும் வெள்ளம் சூழ்ந்த நேரங்களில், ஆறுகள் மற்றும் ஓடைகள் வழியாக கடந்து செல்ல ஒரு பாதுகாப்பான பாதையாக அமைகின்றன.
3. டுடுனெண்டோ(Tutunendo), கொலம்பியா:
கொலம்பியாவில் உள்ள சிறிய நகரமான டுடுனெண்டோ, ஆண்டுதோறும் 11,770 மிமீ (463 அங்குலம்) மழையைப் பெறுகிறது. ஈரமான நிலைமைகளைச் சமாளிக்க, அங்கு வசிக்கும் சமூகங்கள் நன்கு கட்டப்பட்ட வடிகால் அமைப்புகள் மற்றும் உயரமான வீடுகளையே நம்பியுள்ளன. அங்குள்ள ஈரமான காலநிலைக்கு ஏற்ப, வாழை மற்றும் கோகோ போன்ற வகைகளை பயிரிடுகின்றனர்.
4. சான் அன்டோனியோ டி யுரேகா (San Antonio de Ureca), எக்குவடோரியல் கினியா:
ஈக்வடோரியல் கினியாவில் உள்ள இந்த கிராமத்தில் ஒவ்வொரு ஆண்டும் 10,450 மிமீ (418 அங்குலம்) மழை பெய்யும். குடியிருப்பாளர்கள் மழைநீரை விரைவாக வெளியேற்றுவதற்கு செங்குத்தான கூரையுடன் கூடிய வீடுகளை உருவாக்கி, அதில் ஈரப்பதத்தை எதிர்க்கும் உள்ளூர் பொருட்களைப் பயன்படுத்துகின்றனர். இதன்மூலம் வீட்டினுள் நீர் புகாமல் பார்த்துக்கொள்கின்றனர். கனமழை பெய்தாலும் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அந்தப் பகுதிக்கு ஏற்றார்போல் நிலையான விவசாய நுட்பங்களையும் கடைப்பிடிக்கின்றனர்.
5. Debundscha, கேமரூன்:
கேமரூன் மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள Debundscha, ஆண்டுதோறும் சுமார் 10,299 mm (405 inches) மழையைப் பெறுகிறது. கடும் மழையைத் தாங்கும் வகையில், நன்கு பராமரிக்கப்பட்ட சாலைகள் மற்றும் பாலங்கள் உள்ளிட்ட வலுவான உள்கட்டமைப்பு அங்கு உள்ளது. கூடுதலாக, வீடு மற்றும் விவசாய பயன்பாட்டிற்கான நீர் விநியோகத்தை நிர்வகிக்க, மழைநீர் சேகரிப்பு அமைப்புகளையும் பயன்படுத்துகின்றனர்.
6. குய்ப்டோ(Quibdo), கொலம்பியா:
கொலம்பியாவில் உள்ள choco துறையின் தலைநகரான Quibdo, ஒவ்வொரு ஆண்டும் 7,328 mm (289 inches) மழையைப் பெறுகிறது. வெள்ளத்தைத் தடுக்க நகரம் முழுக்க விரிவான வடிகால் அமைப்புகளை நிறுவியுள்ளனர். உயரும் நீர் மட்டத்திலிருந்து பாதுகாத்துக்கொள்ள ஸ்டில்ட்களில்(stilts) வீடுகளைப் பயன்படுத்துகின்றனர். மீன்பிடி தொழிலில்தான் அவர்களின் உள்ளூர் பொருளாதாரமே செழிக்கிறது.
அதிக மழைப்பொழிவுகளால் ஏற்படும் சவால்கள் இருந்தபோதிலும், விவசாயம் மற்றும் வாழ்வாதாரத்தை ஆதரிக்கும் வளமான இயற்கை வளங்கள் மற்றும் வளமான நிலங்கள் சூழ்ந்துள்ளதால் மக்கள் தொடர்ந்து இப்பகுதிகளில் வாழ்கின்றனர்.
கூடுதலாக, இந்தப் பகுதிகள் வலுவான கலாச்சார மற்றும் வரலாற்று உறவுகளைக் காலம் காலமாய் கொண்டுள்ள சமூகங்கள் தங்கள் மரபுகள் மற்றும் வாழ்க்கை முறைகளில் ஆழமாக வேரூன்றியுள்ளன. சுற்றுச்சூழலை நிர்வகிப்பதற்கான புதுமையான தீர்வுகளாலும், அங்கு குடியிருப்போரின் அசாத்திய தன்னம்பிக்கைக் காரணமாகவும், அவர்களால் இத்தகைய கடுமையான நிலைமைகளுக்கு மத்தியிலும் வாழ முடிகிறது.